முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செங்க சூள காரா..


ஆகஸ்ட் மாசம் Friends Day வந்தாலும் வந்தது .. Airtel- எனக்கொரு Hello Tunes வசதி Rs.198/- க்கு கிடைச்சது! அதன்படி,
1.    ஒரு வருடத்துக்கு Hello Tunes வாடகை இலவசம்!
2.    ஒரு வருடத்துக்கு Unlimited Song Change -  இலவசம்!! :-)
கேட்கவா வேணும்.. ஏற்கனவே மாசம் ஒருமுறை பாட்டை மாத்திகிட்டே இருந்த எனக்கு இந்த ஸ்கீம் வந்தாலும் வந்தது.. தினம் தினம் புதுப் புது பாட்டு தான்!! இதுல என்னவிட சந்தோஷப் பட்டது என் தம்பி அபி தான்.. ஏன்னா ஃபோன் பண்ணிக் கேட்குறது அவன் தான? அடிக்கடி எனக்குக் கால் பண்ணி,
“எக்கா Airtel Super Singer- இந்தப் பாட்டு கேட்டேன்.. சூப்பரா இருந்தது”
“புதுசா இந்தப் பாட்டு வந்திருக்கே.. கேட்டியா?
“ஒடனே ______ ங்கிற நம்பருக்கு மெசேஜ் அனுப்பி அதுல 2-ம் நம்பர் வர்ற பாட்டவைய்யி..நான் கேட்கனும்”
“எக்கா, இந்தப் பாட்டு என்ன படம் தெரியுமா..
இப்படில்லாம் பல கேள்விகள்.. எப்படியாச்சும் கன்வின்ஸ் பண்ணி அவன் நினைக்கிற பாட்டையெல்லாம் activate பண்ணவெச்சிருவான். அப்படித் தான் ஒரு நாள்..
“அக்கா, ‘தாளம்’னு ஒரு படம் இருக்குல்ல.. அதுல ‘காதல் யோகி’னு ஒரு பாட்டு இருக்கு. அத இப்போ ஒடனே ஹெலோ ட்யூனா வைய்யி”
அதை மனசுக்குள்ளேயே நான் பாடிப் பார்த்தேன்..
“அய்யோ.. அந்தப் பாட்டா? லிரிக்ஸ் ஒரு மாதிரி வருமே. நான் வைக்க மாட்டேன்”
“ப்ளீஸ்க்கா.. உனக்கு யாரு போன் பண்ணப் போறா? அங்க தான் யாருக்கும் தமிழ் தெரியாதுல.. .. வையிடே.. ப்ளீஸ்” (கொஞ்சல் / கெஞ்சல்)
சரின்னு அந்தப் பாட்டை செட் பண்ணி வச்ச அடுத்த நாள், வேலை விஷயமாக ஒரு வாடிக்கையாளருக்கு நான் தொலைபேசி அழைப்பு விடுக்க அது no reply யாக இருந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பின் வந்திருந்த மிஸ்ட் காலைப் பார்த்து அந்த நபர் என்னைத் திரும்ப அழைக்க வேலையில் மூழ்கியிருந்த என்னால் அதை அட்டெண்ட் செய்ய முடியவில்லை. மறுபடியும் கால் வந்தது.. இப்பொழுது பேசினேன்.
“ஹெலோ”
“ஹெலோ.. ஆப் கோன் ஹை? Actually ஏக் missed call ஆயா தா..இஸ் நம்பர் ஸே”
“ஹான் ஜி.. .... .... ....
... ... ...
.... .... .... ....
“மேடம், நீங்க தமிழா?
“ஆமா, உங்களுக்கு எப்படித் தெரியும்???
“இல்ல, உங்களுக்கு ஃபோன் பண்ணப்போ தமிழ்ப் பாட்டு கேட்டது.. அதான் கேட்டேன். நான் விசாகப்பட்டினம். ஆனா காரைக்கால்ல ஒரு வருஷம் வேலை பார்த்தேன். எனக்குத் தமிழ் நல்லாத் தெரியும்”
... ... ...
.... .... ....
ச்ச.. இந்தப் பாட்டு வெச்சிருக்கும் போது தானா இப்படி ஒரு சம்பவம் நிகழனும்னு மனசுல நினைச்சுகிட்டு அபிக்கு ஃபோன் பண்ணேன்.. டோஸ் விடுறதுக்காக!

அப்புறம், ஒரு 4-5 நாளா, ‘வாகை சூட வா’ படத்துல இருந்து ‘செங்க சூளகாரா’ பாட்டு வெச்சிருந்தேன்.. தற்செயலா பாட்டை உன்னிப்பா கேட்கும் போது தான் லிரிக்ஸ் என்ன ஆச்சர்யப்பட வெச்சது! பாட்டை முழுசா கேட்டு கேட்டு இதோ உங்களுக்காக அந்தப் பாடலின் வரிகள்.. 
செங்க சூள காரா.. செங்க சூள காரா..
காஞ்ச கல்லு வெந்து போச்சு வாடா..
மேகம் கூடி இருட்டி போச்சு வாடா..

சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு
நட்ட நட்ட கல்லு வீடாச்சு
நச்சு நச்சு பட்ட நம்ம பொழப்பு தான்
பச்ச மண்ணா போச்சு..
வித்த வித்த கல்லு என்னாச்சு?
விண்ண விண்ண தொட்டு நின்னாச்சு!
மண்ணு குழி போல நம்ம பரம்பர
பள்ளம் ஆகி போச்சு!!
ஐயனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம் :(
சொரனகெட்ட சாமி..! சோத்த தான கேட்டோம்?
கால வாச கங்கு போட கள்ளி முள்ளு வெட்டி வாடா...!

மண்ணு மண்ணு மட்டும் சோறாக
மக்க மக்க வாழ்ந்து வாராக..
மழ மழ வந்து மண்ணு கரைக்கையில்
மக்க எங்க போக?
இத்த களிமண்ணு வேகாது!
எங்க தல முற மாறாது!!
மண்ண கிண்டி வாழும் மண்ணு புழுவுக்கு
வீடு வாசல் ஏது..?!
ஐயனாரு சாமி கண்ண தொறந்து பாரு :(
எங்க சனம் வாழ, உன்ன விட்டா யாரு?
எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வெச்சு வாடா..
தந்தானே நானே... தந்தன்னானே நானே...
வேர்வ தண்ணி வீட்டுக்குள்ள வெளக்கு ஏத்தும் வாடா...!

அதுசரி, ஏன் இந்தப் பாட்டைப் பத்தி அவ்வளவா பேச்சே இல்ல? இது வைரமுத்துவோட பாடல் வரிகள் என்பதாலா? ;-)
*

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//அதுசரி, ஏன் இந்தப் பாட்டைப் பத்தி அவ்வளவா பேச்சே இல்ல? இது வைரமுத்துவோட பாடல் வரிகள் என்பதாலா? ;-)
*//
repeatu
கேரளாக்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
naan idhe maathiri oru paatu ezhuthirukken
கேரளாக்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
senka choola kaaraa
கேரளாக்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//“அக்கா, ‘தாளம்’னு ஒரு படம் இருக்குல்ல.. அதுல ‘காதல் யோகி’னு ஒரு பாட்டு இருக்கு//

‘தாளம்’னு ஒரு படம் இருக்கு?

அதுல ‘காதல் யோகி’னு ஒரு பாட்டு இருக்கு???????????

theriyala
கேரளாக்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
பாப்பா இந்த கவிதெல்லாம் நீயே எழுதுனதாப்பா? #டவுட்டு
கேரளாக்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
அங்க நீ கம்மன்ட் பெட்டிய க்ளோஸ் பண்ணுனாலும் இங்க வந்து கம்மன்ட் போடுவோம்ல எப்பூடி
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
:)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ஜெ.ஜெ.
அண்ணா.. காபி சாப்ட்டீங்களாண்ணா?
அண்ணா.. டிபன் சாப்ட்டீங்களாண்ணா?

@ கேரளாக்காரன்
இதென்ன இத்தனை கமெண்ட்ஸ்.. ஒன்னும் உருப்படியா இல்ல :)

@ சிவா
எப்பவும் போல இப்பவும் சிரிப்பா? நல்ல சிரி..
R. Jagannathan இவ்வாறு கூறியுள்ளார்…
எதேச்சையாக இந்த ப்ளாகில் நுழைந்தேன். வைரமுத்து அவர்களின் பாடல் எப்பவும்போல மண்ணின் பெருமை / வறுமையை கண்முன் கொண்டு வருவதில் ஆச்சரியமில்லை. இந்தபாடலை சிதைக்காமல் வரிகள் புரியும்படி இசை அமைத்தவரை பாராட்டுங்கள்!
எனக்கு ஒரு சந்தேகம்! இந்த ஹலோ ட்யூன் செலெக்ட் செய்யும்போது அழைக்கப் படுபவர் எல்லோருக்கும் பொதுவாகப் பிடித்தமானதாக இருக்க வேண்டாமா? - ஜெ.
சாமக்கோடங்கி இவ்வாறு கூறியுள்ளார்…
வைரமுத்துவின் கவிதைகளை ஊன்றிப் படிக்கும் அளவுக்கு இன்றைய இளம் தலை முறையினருக்கு நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.. வை திஸ் கொலவெறி தான் அவர்களுக்கு எளுப்பமாக உள்ளது... என்ன செய்ய..
அருமையான எழுத்து நடை உங்களுடையது.. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டார்.. "சர சர சார" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. ஒரு பெண்ணின் உள்ளத்தில் எழும் காதலை வெளிப்படுத்தும் பாடலாதலால் மூச்சு விடாமல் இரண்டு மூன்று வரிகளைத் தொடர்ந்து பாடும்படியாக இசை அமைப்பாளர் வைத்திருந்தாராம். மிகவும் கஷ்டமாக இருந்த காரணத்தால், சற்று எளிதாக மாற்றி அமைத்துப் பாடலை எடுத்து முடித்தார்களாம்.. கேட்டுப் பாருங்கள் முடிந்தால்... "போறானே போறானே" என்கின்ற பாடலை ஒரு சிறு பெண் தொலைக்காட்சியில் பாடிய போது எனது உயிர் உருகி கண்களில் நீர் வழிந்தது.. இசை அமைப்பாளர் ஜிப்ரானிடம் மிகுந்த திறமைகள் உள்ளன.. வாழ்க..
நன்றி
சாமக்கோடங்கி
சாமக்கோடங்கி இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தப் படம் பாக்கணும்னு நெனச்சுக்கிட்டே தவற விட்டுட்டேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...