Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

லக்‌ஷ்மி - குறும்படம்

Nov 9, 2017


ஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில்லை. உங்களைச் சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்; வந்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாகிச்சிட்டு (ஹிஹீ) ஓடியே போயிருவேன் :D நிறைய தடவை எழுதணும்னு தோனுனாலும் மிஸ் ஆகிடும். இப்போ என்ன சொல்ல வந்தேன்னா, சர்ஜுன் என்பவரின் இயக்கத்துல வெளிவந்திருக்கிற “லக்‌ஷ்மி” குறும்படம் பார்த்தேன்.

Read More...

சிதம்பர ரகசியம்

May 22, 2015



அபியிடம் இருந்து கால் வந்தது.

ஃப்ரீயா இருக்கியா?”

ஃப்ரீ தான் சொல்லு

நேத்து உனக்கு டேடா கார்ட் ரீசார்ஜ் பண்ணிட்டு வாறேன்.. நம்ம கோர்ட்டுக்கு எதிர்த்தாப்ல ஒரு ரோடு இருக்குல்லா?”

ஆமா

அதுல நடுரோட்டுல ஒராளு ஃபிட்ஸ் வந்து இழுத்துட்டு கெடக்காரு

ஐயோ.. அப்புறம்?”

அப்படியே மண்ணுல பிரண்டுட்டுக் கெடக்காரு

அப்றம் என்னாச்சு?”
Read More...

தேன்நிலா அம்சம் நீயோ!

May 3, 2015

2013ம் வருடம் இதே நாளில் என் நெருங்கிய தோழியைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன். அப்போது ஜோஸ் குட்டி இன்னும் பிறந்திருக்கவில்லை. இப்போது சித்ராவுக்கு ஒரு ஜியா குட்டியும் பிறந்தாகிவிட்டது. பெண் குழந்தை ஒன்று இருந்தால் விதவிதமாக உடைகள் உடுத்தி அலங்காரம் செய்து ரசிக்கலாமே என்னும் ஆசை அவளுக்கு நிறைவேறியதில் எனக்கும் ஏக மகிழ்ச்சி.

நானும் சித்ராவும் பத்து வருடங்களுக்கு முன்பு ஒன்றாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தோம். நான் இன்னும் திருமணமே செய்துகொள்ளாத நிலையில் அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டன :) “சீக்கிரமா நீயும் இந்த ஜெயிலுக்குள்ள வாடீ. படிச்சதெல்லாம் போதும். நீ மட்டும் எப்படி எஞ்சாய் பண்ணலாம்? இரு இரு.. உங்க அம்மாகிட்ட பேசி ஒடனே உனக்கொரு மாப்பிள்ள பார்க்கச் சொல்லுதேன்என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இதுவரை அப்படி எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை :) ஜோஸ் பிறந்திருந்த போது Lilliput-ல் அவனுக்கு இரண்டு ஆடைகள் எடுத்து வைத்திருந்தேன். நான் கொடுப்பதற்குள் அவன் வளர்ந்தேவிட்டான். “ரெண்டாவது பாப்பாவுக்காவது அந்த டிரெஸ்ஸ எடுத்துட்டு வாடீ..என்று பாவமாகக் கேட்டுவிட்டுத்தான் போனைக் கட் செய்தாள் போன முறை.

25 வருடங்களாக ஒரு குழந்தை போல விளையாடிக் கொண்டிருந்தவள் ஐந்தே வருடங்களில் ஓர் அன்பான மனைவியாக, அக்கறையுள்ள தாயாக, பொறுப்பான அதிகாரியாக மாறியிருப்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. நான் சித்ராவுக்கும் ஒரு ப்லாகர் அக்கவுண்ட் தொடங்கிக் கொடுத்திருந்தேன். அதில் இரண்டு கவிதைகளையும் எழுதியிருக்கிறாள். ஆனால் ஏனோ அதைத் தொடரவில்லை. “எதாவது எழுதலாம்லா டீ?என்று கேட்டால் போதும். “ஒரு டைரி ஃபுல்லா கவிதை எழுதி வெச்சிருந்தேன். படிச்சிட்டுத் தாரென்னு சொல்லி வாங்கிட்டுப் போய் எங்கடீ தொலைச்ச? அது இருந்தா அந்தக் கவிதையவாது நான் எழுதுவேன்என்று புலம்பத் தொடங்கிவிடுவாள் என்பதால் அதன்பிறகு கேட்பதில்லை :) சாரி சித்ரா.. அந்த டைரி எங்கருக்குனே தெரியலைடீ. ஆனா அதைப் போய் எவன் எடுத்தான்னுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. அனேகமா அதுல நிறைய பேர் சுண்டல் வாங்கித் தின்னிருப்பாங்க. நல்ல வேளை. நான் டைரியில எல்லாம் கவிதை எழுதல :) ஐயாம் ஒன்லீ ப்லாக் :)

நான் சென்னையில் வசிக்க, அவள் மட்டும் திருநெல்வேலியிலேயே இருப்பதை நினைத்தால் பொறாமையாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் அவளாவது ஊரில் இருக்கிறாளே, எப்போது போனாலும் சந்திக்கலாம் என்று நினைக்கையில் ஒரு ஆறுதல். இருவருக்கும் வாழ்க்கை வெவ்வேறு திசைகளில் பயணிப்பதைப் போல் தெரிந்தாலும் எங்கள் நட்பு பிரிந்துவிடுமா, விரிசல் வருமா என்னும் சந்தேகங்கள் எல்லாம் பறந்துவிட்டன. உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் அவளிடமிருந்து நானோ என்னிடமிருந்து அவளோ தப்பிப்பது கடினம் தான் :) பிகாஸ், டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் சோ மச் யா!

என் சந்தோஷங்களைக் கடைசியாகப் பகிர்ந்து கொள்பவள் அவள் என்றாலும் என் துக்கங்களுக்கு அவளே முதலில் தோள் கொடுப்பவள். We have laughed many of our sorrows off together. அவள் இல்லாமல் சில துயர்களை நான் கடந்திருக்க முடியாது. என் வலிகளை வலிந்து வாங்கிக் கொள்பவள்; என் பசியைப் பொறுக்க மாட்டாதவள்; என் புன்னகையில் சிரிப்பவள்; என் தனிமையில் தொல்லை செய்பவள்; எப்போதும் எனக்காகக் காத்திருப்பவள்; எத்தனைக் காலம் கழித்துப் பேசினாலும் அதே சிரிப்புடன் நலம் விசாரிக்க அவளால் மட்டுமே முடிந்திருக்கிறது; அவளிடம் பேசும் எவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்; அழகானவள்; அவளைச் சார்ந்த எல்லாமே அழகாகத் தான் இருக்கின்றன. அவள் வாழ்வும் அழகாகவே செல்ல வேண்டும் என்று இந்நொடியில் பிரார்த்திக்கிறேன். ஆம்.. இன்று சித்ரா பௌர்ணமி. சித்ரா பிறந்தநாள்.


பின்குறிப்பு: “சுபா.. உன் கல்யாணத்துக்குக் கையில ஒன்னு இடுப்புல ஒன்னாத் தான் வரணும்என்ற உனது வேண்டுதல் விரைவில் பலிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் :) He hee.. I miss u.. :(
Read More...