There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

மௌனக் கவி!!

Nov 30, 2010

என் ப்ரிய தோழி ’சித்ரா’வின் அம்மா திருமதி.சுஜாதா (அவர்கள் கூட எனக்குத் தோழி தான்) தான் பத்தாம் வகுப்பு படிக்கையில் எழுதிய கவிதை :-)

இங்கு தான் முதலில் மேடையேறுகிறது ;-) படித்துவிட்டுக் கண்டிப்பாகக் கருத்துகளைக் கூறுங்கள் :-)


யிலதன் நடனம் மாரியிற் கண்டேன்!
மாங்குயில் கீதம் மாலையிற் கேட்டேன்!
மிதந்திடும் நாவாய் கடலினிற் கண்டேன்!
மீட்டிநல் இசையினை வீணையிற் கேட்டேன்!
முக்கனிச் சாற்றினில் நற்சுவை கண்டேன்!
மூதாட்டிச் சொல்லினில் அனுபவம் கேட்டேன்!
மென்மை என்பதை மலர்களிற் கண்டேன்!
மேகநிற அழகினிற் கண்ணனைக் கண்டேன்!
மைநிற விழிகளில் மானினம் கண்டேன்!
மொட்டு மலர்களில் யௌவனம் கண்டேன்!
மோகனம் என்பதை நற்காதலிற் கண்டேன்!
மௌனமாய் என்மனம் கவியாகக் கண்டேன்!

நன்றி சுஜா ஆன்டி!
*

12 comments:

மாணவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கவிதை அருமை,

வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

"ம"கரத்தில கவிதை மரகதமா ஒளி வீசுது.. என்னோட வாழ்த்தையும் சொல்லிடுங்க
//பத்தாம் வகுப்பு படிக்கையில் //
பத்தாம் வகுப்புலயே இவ்ளோ ஆழமான மொழி ஆளுமை!
அவங்களோட இப்போதைய கவிதைகளையும் வெளியிடுங்க, ரொம்ப ஆர்வமா இருக்கேன் :)

sathishsangkavi.blogspot.com said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//மோகனம் என்பதை நற்காதலிற் கண்டேன்!
மௌனமாய் என்மனம் கவியாகக் கண்டேன்!//

அழகான வரிகள்....

ஜெயந்த் கிருஷ்ணா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

nallaayirukku..

தமிழ்க்காதலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதலில் முயலும் விதம் தெரிகிறது. நல்ல "ம" கரங்களில் மயங்கும் கவிதை. வாழ்த்துக்கள். தூயத் தமிழ் ரசித்தேன். வலிமையான சிந்தனையில் மென்மையான கவிதைகள்.

Subramanian arasalwar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Fantastic...Many more such talents never got a platform to express themselves in previous generation...

Tell ur aunt that Late a vanthalum, it still sounds like latest...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

nallaa irukku. vazhthukkal

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ethu engio ketathu pola erukku

aanl nalla erukku

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ மாணவன்
நன்றி!

@ Balaji saravana
சொல்லியாச்சு. உங்களது கமெண்ட்டை அவர்களிடம் படித்துக் காட்டினேன். மகிழ்ச்சியடைந்தார்கள். நன்றி!!
நானும் அடுத்தடுத்து அவர்கள் கவிதையை எதிர்பார்த்து.

@ சங்கவி
நன்றி! :-)

@ வெறும்பெய
நன்றி! :-)

@ தமிழ்க்காதலன்
நன்றி! :-)

@ Subramanian arasalwar
Thank You! I have conveyed ur msg to her. And also have suggested her to open a blogspot for herself :-)

@ ரமேஷ்
நன்றி! :-)

@ siva
நன்றி! :-) தெரிந்த வார்த்தைகள் தெரியாத கவிதை.

selva ganapathy said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

kandadhayum kettadhayum kavidhaithuvamaai kooriyullargal....

kalaasal :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@selva ganapathy

மிக்க நன்றிங்க !!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@திகழ்

ஆமா திகழ். நன்றி..