ஒரு கோப்பை நிறைய
உரிமைகளை
ஊற்றிப் பருகத் தந்தீர்கள்
எனக்குப் பழக்கமில்லை
என்றேன்
காபி குடித்தால்
நாளை வரப்போகும்
தலைவலி தீரும்
என்றீர்கள்
கட்டாயப்படுத்தினீர்கள்
ருசித்துப் பார்த்தபோது
கசப்பாக இருந்தது
கொஞ்சம் இனிப்பாகவும்.
இனிக்கிறதா? எனக் கேட்டீர்கள்
ஆமோதித்தவாறே
இல்லாத தலைவலியை
நான் விரட்டத் தொடங்கியிருந்தேன்
9 comments:
விட மாட்டார்கள் போலிருக்கே...
ஏனோ கோப்பை எனும் சொல்லில் எனக்கு தீராத காதல்.என் கவிதைகளில் அடிக்கடி பயன்படுத்துவேன். உங்கள் காபி கோப்பை நன்றாவே இருக்கிறது (இனிக்கிறது)
உரிமைகளை ஊற்றிப் பருகத் தந்தீர்கள்! எக்ஸலண்ட்!
ஹா ஹா ஹா
ஹா..ஹா..
வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!
வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர்-மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன்
பார்வையிடமுகவரி-வலைச்சரம்
அறிமுகம்செய்த திகதி-18.07.2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களின் பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
வலைச்சரம் வாயிலாக வந்தேன் வாழ்த்துக்கள் ....!
Post a Comment