There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

மௌனக் கவி!!

Nov 30, 2010

என் ப்ரிய தோழி ’சித்ரா’வின் அம்மா திருமதி.சுஜாதா (அவர்கள் கூட எனக்குத் தோழி தான்) தான் பத்தாம் வகுப்பு படிக்கையில் எழுதிய கவிதை :-)

இங்கு தான் முதலில் மேடையேறுகிறது ;-) படித்துவிட்டுக் கண்டிப்பாகக் கருத்துகளைக் கூறுங்கள் :-)


யிலதன் நடனம் மாரியிற் கண்டேன்!
மாங்குயில் கீதம் மாலையிற் கேட்டேன்!
மிதந்திடும் நாவாய் கடலினிற் கண்டேன்!
மீட்டிநல் இசையினை வீணையிற் கேட்டேன்!
முக்கனிச் சாற்றினில் நற்சுவை கண்டேன்!
மூதாட்டிச் சொல்லினில் அனுபவம் கேட்டேன்!
மென்மை என்பதை மலர்களிற் கண்டேன்!
மேகநிற அழகினிற் கண்ணனைக் கண்டேன்!
மைநிற விழிகளில் மானினம் கண்டேன்!
மொட்டு மலர்களில் யௌவனம் கண்டேன்!
மோகனம் என்பதை நற்காதலிற் கண்டேன்!
மௌனமாய் என்மனம் கவியாகக் கண்டேன்!

நன்றி சுஜா ஆன்டி!
*
Read More...

டேபிள் ரோஸ்

Nov 27, 2010

டிஸ்கி: பிசியா இருக்குறவங்க, மொக்கைப் பதிவு படிக்காதவங்க....சாரி பிடிக்காதவங்க யாரும் இதப் படிக்கவும் வேண்டாம். படிச்சதுக்கு அப்புறம் என்னைத் திட்டவும் வேண்டாம். அப்படியே போயிருங்க :-) Others may go ahead :-)

இதுவும் டார்ட்டாய்ஸ் தான். பொதுவாவே ‘பூ’ன்னாலே பெண்களுக்குப் ரொம்பப் பிடிக்கும். அதுவும் சின்ன பெண்களுக்கு? கேட்கவே வேண்டாம். பாய்கட் பண்ணியிருந்தாலோ பாப்கட் பண்ணியிருந்தாலோ கூட வச்சுவிட சொல்லி அடம்பிடிக்கும். நானும் அப்படித்தான் இருந்தேன் :-)
இப்பவும் அப்படித்தான் இருக்கேன் :-) 

மல்லிகை, பிச்சி, முல்லை, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ, செவ்வந்தி(மஞ்சள், வெள்ளை) தலையில் வைத்துக்கொள்ளப்படும் பொதுவான பூக்கள் இவை. மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் மூன்றும் சாதாரணமாகக் கிடைக்கக் கூடியவை(அந்த வயதில்). சனிக்கிழமை கலர்டிரஸ்-னாலே அம்மா வச்சு விடுவாங்க. என் தோழிகள் எல்லாருமே அப்படித்தான். சில பேர் கலர் கலரா டிரஸ்-கு மேட்சிங்கா டிசம்பர் பூ வச்சிட்டு வருவாங்க.

அப்போ எங்க வீட்டுல ரோஜாச்செடி கிடையாது. ஆனா என் தோழிகள் வச்சிட்டு வர்ற ரோஜாப் பூக்களைப் பார்த்து ரொம்ப ஆசையா இருக்கும். அம்மா கிட்ட கேட்கவும் மாட்டேன். ரோஜாச் செடியை மாதிரியே குட்டியாச் சின்னதா அழகா இன்னொரு பூ இருக்கும். அது ‘டேபிள் ரோஸ்’. ‘பட்டன் ரோஸ்’னும் சொல்வாங்களோ?? அம்மா...எனக்குக் கொள்ளை ஆசை. அதுலயே நிறைய வெரைட்டி உண்டு. ஒரே இதழ் வரிசையில் இருக்குற மாதிரி ஒரு வெரைட்டி உண்டு. ஆனா எனக்குப் பிடிச்சது உண்மையான ரோஜா மாதிரியே அடுக்காக அழகாக இருக்கும் அந்த வெரைட்டி தான் :-) வெள்ளை, பிங்க், மஞ்சள்-னு விதவிதமா இருக்கும். எது கிடைச்சாலும் ஓ.கே. தான். 

