... “அந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் உயிர் பற்றிய இந்த இரகசியத்தை வெளியே கூறினால் கூறுபவனின் தலை வெடித்துச் சிதறி அக்கணமே அவனது உயிர் போய்விடும். எனவே ராஜாவைக் காப்பாற்றுவதற்கு வழியேயில்லை...” இதக் கேட்டுட்டிருந்த மந்திரி ராஜாவோட உயிர எப்படிக் காப்பாத்துறதுனு நினைச்சுக் குழம்பிப் போக ஆரம்பிச்சிட்டான்...”
“இந்தக் கதை வேண்டாம் ஆச்சி.. இது நல்லாயில்ல..” “ம்ம்... சரி அப்போ, சீதைக்காக மான் பிடிச்சிட்டு வர்றேன்னு ராமன் போவானே...அது சொல்லவா?” “வேண்டா வேண்டாம்... அந்தத் தக்காளிப் பழமும் கத்திரிக்காவும் சுண்டக்காவும் வெண்டக்காவும் மார்க்கெட்டுக்குப் போகும்ல.. அந்தக் கதை சொல்லேன்...”
... “அப்போ மரத்துல இருந்த காக்கா, வடையக் கால்ல வெச்சுக்கிட்டு கா…கா..கா…ன்னு கத்துச்சாம். ஏமாந்த நரி அங்கயிருந்து ஓடியே போச்சாம்...”
“ஏய்.. இல்லடே.. நீ தப்பாச் சொல்லுத. அந்தக் காக்கா கத்தும்போது வடை கீழ தான் உழும். அத நரி எடுத்துக்கிட்டு ஓடிப் போயிரும்”
“இல்ல.. இல்ல.. எங்க மிஸ்ஸு சொன்னாங்கல.. அது வேற காக்காவாம். அந்த புக்ல தப்பா குடுத்துட்டாங்களாம்...”
...“அந்த ஹேப்பி ப்ரின்ஸ் சிலை.. “ஸ்வாலோ ஸ்வாலோ… லிட்டில் ஸ்வாலோ.. வில் யூ பி வித் மீ ஃபார் வன்மோர் நைட்?” அப்படின்னு ரொம்பத் தயக்கமா கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டுச்சாம். “நீ இப்படியே கேட்டுட்டே இருக்க. என் சொந்தக்காரப் பறவைங்க எல்லாம் ஆறு வாரத்துக்கு முன்னாலயே எகிப்துக்குப் பறந்து போயிட்டாங்க. இன்னும் ஒரு நாள் உன்கூட இங்க நான் இருந்தாக் கூட இந்தக் குளிர்ல நான் செத்துப் போயிருவேன். அதனால நானும் போறேனே”ன்னு அந்தக் குட்டிக் குருவியும் பதிலுக்குக் கெஞ்சிக் கேட்டுச்சாம். அதுக்கு அந்த ஹேப்பி ப்ரின்ஸ், “...என் கண்ணுல இருந்த கற்களையும் கொடுத்தாச்சு. எனக்கு இப்போ பார்வையே கிடையாது. ஆனா, நீ பார்த்துட்டு வந்தல்ல? அந்த ரெண்டு குழந்தைகளும் பசியில அழுதுட்டு இருக்காங்களே. கடைசியா இந்த ஒன்னு மட்டும் செய்யேன்.. என் உடம்புல இருக்குற தங்கப் பூச்சையெல்லாம் அப்படியே பெயர்த்து எடுத்து அவங்க கிட்ட கொடுத்திர்றயா? ப்ளீ..ஸ்”னு கெஞ்சிச்சாம். மறுக்க முடியாத அந்தக் குருவியும் அப்படியே செஞ்சு அந்தக் குழந்தைகளைச் சிரிக்க வெச்சிச்சாம். இப்படியே சுரண்டிச் சுரண்டித் தன்னோட மதிப்பு முழுவதும் இழந்து போன ஹேப்பி ப்ரின்ஸ் சிலை, அந்தக் குருவியைப் பார்த்து “எனக்காக என்ன உதவியெல்லாம் செஞ்சிருக்க...! ஐ லவ் யூ. என் உதட்டுல வந்து முத்தம் கொடு”னு சொன்னதும் பாதி உயிராப் போயிருந்த அந்தக் குருவியும் அப்படியே செய்ததும் பொத்துனு அவரோட கால்ல விழுந்து செத்துப் போச்சு. அதை உணர்ந்த அந்தப் ப்ரின்ஸோட சிலைக்குள்ள ஏதோ உடையற சத்தம் கேட்டதாம். விழுந்தது அவரது இதயம்...”
