http://gconnect.in/gc/lifestyle/get-ahead/narayanan-krishnan-hero-of-india.html
சரி.. சுவிட்சர்லாந்து போறதுக்கு முன்னாடி நம்ம ஊருக்குப் போவேமேனு போயிருக்கார். மதுரையில் இருக்கிற ஏதோ ஒரு கோயிலுக்குப் போற வழியில ஒரு பாலத்துக்கு அடியில ஒரு காட்சியப் பார்த்திருக்கார். அங்க ஒரு வயதான மனிதர் பசியில.. சாப்பிடுறதுக்கு ஒன்னுமில்லாம தன்னோட கழிவைத் தானே சாப்பிட்டுட்டு இருந்திருக்கார்.
ஃபிரண்ட்ஸ்.. நான் கேக்குறேன்.. நம்மில் யாரோ ஒருத்தர் இதே காட்சியப் பார்த்திருந்தா என்ன செஞ்சிருப்போம்? உவ்வேனு சொல்லிட்டு ஓடிப் போயிருப்போம்.. அல்லது அதைப் பார்த்து சொச்சோ..னு பரிதாபப் பட்டிருப்போம்.. அல்லது ’பையித்தியம்.. இந்த மாதிரி பையித்தியத்துக்கு எல்லாம் இந்த அரசாங்கம் ஏதாவது செய்யக் கூடாதா’னு கேட்டுட்டுப் போயிகிட்டே இருப்போம். ஆமாவா? இல்லையா?
ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சார் தெரியுமா? அதப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த நொடியிலிருந்து அந்தத் தாத்தாவுக்குத் தானே சாப்பாடு கொடுத்துட்டு வந்திருக்கார்.. அட.. எங்கப் போறீங்க? கதை இன்னும் முடியல.. இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு.
அவருக்கு மட்டுமில்ல.. இந்த மாதிரி மனநலம் குன்றி பிறரால் கைவிடப் பட்டவர்களுக்கும் யாருமற்ற அனாதைகளுக்கும் தானே உணவளிக்க எண்ணி உடனே என்ன செஞ்சார் தெரியுமா? தான் பார்த்துட்டு இருந்த வேலைய ரிசைன் பண்ணிட்டார்.
சுவிட்சர்லாந்தாவது... ஸ்காட்லாண்டாவது.. இனிமேல் இது தான் நம்ம வேலை. வாழ்க்கைப் பூரா இதத் தான் செய்யப் போறோம்னு அன்னைக்கு முடிவு எடுத்தவர் தான். இன்னைக்கு உலகமெல்லாம் புகழ்ந்து பேசப்படுற ஒரு பெரிய மனிதரா உயர்ந்து நிக்கிறார். அவருக்குக் கோடி கும்பிடு!
சரி.. இதை மட்டும் தான் பண்ணுறாரானா அது தான் இல்ல. அவர் போற எடத்துக்கெல்லாம் முடித்திருத்துவதற்குத் தேவையான சாதனங்களைக் கொண்டு போறாராம். எதுக்கு? அந்த மனநலம் குன்றியவர்களுக்குத் தானே முடித்திருத்தம் செய்வதற்கு. இதை எல்லாம் அவர் வருசத்துக்கு அதிகமில்ல...365 நாள் தான் செய்றாராம். இதை மாதிரி கடந்த ஒன்பது வருஷமா செஞ்சிட்டு இருக்காறாம்.
ஆமா.. பார்த்துட்டு இருந்த வேலைய விட்டுட்டாரே... எங்க இருந்து இந்தச் சேவையச் செய்றார்னு பார்த்தா.. அவரோட தாத்தா தனக்குனு கொடுத்த ஒரு பாரம்பரியமான பழைய வீட்டை வாடகைக்கு விடுறாராம். அதோட இதையெல்லாம் செய்றதுக்குனே “அக்ஷயா”னு ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிச்சு(இது வேறயா) அதுக்குக் கிடைக்குற கொஞ்சம் உதவித்தொகைய வச்சு சமாளிக்கிறாராம். அதுசரி.. கொடுக்கிறவங்களுக்கு ஆண்டவன் கூரையப் பிச்சுகிட்டுக் கொடுப்பான்ங்க..
எனக்கு இதுக்கு மேல சொல்றதுக்கு வார்த்தை வரலங்க. ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன். என்னடா வேலை பார்க்கிறான்னு அவங்க அம்மா நினைச்சிட்டு இருந்த சமயத்துல ஒரு நாள் நம்ம ஹீரோ தான் பார்க்கிற வேலைக்கு அம்மாவக் கூட்டிட்டுப்போய்க் காட்டிருக்கார். வீட்டுக்கு வந்தவுடனே அவரோட அம்மா... “போடா.. போக்கத்தவனே”னு சொல்லியிருந்தா பரவாயில்லங்க. என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?
“நீ அவங்களுக்கு எல்லாம் சாப்பாடு கொடு. என் உயிர் இருக்கிற வரைக்கும் நான் உனக்குச் சோறு போடுறேன்”னு சொல்லிருக்காங்கப்பா!!
சரி.. விஷயத்துக்கு வருவோம். நம்ப ஹீரோ பேரு.. “நாராயணன் கிருஷ்ணன்”. CNN நியூஸ் சேனல்ல வருஷா வருஷம் “CNN-Hero of the Year"னு ஒருத்தரை கௌரவிக்கிறாங்க. இந்த வருஷத்துக்கு உலகெங்கும் இருந்து ஒரு பத்துப் பேர் நியமனம் செய்யபட்டிருக்காங்க. அதுல நம்ம ஹீரோ திரு. நாராயணன் கிருஷ்ணனும் ஒருத்தர்!!
நாம செய்ய வேண்டியது ஒன்னு தான். CNN சேனலுக்கான லின்க்க க்ளிக் பண்ணி நம்மளோட ஓட்டுக்களை அவருக்குப் போடனும். அவ்வளோ தான். உலகம் முழுவதிலும் பத்தே பத்துப் பேர். அதில ஒருத்தர் தான் இந்தியர். அதுவும் தமிழர் :-)
அவரோட இந்த ஈடுஇணையற்ற செயலுக்கு இன்னும் நிறைய உதவி கிடைக்கிறதுக்கும் அவரை உற்சாகப்படுத்துறதுக்கும் இந்த ஒரு சின்ன செயல நாம் செய்யனும்னு நினைக்கிறேன்.
ஓட்டிடுவதற்கு இங்கே க்ளிக்கவும்
ENCOURAGE THIS YOUNG & ENERGETIC HELPING SOUL |
கடைசித் தேதி நவம்பர் 18, 2010. அதுகுள்ள எவ்வளோ ஓட்டு வேணும்னாலும் போடலாம்!
நன்றி..... கமெண்ட்ஸ்-ல மீட் பண்ணலாம். (ஓட்டு போட்டுட்டு மெதுவா வாங்க :-) )*
*