கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...
Hi from a Hikikomori 🐌

கருத்துகள்
ஆனா,அடக்கமுயன்று க்கு பதிலாக விலக்கமுயன்றுன்னு இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு தோன்றுகிறது :)
நன்றி VELU.G :-)
நல்ல சஜ்ஜஷன் :-)
வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று
அவமானத்தில்
அதற்கொரு
வெட்கம் புதியதாய்
முளைக்க
வெட்கமே
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்..
:-)
என்னாச்சுங்க?
/ /....வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று.../ /
நல்ல கவிதை...
வெட்கம் உனக்கு
பிடிக்காதென்கிறாய்
அப்படியா?...
இப்போது பெண்களுக்கெல்லாம்
வெட்கம் பிடிப்பதாக
தெரியவில்லை - இல்லை இல்லை
வெட்கப்பட தெரியவில்லை...
நன்றி...,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்.
அப்படியே பெண்கள் வெட்கப்பட்டாலும் ஆண்களுக்கு அதை Appreciate பண்ண தெரியவில்லை ;-)
ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை என்று தனி காட்டு ராஜா நினைக்கிறார்..:)
நம்மள பேச விட மாட்டீங்களே..
//ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை//
நல்ல சமாளிஃபிக்கேஷன்.
டாங்ஸ்ங்க :)
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று
அவமானத்தில்
அதற்கொரு
வெட்கம் புதிதாய்
முளைக்க
வெட்கமே
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்.. //
******
விலக்க முயன்று தோற்று, தோற்று, அந்த அவமானத்தில்....
ஆஹா.... சூப்பர்... அதனால் ஒரு அவமானம் வந்ததாக வந்த அந்த கற்பனைக்கு ஒரு சல்யூட்...
எப்படியெல்லாம் யோசிச்சு எழுதறாங்கப்பா?? சொல்லி தருவீங்களா? கேட்கும் ட்யூஷன் ஃபீஸ் தரப்படும்....
ஆகா... பேசாம அண்ணா யுனிவெர்சிட்டில ஒன் இயர் கோர்ஸ் இருந்தா ஜாயின் பண்ணுங்களேன்..?? :-)
நானும் கவிதை எழுதாலாம்னுந்தான் பாக்குறேன்...
கழுதை ஒன்னும் தோன மாட்டேங்குது....!!
செம.. செம... செம...!!!
நன்றி தாரிஸன் :-)
நன்றி அண்ணா..