நானு ஏன் வேலையு
Oct 14, 2011
வணக்கம்! ப்ளாக் பார்க்கும் போதுலாம் “ஏதாவது போஸ்ட் எழுதனுமே”ன்னு தெனமும் தோணும்.. அதுக்காகச் சும்மா கிடக்குதேனு எதையாவது கிறுக்கிகிட்டு இருக்க முடியுமா? எதாச்சும் சரக்கு இருந்தா தான எழுத முடியும்.. அப்படீனுதான் இந்தப் பதிவு எழுதி போஸ்ட் பண்ணுதவெரைக்கும் நெனச்சிட்டு இருந்தேன்.. :-) (சோ, போறவங்க இப்பவே போயிக்கோங்க, உள்ள ஒன்னுமில்ல)
ஆஃபீஸ்ல ஒரே வேல.. ஆமா ஒரே வேல தான். வாடிக்கையாளர்கள் மட்டும் வெதவெதமா.. அதெப்படி ஏன்கிட்ட வாற எல்லாக் கஸ்டமர்ஸுமே ஒன்னு... ரொம்ப தொலவுலருந்து வாறோம்பாங்க, அல்லது சாயங்காலம் ஃப்ளைட்.. அப்ராட் போனூம்பாங்க.. இன்னைக்கு லீவ் எடுத்துட்டு வந்திருக்கேன்.. முடிச்சிக் குடுத்துருங்கம்பாங்க. அம்மா அப்பா வயசானவங்க.. மூட்டுவலி இருக்கு. ரொம்ப நேரமா காத்துகிட்டு உக்கார்ந்திருக்க முடியாதும்பாங்க.. ஒன்னு.. கைக்கொழந்தைய கையிலயே வச்சிருப்பாங்க.. இல்லன்னா கொழந்தைய ஸ்கூல்லருந்து கூட்டிட்டு வரனும்.. சீக்கிரமா முடிச்சிக் கொடுங்கம்பாங்க.. எங்க லோன் சான்க்ஷன் ஆகி எவ்ளோ நாளாச்சு இன்னும் ஏன் பெண்டிங்லயே வெச்சிருக்கீங்கம்பாங்க. இன்னைக்கு 12 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிருக்கேன்.. மணி 11.55 ஆயிட்டு இன்னும் முடிக்கலையானு முந்திரிகொட்ட மாரி வந்து நிப்பாங்க.. இது இல்லன்னா, கூட வேல பாக்குற ஸ்டாஃப் யாராது வந்து இது ஏன் வொய்ஃபோட ஒன்னு விட்ட தங்கச்சியோட வீட்டுக்காரரோட அக்கா பையனோட எஜுகேஷன் லோன்... ஒரு பத்து நிமிசம் வெயிட் பண்ணுதேன்.. அதுக்குள்ள முடிச்சிருவீங்கள்லம்பார். இல்ல சார்.. ஒரு ஃபைல் முடிக்க கொறஞ்சது அரைமணி நேரமாவது ஆகும்பேன். சரி அப்போ பத்து நிமிசம் வெயிட் பண்ணுதேன்..அப்படிம்பார். அய்யோ... கடவுளேன்னு நொந்துபோய் டேபில்ல குனிஞ்சு தலையை முட்டிக்கிட்டு ஒன்னுமே ஆவாததுமாரி நிமிர்ந்து பார்த்துச் சிரிச்சு ‘சரி சார்’னு தலைய ஆட்டிவப்பேன்.
இந்தமாரி வெதவெதமா கஸ்டமர்ஸ் வாறது ஒன்னும் கஷ்டம் இல்ல. ஆனா இவங்கெல்லாரும் ஒரே நேரத்துல வருவாங்க பாருங்க.. அவ்ளாதான்! நான் காலி.. சொல்லப்போனா அத நிர்வகிக்கிறதுல தான் திறமை.