இந்த டேபிள் ரோஸ் கடையில் கிடைக்காது. எப்போ எங்க கிடைக்கும்னும் சொல்ல முடியாது. திடீர்னு என் தம்பி கொத்தாகப் பறிச்சிட்டு வருவான். ஐய்யோ.. அதப் பார்க்குறதுக்கு அவ்வளவு அழகாக இருக்கும். அதுல ஒரே ஒரு வருத்தம் என்னன்னா டேபிள் ரோஸ்-அ தலையில் வச்சிக்க முடியாது. பார்க்கிறவங்க சிரிப்பாங்களாம். அதனால கையிலயே வச்சிப் பார்த்துட்டு இருப்போம். சீக்கிரம் வாடி வேறப் போயிரும். வாடினதுக்கு அப்புறம் அதைக் கையில தேய்ச்சு ரோஸ் கலர் பூவை உதட்டுல கொஞ்சம் லிப்ஸ்டிக் மாதிரி தேய்ச்சு விளையாடுவோம். அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அப்புறம் வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட கிடைக்கிற அடி வேற விஷயம் :-)

எல்.கே.ஜி யில் இருந்து 6-ம் வகுப்பு வரை நான் படிச்சது புனித காணிக்கை அன்னை மெட்ரிகுலேசன் பள்ளி (Presentation Convent Matriculation School, Udaiyarpatti) அப்பெல்லாம் ஸ்கூல்ல மத்தியானம் லன்ச் இடைவேளையில நிறைய நேரம் இருக்குற மாதிரி தோனும். சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் நான் மட்டும் தனியா காம்பவுண்ட் சுவர் பக்கத்துல இருக்குற காடு மாதிரி புதர் மண்டி கிடக்குற ஒரு இடத்துக்குப் போவேன். அங்க ஒரு பள்ளத்துல டேபிள் ரோஸ் பூத்திருக்கும். அது எனக்கு மட்டும் தான் தெரியும் :-) அதைப் பறிச்சிட்டு வகுப்புக்கு வந்து யார் என்கிட்ட சண்டை போடாம க்ளோஸ் ஃபிரெண்டா இருக்காங்களோ அவங்களுக்குக் கொடுப்பேன் :-)

இப்ப ஏன் ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்லாத இந்த மொக்கைக் கதையைச் சொல்லிட்டு இருக்க-னு கேக்குறீங்களா?? எனக்கு ’ரோஜா’னு ஊர்-ல ஒரு தோழி உண்டு. அவளும் என்னை மாதிரியே ஒரு டேபிள்ரோஸ் ரசிகை. அவள் பேரைக் கேட்டாலே எனக்கு டேபிள் ரோஸ் நியாபகம் வந்திரும். சின்ன வயசுல ஒன்னா விளையாடிட்டு வீட்டுப் பாடம் செஞ்சிட்டு டிவி-ல படம் பார்த்துட்டு ஒன்னாவே இருந்தோம். அப்புறம் நாங்க இருந்த கிராமத்த விட்டு வெளியே தனித்தனியாப் பிரிஞ்சு போயிட்டோம் :-( ஒரு தகவலுமே இல்லாம இருந்தது.

திடீர்னு நேத்து அப்பா ஒரு விஷயம் சொன்னாங்க: “உனக்கு ரோஜா-வ நியாபகம் இருக்கா? சின்ன வயசுல ஒன்னாவே இருப்பீங்க. வழியில தற்செயலா அவங்க அப்பாவைப் பார்த்தேன். அந்தப் பொண்ணுக்குக் கல்யாணமாம்” :-) 

சரி, ரோஜாவோட கல்யாணத்துக்கு என்ன பரிசு கொடுக்கலாம்னு நீங்க கொஞ்சம் ஐடியா கொடுங்களேன் ;-) :-)
Read More...

இட்லிவடை

Nov 8, 2010

என் அபிமான வலைதளமான “இட்லிவடை”யில் எனது இரண்டு கவிதைகள் வெளியாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... :-) படித்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

http://idlyvadai.blogspot.com/2010/11/blog-post_06.html

அன்புடன்
சுபத்ரா :-)
*
*
Read More...

வாழ்த்துகள்

Nov 5, 2010

தித்திக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

HAPPY DIWALI
அன்புடன்
சுபத்ரா :-)
*
*
Read More...