செங்க சூள காரா..
Nov 18, 2011
ஆகஸ்ட் மாசம் Friend’s Day வந்தாலும் வந்தது .. Airtel-ல எனக்கொரு Hello Tunes வசதி Rs.198/- க்கு கிடைச்சது! அதன்படி,
1. ஒரு வருடத்துக்கு Hello Tunes வாடகை – இலவசம்!
2. ஒரு வருடத்துக்கு Unlimited Song Change - இலவசம்!! :-)
கேட்கவா வேணும்.. ஏற்கனவே மாசம் ஒருமுறை பாட்டை மாத்திகிட்டே இருந்த எனக்கு இந்த ஸ்கீம் வந்தாலும் வந்தது.. தினம் தினம் புதுப் புது பாட்டு தான்!! இதுல என்னவிட சந்தோஷப் பட்டது என் தம்பி அபி தான்.. ஏன்னா ஃபோன் பண்ணிக் கேட்குறது அவன் தான? அடிக்கடி எனக்குக் கால் பண்ணி,
“எக்கா Airtel Super Singer-ல இந்தப் பாட்டு கேட்டேன்.. சூப்பரா இருந்தது”
“புதுசா இந்தப் பாட்டு வந்திருக்கே.. கேட்டியா?”
“ஒடனே ______ ங்கிற நம்பருக்கு மெசேஜ் அனுப்பி அதுல 2-ம் நம்பர் வர்ற பாட்டவைய்யி..நான் கேட்கனும்”
“எக்கா, இந்தப் பாட்டு என்ன படம் தெரியுமா..”
இப்படில்லாம் பல கேள்விகள்.. எப்படியாச்சும் கன்வின்ஸ் பண்ணி அவன் நினைக்கிற பாட்டையெல்லாம் activate பண்ணவெச்சிருவான். அப்படித் தான் ஒரு நாள்..
“அக்கா, ‘தாளம்’னு ஒரு படம் இருக்குல்ல.. அதுல ‘காதல் யோகி’னு ஒரு பாட்டு இருக்கு. அத இப்போ ஒடனே ஹெலோ ட்யூனா வைய்யி”
அதை மனசுக்குள்ளேயே நான் பாடிப் பார்த்தேன்..
“அய்யோ.. அந்தப் பாட்டா? லிரிக்ஸ் ஒரு மாதிரி வருமே. நான் வைக்க மாட்டேன்”
“ப்ளீஸ்க்கா.. உனக்கு யாரு போன் பண்ணப் போறா? அங்க தான் யாருக்கும் தமிழ் தெரியாதுல.. ஏ.. வையிடே.. ப்ளீஸ்” (கொஞ்சல் / கெஞ்சல்)
சரின்னு அந்தப் பாட்டை செட் பண்ணி வச்ச அடுத்த நாள், வேலை விஷயமாக ஒரு வாடிக்கையாளருக்கு நான் தொலைபேசி அழைப்பு விடுக்க அது no reply யாக இருந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பின் வந்திருந்த மிஸ்ட் காலைப் பார்த்து அந்த நபர் என்னைத் திரும்ப அழைக்க வேலையில் மூழ்கியிருந்த என்னால் அதை அட்டெண்ட் செய்ய முடியவில்லை. மறுபடியும் கால் வந்தது.. இப்பொழுது பேசினேன்.
“ஹெலோ”
“ஹெலோ.. ஆப் கோன் ஹை? Actually ஏக் missed call ஆயா தா..இஸ் நம்பர் ஸே”
“ஹான் ஜி.. .... .... ....”
“... ... ...”
“.... .... .... ....”
“மேடம், நீங்க தமிழா?”
“ஆமா, உங்களுக்கு எப்படித் தெரியும்???”
“இல்ல, உங்களுக்கு ஃபோன் பண்ணப்போ தமிழ்ப் பாட்டு கேட்டது.. அதான் கேட்டேன். நான் விசாகப்பட்டினம். ஆனா காரைக்கால்ல ஒரு வருஷம் வேலை பார்த்தேன். எனக்குத் தமிழ் நல்லாத் தெரியும்”
“... ... ...”
“.... .... ....”
ச்ச.. இந்தப் பாட்டு வெச்சிருக்கும் போது தானா இப்படி ஒரு சம்பவம் நிகழனும்னு மனசுல நினைச்சுகிட்டு அபிக்கு ஃபோன் பண்ணேன்.. டோஸ் விடுறதுக்காக!
அப்புறம், ஒரு 4-5 நாளா, ‘வாகை சூட வா’ படத்துல இருந்து ‘செங்க சூளகாரா’ பாட்டு வெச்சிருந்தேன்.. தற்செயலா பாட்டை உன்னிப்பா கேட்கும் போது தான் லிரிக்ஸ் என்ன ஆச்சர்யப்பட வெச்சது! பாட்டை முழுசா கேட்டு கேட்டு இதோ உங்களுக்காக அந்தப் பாடலின் வரிகள்..
செங்க சூள காரா.. செங்க சூள காரா..
காஞ்ச கல்லு வெந்து போச்சு வாடா..
மேகம் கூடி இருட்டி போச்சு வாடா..
சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு
நட்ட நட்ட கல்லு வீடாச்சு
நச்சு நச்சு பட்ட நம்ம பொழப்பு தான்
பச்ச மண்ணா போச்சு..
வித்த வித்த கல்லு என்னாச்சு?
விண்ண விண்ண தொட்டு நின்னாச்சு!
மண்ணு குழி போல நம்ம பரம்பர
பள்ளம் ஆகி போச்சு!!
ஐயனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம் :’(
சொரனகெட்ட சாமி..! சோத்த தான கேட்டோம்?
கால வாச கங்கு போட கள்ளி முள்ளு வெட்டி வாடா...!
மண்ணு மண்ணு மட்டும் சோறாக
மக்க மக்க வாழ்ந்து வாராக..
மழ மழ வந்து மண்ணு கரைக்கையில்
மக்க எங்க போக?
இத்த களிமண்ணு வேகாது!
எங்க தல முற மாறாது!!
மண்ண கிண்டி வாழும் மண்ணு புழுவுக்கு
வீடு வாசல் ஏது..?!
ஐயனாரு சாமி கண்ண தொறந்து பாரு :(
எங்க சனம் வாழ, உன்ன விட்டா யாரு?
எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வெச்சு வாடா..
தந்தானே நானே... தந்தன்னானே நானே...
வேர்வ தண்ணி வீட்டுக்குள்ள வெளக்கு ஏத்தும் வாடா...!
அதுசரி, ஏன் இந்தப் பாட்டைப் பத்தி அவ்வளவா பேச்சே இல்ல? இது வைரமுத்துவோட பாடல் வரிகள் என்பதாலா? ;-)
*
Labels:
சும்மா
Posted by
சுபத்ரா
at
12:38 PM
11
comments
Subscribe to:
Posts (Atom)