There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

பூவிலங்கு

Apr 30, 2016

வணக்கம். ப்ளாக் பண்ணி ரொம்ப நாளாச்சு. கிட்டதட்ட ஒரு வருஷம். இந்த ஒரு வருஷத்துல என்ன செஞ்சேன்னு பார்த்தா ஒன்னும் செய்யல :-) ஆனா, ஏகப்பட்ட மாற்றங்கள். பணி உட்பட. தலைமைச் செயலகத்துல சேர்ந்து 10 மாசமாகுது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் (மொழிபெயர்ப்பு) துறை. வங்கிப் பணிக்கு முழுக்கு போட்டது தான் என் வாழ்க்கையிலேயே நான் செஞ்ச ஆகப் பெரிய நல்ல காரியம் :-) அவ்ளோ வேலைப் பளு :’( இப்போ செம ஜாலி. அதனால இன்னும் வெயிட் போட்டுட்டேன் :P

கடமைகள் அப்படியே தான் இருக்கு. சில காரணங்களால கொஞ்ச நாளைக்குப் படிப்புக்கு லீவ் விட்டுட்டேன். சும்மா இருக்குற நேரத்துல பழைய பதிவுகளை எல்லாம் எடுத்துப் படிச்சுப் பார்ப்பேன். சில சமயம், ‘ச்சே.. நாம மறுபடியும் எழுதணும். சீக்கிரமா ஒரு போஸ்ட் போடணும்’னு தோணும். பல சமயம் என் பழைய எழுத்துகளைப் படிக்கும் போதே ‘ஒட்டுமொத்தமா இந்த ப்ளாகை டெலீட் பண்ணிட்டு ஓடிரலாமா’னு தோணும். அவ்ளோ மொக்கை.. இருந்தாலும் பரவால்ல. காசா பணமா? எழுதுவோம். அதுக்கு மேல இதைப் படிக்கிறவங்க தான் ஃபீல் பண்ணணும். :D

இந்த ஒரு வருஷத்துல நிறைய புக்ஸ் படிச்சேன். மூவீஸ் பார்த்தேன். அபியோட நிறைய ஷாப்பிங் போனேன். ஊர் சுத்துனேன். இஷ்டத்துக்கு சாப்பிட்டேன் :P இதையெல்லாம் மனசுல எந்தவிதக் குற்றவுணர்ச்சியும் இல்லாம செஞ்சது தான் முக்கியமான விஷயம்.

நாம உண்மையிலேயே என்ன பண்ணிட்டு இருக்கோம்னு தெரிஞ்சிக்கிறதுக்கு அப்பப்போ ஒரு ப்ரேக் கண்டிப்பா தேவைப்படுது. அது எவ்ளோ காலத்துக்கும் இருக்கலாம். ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது முழுவாண்டு பரீட்சை லீவ், செமஸ்டர் லீவ், ஸ்டடி லீவ்னு நிறைய விடுமுறைகள் கிடைக்கும். ஆனா வேலைக்குப் போனதுக்கப்புறம் அப்படியில்லையே. அதனால, லாஸ் ஆஃப் பே ஆனா கூட பரவால்லனு லீவ் எடுத்துட்டு ப்ரேக்ஸ் எடுக்குறது தான் புத்திசாலித்தனம். எல்லாருக்கும் கமிட்மெண்ட்ஸ் இருக்கத் தான் செய்யும். அதெல்லாம் எப்பவுமே இருந்துட்டுத் தான் இருக்கும். அதெல்லாம் பார்த்தா வேலைக்கு ஆகாது.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நிறைய பேர் ஃபேஸ்புக்ல பார்த்திருப்பீங்க. இல்லனா இப்போ தெரிஞ்சிக்கோங்க.. மிஸ். சுபத்ரா இன்னும் கொஞ்ச நாள்ல மிஸஸ். சுபத்ரா ஆகப் போறேன். ஆமா, கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டிருக்கேன் L கல்யாணம் ஜூன் 9 @ திருநெல்வேலி. அனைவரும் வருக..



கொஞ்ச பேரைத் தவிர என் தோழிகள் அனைவருக்கும் கல்யாணம் ஆயாச்சு. குஜராத்ல இருந்ததாலயும் படிச்சிட்டு இருந்ததாலயும் சித்ரா கல்யாணத்தைத் தவிர வேற யாரோட கல்யாணத்துக்கும் போக முடியல. அதனால என் கல்யாணத்துக்கு மட்டும் எல்லாரும் வருவீங்கனு நினைக்கிறது ஓவர் தான். அட்லீஸ்ட் திருநெல்வேலில இருக்குற நண்பர்கள் கண்டிப்பா வருவீங்கனு நம்புறேன் :-) நன்றி.

இனிமே ப்ளாக்ல ரெகுலர் பதிவுகள் வரும்னு நினைக்கிறேன். ஏதாவது உருப்படியா... அதுவும் உங்க தலவிதியைப் பொருத்தது... :-) டாடா பை <3

Read More...