... “அப்புறமா அந்த அரக்கன் “வழிப்போக்கர்களுக்கு எல்லாம் இங்கே அனுமதி இல்லை”ங்கிற அந்த போர்டை எடுத்துட்டானாம். அதுக்கப்புறம் அவனோட தோட்டம் எல்லாம் பூத்துக் குலுங்கிக் காய்ச்சுச் கனிஞ்சு செழிக்க ஆரம்பிச்சிடுச்சு. அந்தக் குழந்தைங்க எல்லாம் மறுபடியும் அந்த அரக்கனோட தோட்டத்துக்குள்ள வந்து விளையாட ஆரம்பிச்சாங்களாம்”...
...அந்தத் தீவுல தனியா மாட்டிக்கிட்டு நடந்து போயிட்டு இருந்தப்போ அவ்வளவு பெருசா வட்ட வடிவத்துல வெள்ளை நிறமா மண்ணுக்குள் பாதி புதைஞ்சிருந்த அந்தப் பொருள் ஒரு பெரிய ராட்சஸ பறவையோட முட்டைனு கண்டுபிடிச்ச சிந்துபாத், யோசிச்சிட்டு இருக்கும்போதே தூரத்துல அந்தப் பறவை பறந்து வர்ற சத்தம் கேட்டது. உடனே அங்கே கிடைத்த ஒரு கயிறு ஒன்றின் ஒரு பக்கத்த தன்னோட உடம்புல கட்டிக்கிட்டு அப்படியே தரையோட தரையா படுத்துக்கிட்டான். பக்கத்துல வந்த பறவை அந்த முட்டைமீது உட்கார்ந்திருந்த கொஞ்ச நேரத்துல அந்தப் பறவையோட கால் விரலோ நகமோ ஏதோ ஒன்னுல அந்தக் கயிறோட இன்னொரு முனையைக் கட்டிக்கிட்டு அதோடு சேர்ந்து தானும் பறக்கக் காத்துட்டு இருந்தான்...”
...அழுதுகொண்டு தனது காதலியின் சடலத்தை அவளது குழந்தையின் சடலத்தோடு சேர்த்துப் புதைத்த அவன், “ஓ பெய்ருட் நகரில் சிதறிக்கிடக்கும் எனது நண்பர்களே..! பைன்மரக் காட்டின் அருகே இருக்கும் இந்தச் சமாதியைக் கடந்து செல்லும் போது அமைதியாக நுழைந்து மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்து செல்லுங்கள். உங்கள் காலடி ஓசைகள் இறந்து போனவளின் உறக்கத்தைக் கலைத்துவிடக் கூடாது; செல்மாவின் கல்லறையின் முன்பு பணிவாக நின்று அவளது உடலைப் போர்த்தியிருக்கும் இந்த மண்ணை வாழ்த்திவிட்டு ஆழ்ந்த பெருமூச்சுடன் என் பெயரை உச்சரித்துவிட்டு உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள்.. “காதல் கைதியாகக் கடல்கள் கடந்து வாழ்கின்ற ஜிப்ரானின் நம்பிக்கைகள் அனைத்தும் இங்கே தான் புதைக்கப்பட்டன. இந்த இடத்தில் தான் அவன் தனது மகிழ்ச்சியை இழந்தான், கண்ணீர் வற்றிப் போனான், தனது சிரிப்பை மறந்தான்...”
...அதன் எதிரே, ஏக்கத்துடன் நின்றான் கரியன்! "பழம், ஒரு அணாடா, பயலே-காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா - போடா" என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா, பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலு வீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள் அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான் வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக் கொண்டே...”
பேனாவை மூடாமல் தூக்கிப் போட்டுவிட்டுப் பாதி குடிக்காமல் மறந்திருந்த காப்பியை வீண்செய்ய மனதின்றி வாயில் கடக்கென்று ஊற்றிவிட்டு டக்கென்று டம்ப்ளரை மேஜைமீது வைக்கவும் அம்மா எனது அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.
“பத்திரிகைக்குக் ‘கதை எழுதுறேன்...கதை எழுதுறேன்’னு இப்படியே பித்துப் பிடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கியே, இன்னும் ஒன்னும் எழுதலையா ராசா?” என எதிரிலிருந்த வெற்றுத் தாள்களை நோட்டமிட்டுக் கொண்டே எனது தலையைக் கோதிவிட்ட அம்மாவின் கரங்களை விலக்கிக்கொண்டு ஒரு முடிவுடன் எழுந்தேன்.
“அப்பா எங்க? சாப்பிட வந்தாரா?” அம்மாவின் புருவங்கள் உயர்ந்ததன.
“இல்லப்பா.. இன்னைக்குக் கடையில கூட்டம் ஜாஸ்தி போல, நகரமுடியல”
“சரி. எனக்குச் சாப்பாடு போடு. சாப்டுட்டு நான் கடைக்குப் போயிட்டு அப்பாவ வீட்டுக்கு வரச்சொல்றேன். மதியம் தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்”
“...”