இப்படித்தான் ஒரு தடவை எங்க அம்மா வயசுல ஒருத்தங்க ஏன்கிட்ட வந்து ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி அவங்களோட லோன் ஃபைல் ஒன்ன ஓபன் பண்ணித்தரச் சொல்லிக் கேட்டாங்க. நான் சாப்டக்கூட போவாம மத்யானம் சாப்பாட்ட மிஸ் பண்ணிட்டுப் பசியில உட்கார்ந்து எல்லாம் செஞ்சு முடிச்சு ஃபைலைச் சேர வேண்டிய எடத்துக்குப் பத்தரமா அனுப்பி வெச்சதுக்கப்புறம் பதிலுக்கு ஒரு நன்றி கூடாம சொல்லாம அவங்க போனம்போது தான் நெனைச்சேன்.. “அரசியல்ல இதெல்லாம் சக...ஜமப்பா”
என்ன.. ஒரு கஷ்டம். எனக்கு ஹிந்தியில யாரையும் ஏச தெரியமாட்டேங்கு. அதனாலயே எனக்கு வாற கோவத்த எல்லாம் உள்ளயே அடக்கி அடக்கி வெச்சு பொறுமையின் சிகரமாயிட்டே வாறேன். பாப்போம்.. இதெல்லாம் எங்க போயி முடிய போவுதுன்னு.
பிறவு, “ராதையின் நெஞ்சமே” ப்ளாக் லின்க்க மாத்திட்டேன்.. செலபேர் தேடிப்பாத்துட்டு இல்லன்னு போயிருப்பீங்க.. அறிவுப்பு இல்லாம மாத்திட்டேன். சாரி.. இந்த ப்ளாக பத்திச் சொல்லும் போது தான் ஒன்னு நியாபகம் வருது. நான் எழுதுறது எல்லாம் ஏன் ஆசைக்காகவும் ஆறுதலுக்காகவுந்தான். நான் ஒன்னும் தபூசங்கரோட தங்கச்சினு சொல்லிக்கிடல. புடிக்கலனா படிக்காதீங்க.. அதவுட்டுட்டு மேகம் எப்படி நனைக்கும் கழுத எப்படி கனைக்கும்னு வெட்டியா வந்து கேள்வி கேட்டுகிட்டு இருக்குற செல அனானி அண்ணன்களோட தொல்ல தாங்க முடியல.. வேண்டா வேண்டாம்னு சொன்னாலும் பி.ஹெச்.டி. படிப்புக்கு ஆராய்ச்சி பண்ணுதத மாரி நான் எழுதியிருக்குறத எடுத்து ஆராய்ச்சி பண்ணிகிட்டு கூடகொஞ்சம் என்னிய பிரபலமாக்கிடுதாங்க.. போதும்ணே! உருப்படியா எதாச்சும் வேல இருந்தாப் போயிப் பாருங்க.. இதுக்குமேல ஏதாச்சும் சொன்னேங்கன்னா...................................
கடைசியா ஒன்னு.. சவால் சிறுகதை – 2011 ன்னு சிறுகதைப் போட்டி ஒன்னு அறிவிச்சிருக்காங்க. கலந்துகிடனும்னு நினச்சீங்கன்னா அந்த லின்க்க படிச்சித் தெரிஞ்சிக்கோங்க. கலந்துகிடுறவங்களுக்கு ஆல் த பெஸ்ட்.
தபூசங்கர பத்திப் பேசிட்டு அவரோட கவிதைய ஷேர் பண்ணாம போவ முடியுமா.. இதோ..
உன்னிடமிருந்து நான்
விடைபெறாமல்
வந்ததற்குக் காரணம்
கடைசிவரை
நீ என்னுடனே
இருக்க வேண்டும்
என்பதற்காகத்தான்!
சரி.. அப்பம் நானும் உங்ககிட்ட இருந்து விடைபெறாமல் போறேன்.. தொடர்ந்து வாங்க.. என் ப்ளாக் பக்கம் :-) HAPPY WEEKEND...
********
Labels:
சும்மா
Posted by
சுபத்ரா
at
9:05 PM
16
comments
Subscribe to:
Posts (Atom)