தேன்நிலா அம்சம் நீயோ!
May 3, 2015
2013ம் வருடம் இதே நாளில் என் நெருங்கிய தோழியைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன். அப்போது ஜோஸ் குட்டி இன்னும் பிறந்திருக்கவில்லை. இப்போது சித்ராவுக்கு ஒரு ஜியா குட்டியும் பிறந்தாகிவிட்டது. பெண் குழந்தை ஒன்று இருந்தால் விதவிதமாக உடைகள் உடுத்தி அலங்காரம் செய்து ரசிக்கலாமே என்னும் ஆசை அவளுக்கு நிறைவேறியதில் எனக்கும் ஏக மகிழ்ச்சி.
நானும் சித்ராவும் பத்து வருடங்களுக்கு முன்பு ஒன்றாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தோம். நான் இன்னும் திருமணமே செய்துகொள்ளாத நிலையில் அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டன :) “சீக்கிரமா நீயும் இந்த ஜெயிலுக்குள்ள வாடீ. படிச்சதெல்லாம் போதும். நீ மட்டும் எப்படி எஞ்சாய் பண்ணலாம்? இரு இரு.. உங்க அம்மாகிட்ட பேசி ஒடனே உனக்கொரு மாப்பிள்ள பார்க்கச் சொல்லுதேன்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இதுவரை அப்படி எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை :) ஜோஸ் பிறந்திருந்த போது Lilliput-ல் அவனுக்கு இரண்டு ஆடைகள் எடுத்து வைத்திருந்தேன். நான் கொடுப்பதற்குள் அவன் வளர்ந்தேவிட்டான். “ரெண்டாவது பாப்பாவுக்காவது அந்த டிரெஸ்ஸ எடுத்துட்டு வாடீ..” என்று பாவமாகக் கேட்டுவிட்டுத்தான் போனைக் கட் செய்தாள் போன முறை.
25 வருடங்களாக ஒரு குழந்தை போல விளையாடிக் கொண்டிருந்தவள் ஐந்தே வருடங்களில் ஓர் அன்பான மனைவியாக, அக்கறையுள்ள தாயாக, பொறுப்பான அதிகாரியாக மாறியிருப்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. நான் சித்ராவுக்கும் ஒரு ப்லாகர் அக்கவுண்ட் தொடங்கிக் கொடுத்திருந்தேன். அதில் இரண்டு கவிதைகளையும் எழுதியிருக்கிறாள். ஆனால் ஏனோ அதைத் தொடரவில்லை. “எதாவது எழுதலாம்லா டீ?” என்று கேட்டால் போதும். “ஒரு டைரி ஃபுல்லா கவிதை எழுதி வெச்சிருந்தேன். படிச்சிட்டுத் தாரென்னு சொல்லி வாங்கிட்டுப் போய் எங்கடீ தொலைச்ச? அது இருந்தா அந்தக் கவிதையவாது நான் எழுதுவேன்” என்று புலம்பத் தொடங்கிவிடுவாள் என்பதால் அதன்பிறகு கேட்பதில்லை :) சாரி சித்ரா.. அந்த டைரி எங்கருக்குனே தெரியலைடீ. ஆனா அதைப் போய் எவன் எடுத்தான்னுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. அனேகமா அதுல நிறைய பேர் சுண்டல் வாங்கித் தின்னிருப்பாங்க. நல்ல வேளை. நான் டைரியில எல்லாம் கவிதை எழுதல :) ஐயாம் ஒன்லீ ப்லாக் :)
நான் சென்னையில் வசிக்க, அவள் மட்டும் திருநெல்வேலியிலேயே இருப்பதை நினைத்தால் பொறாமையாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் அவளாவது ஊரில் இருக்கிறாளே, எப்போது போனாலும் சந்திக்கலாம் என்று நினைக்கையில் ஒரு ஆறுதல். இருவருக்கும் வாழ்க்கை வெவ்வேறு திசைகளில் பயணிப்பதைப் போல் தெரிந்தாலும் எங்கள் நட்பு பிரிந்துவிடுமா, விரிசல் வருமா என்னும் சந்தேகங்கள் எல்லாம் பறந்துவிட்டன. உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் அவளிடமிருந்து நானோ என்னிடமிருந்து அவளோ தப்பிப்பது கடினம் தான் :) பிகாஸ், டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் சோ மச் யா!
என் சந்தோஷங்களைக் கடைசியாகப் பகிர்ந்து கொள்பவள் அவள் என்றாலும் என் துக்கங்களுக்கு அவளே முதலில் தோள் கொடுப்பவள். We have laughed many of our sorrows off together.
அவள் இல்லாமல் சில துயர்களை நான் கடந்திருக்க முடியாது. என் வலிகளை வலிந்து வாங்கிக் கொள்பவள்; என் பசியைப் பொறுக்க மாட்டாதவள்; என் புன்னகையில் சிரிப்பவள்; என் தனிமையில் தொல்லை செய்பவள்; எப்போதும் எனக்காகக் காத்திருப்பவள்; எத்தனைக் காலம் கழித்துப் பேசினாலும் அதே சிரிப்புடன் நலம் விசாரிக்க அவளால் மட்டுமே முடிந்திருக்கிறது; அவளிடம் பேசும் எவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்; அழகானவள்; அவளைச் சார்ந்த எல்லாமே அழகாகத் தான் இருக்கின்றன. அவள் வாழ்வும் அழகாகவே செல்ல வேண்டும் என்று இந்நொடியில் பிரார்த்திக்கிறேன். ஆம்.. இன்று சித்ரா பௌர்ணமி. சித்ரா பிறந்தநாள்.
பின்குறிப்பு: “சுபா.. உன் கல்யாணத்துக்குக் கையில ஒன்னு இடுப்புல ஒன்னாத் தான் வரணும்” என்ற உனது வேண்டுதல் விரைவில் பலிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் :) He hee.. I miss u.. :(
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
உங்க ரெண்டு பேருடைய பெயரும் "த்ரா"தான் முடியுது. :)
உங்க தோழிக்கு ஒரு "ஹாய்" சொல்லச் சொன்னதா சொல்லுங்க.
மற்றபடி தோழிகளுக்கு இடையே எனக்கென்ன வேலை? இப்போதைக்கு இடத்தைக் காலி பண்ணிடுறேன். :)
hi..
How are you?
-Viveka
@வருண்
Hi Varun,
Actually என் பெயர் சுபத்ரா தேவி, அவள் பெயர் சித்ரா தேவி :) அவள் இந்தப் பதிவைப் படிப்பாள்.. Thanks
@Viveka Ram
hi Viveka, I am good, how r u?
வணக்கம்
எல்லாம் நல்லபடியாக நடக்க எல்லாம் அவன் செயல்.. வாழ்க வளமுடன்...
நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
@ரூபன்
Thanks :)
அவளிடம் பேசும் எவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்; அழகானவள்; அவளைச் சார்ந்த எல்லாமே அழகாகத் தான் இருக்கின்றன. அவள் வாழ்வும் அழகாகவே செல்ல வேண்டும் என்று இந்நொடியில் பிரார்த்திக்கிறேன்......மிகுந்த கனமான வரிகள் ...உங்கள் தோழமை மேலும் வளர வாழ்த்துக்கள்
@எனக்கும் தமிழ் எழுத வருமா ???
மிக்க நன்றி!
Hi Subathra.. Good to see that you are still blogging... I'm giving you same comments as your friend gave..Get Married soon...
@Mugilan
Thanks. How r u?
I'm doing great Subathra!
@Mugilan
:)
Post a Comment