“அம்மா...”
தாழ்ந்திருந்த பார்வையுடன் தொடர்ந்தேன்.. “இனிமே கடை என் பொறுப்புனு அப்பாகிட்ட நான் சொன்னேன்னு சொல்றியா?”
**
**

கருத்துகள்
:-)))
இன்னும் இது மாதிரி நிறைய கதை எழுதுங்க :-))))
இன்னும் இது மாதிரி நிறைய கதை எழுதுங்க :-))))
....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
இது கதைக்குள், கதைக்குள், கதைக்குள் கதையாக்கும்....
முடிவு நெருங்க, நெருங்க நல்ல சஸ்பென்ஸ், கூடவே அந்த பையன் எடுத்த முடிவு பலே சபாஷ்...
வாழ்த்துக்கள்....
காலையிலேயே சிரிக்க வெச்சிட்டீங்க :-) நன்றி..
நன்றி எஸ்.கே.அண்ணா!
அக்கா.. இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?
அச்சோ.. அண்ணா, ஒரு கதைக்குள் கதைகள். அவ்வளவே! :-)
ராதா, உன்னுடைய பார்வை...கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ.. உனக்கிருக்கும் சக்தி...மகாசக்தி புரிஞ்சிக்கோ :-)
நானே தேடிக்கொண்டிருந்தேன். எங்கேடா என்று :-) கலக்குறீங்கண்ணா..
No... I have not. What is that story about? Btw, I hope u have read the Happy Prince..
சில படங்களை பல முறை பார்த்திருந்தோமானால் மனதில் பதிந்து விடும். :-)
கதை எல்லாம் கலக்கலா தான் இருக்கு, ஆனா பரீட்ச்சைக்கு போயி கதை எழுதிட்டு வந்திடுவியோன்னு ஒரு கவலை வந்துடிச்சு ! :-)
அப்புறம் அந்த சமாதியான காதலை படித்தவுடன் சமீபத்தில் படித்த இரண்டு அழகான கவிதைகள் நினைவிற்கு வந்தன...
i am fragile
கோபம்
இது மாதிரி நிறைய கதை எழுதுங்.........கககககககககக......க.
ம்ம்.. அவை இரண்டும் எப்பவும் என் கண்முன்னே இருப்பவை :-)
கதை எழுதாத பரீட்சையும் உண்டோ? (NA for MCQs)
Correlation factor - னால எனக்கு நிறைய ப்ளாக்ஸ் அறிமுகமாகுது. நன்றி :-)
என்னவோ என்னையும் அதேமாதிரி முடிவு எடுக்கச் சொன்னீங்களோனு நினைச்சேன். ஆனா, நிறைய வேற எழுதச் சொல்லிருக்கீங்க?! :-) நன்றி..
வாழ்த்துகளுக்கு நன்றி கோபி அண்ணா !
Okay. படிச்சுத் தெரிஞ்சிக்கிறேன்.. நன்றி ராதா :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாஞ்சில் மனோ :-)
பத்தி பத்தியாக பிரித்து எழுதுங்கள்..
மிக்க நன்றி. இப்பொழுது நன்றாக ஸ்பேஸ் விட்டுருக்கிறேன்..
கொடுத்து வைத்தவர்தான்..........!!
ஏன் அண்ணா, நல்லா இல்லையா?
தங்களது பாராட்டுகளுக்கு வணங்குகிறேன். நன்றி..
Thank You Bala.. I have not tried writing reviews yet.
நேரம் கிடைச்சா நம்ம ஓடைக்கும் குளிக்க வாங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)
மிக்க நன்றி.. அவசியம் வருகிறேன்.
:))) சின்ன வயசுல பாட்டி இருந்தாங்க. இப்போ யாருமில்ல. அதான் நான் பேச ஆரம்பிச்சிட்டேன் :-)
and your story is just impressive.....
thanks for the good time!
நடையும், கதை சொல்லும் பாணியும் அருமை......
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...... வாழ்த்துக்கள்.......
Welcome Vinu.. Keep visiting :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!
எம்மா.. என்ன ஒரு கண்டுபிடிப்பு !! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிரூபன்..
Thank You Samudra !
இன்னும் மெருகு ஏற்றவும்.
Sure.. All the best...!
Thank u. Keep visiting.
தங்களது அன்பிற்கு மிக்க நன்றி...! :)
அந்த நாலு பேரும் அவங்க எத்தனாங்கிளாஸ் வரை படிச்சிருக்காங்க சகோஸ்..!! :-))
அதை எண்ணிப் பார்க்குற அளவுக்கு எல்லாம் நமக்குப் படிப்பு வசதி இல்லேங்க.. :)
Thank you so much..
Pls dont post ur template ads and comments here.
Sure !!