டேபிள் ரோஸ்
Nov 27, 2010
டிஸ்கி: பிசியா இருக்குறவங்க, மொக்கைப் பதிவு படிக்காதவங்க....சாரி பிடிக்காதவங்க யாரும் இதப் படிக்கவும் வேண்டாம். படிச்சதுக்கு அப்புறம் என்னைத் திட்டவும் வேண்டாம். அப்படியே போயிருங்க :-) Others may go ahead :-)
இதுவும் டார்ட்டாய்ஸ் தான். பொதுவாவே ‘பூ’ன்னாலே பெண்களுக்குப் ரொம்பப் பிடிக்கும். அதுவும் சின்ன பெண்களுக்கு? கேட்கவே வேண்டாம். பாய்கட் பண்ணியிருந்தாலோ பாப்கட் பண்ணியிருந்தாலோ கூட வச்சுவிட சொல்லி அடம்பிடிக்கும். நானும் அப்படித்தான் இருந்தேன் :-)
இப்பவும் அப்படித்தான் இருக்கேன் :-)
மல்லிகை, பிச்சி, முல்லை, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ, செவ்வந்தி(மஞ்சள், வெள்ளை) தலையில் வைத்துக்கொள்ளப்படும் பொதுவான பூக்கள் இவை. மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் மூன்றும் சாதாரணமாகக் கிடைக்கக் கூடியவை(அந்த வயதில்). சனிக்கிழமை கலர்டிரஸ்-னாலே அம்மா வச்சு விடுவாங்க. என் தோழிகள் எல்லாருமே அப்படித்தான். சில பேர் கலர் கலரா டிரஸ்-கு மேட்சிங்கா டிசம்பர் பூ வச்சிட்டு வருவாங்க.
அப்போ எங்க வீட்டுல ரோஜாச்செடி கிடையாது. ஆனா என் தோழிகள் வச்சிட்டு வர்ற ரோஜாப் பூக்களைப் பார்த்து ரொம்ப ஆசையா இருக்கும். அம்மா கிட்ட கேட்கவும் மாட்டேன். ரோஜாச் செடியை மாதிரியே குட்டியாச் சின்னதா அழகா இன்னொரு பூ இருக்கும். அது ‘டேபிள் ரோஸ்’. ‘பட்டன் ரோஸ்’னும் சொல்வாங்களோ?? அம்மா...எனக்குக் கொள்ளை ஆசை. அதுலயே நிறைய வெரைட்டி உண்டு. ஒரே இதழ் வரிசையில் இருக்குற மாதிரி ஒரு வெரைட்டி உண்டு. ஆனா எனக்குப் பிடிச்சது உண்மையான ரோஜா மாதிரியே அடுக்காக அழகாக இருக்கும் அந்த வெரைட்டி தான் :-) வெள்ளை, பிங்க், மஞ்சள்-னு விதவிதமா இருக்கும். எது கிடைச்சாலும் ஓ.கே. தான்.
இந்த டேபிள் ரோஸ் கடையில் கிடைக்காது. எப்போ எங்க கிடைக்கும்னும் சொல்ல முடியாது. திடீர்னு என் தம்பி கொத்தாகப் பறிச்சிட்டு வருவான். ஐய்யோ.. அதப் பார்க்குறதுக்கு அவ்வளவு அழகாக இருக்கும். அதுல ஒரே ஒரு வருத்தம் என்னன்னா டேபிள் ரோஸ்-அ தலையில் வச்சிக்க முடியாது. பார்க்கிறவங்க சிரிப்பாங்களாம். அதனால கையிலயே வச்சிப் பார்த்துட்டு இருப்போம். சீக்கிரம் வாடி வேறப் போயிரும். வாடினதுக்கு அப்புறம் அதைக் கையில தேய்ச்சு ரோஸ் கலர் பூவை உதட்டுல கொஞ்சம் லிப்ஸ்டிக் மாதிரி தேய்ச்சு விளையாடுவோம். அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அப்புறம் வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட கிடைக்கிற அடி வேற விஷயம் :-)
எல்.கே.ஜி யில் இருந்து 6-ம் வகுப்பு வரை நான் படிச்சது புனித காணிக்கை அன்னை மெட்ரிகுலேசன் பள்ளி (Presentation Convent Matriculation School, Udaiyarpatti) அப்பெல்லாம் ஸ்கூல்ல மத்தியானம் லன்ச் இடைவேளையில நிறைய நேரம் இருக்குற மாதிரி தோனும். சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் நான் மட்டும் தனியா காம்பவுண்ட் சுவர் பக்கத்துல இருக்குற காடு மாதிரி புதர் மண்டி கிடக்குற ஒரு இடத்துக்குப் போவேன். அங்க ஒரு பள்ளத்துல டேபிள் ரோஸ் பூத்திருக்கும். அது எனக்கு மட்டும் தான் தெரியும் :-) அதைப் பறிச்சிட்டு வகுப்புக்கு வந்து யார் என்கிட்ட சண்டை போடாம க்ளோஸ் ஃபிரெண்டா இருக்காங்களோ அவங்களுக்குக் கொடுப்பேன் :-)
இப்ப ஏன் ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்லாத இந்த மொக்கைக் கதையைச் சொல்லிட்டு இருக்க-னு கேக்குறீங்களா?? எனக்கு ’ரோஜா’னு ஊர்-ல ஒரு தோழி உண்டு. அவளும் என்னை மாதிரியே ஒரு டேபிள்ரோஸ் ரசிகை. அவள் பேரைக் கேட்டாலே எனக்கு டேபிள் ரோஸ் நியாபகம் வந்திரும். சின்ன வயசுல ஒன்னா விளையாடிட்டு வீட்டுப் பாடம் செஞ்சிட்டு டிவி-ல படம் பார்த்துட்டு ஒன்னாவே இருந்தோம். அப்புறம் நாங்க இருந்த கிராமத்த விட்டு வெளியே தனித்தனியாப் பிரிஞ்சு போயிட்டோம் :-( ஒரு தகவலுமே இல்லாம இருந்தது.
திடீர்னு நேத்து அப்பா ஒரு விஷயம் சொன்னாங்க: “உனக்கு ரோஜா-வ நியாபகம் இருக்கா? சின்ன வயசுல ஒன்னாவே இருப்பீங்க. வழியில தற்செயலா அவங்க அப்பாவைப் பார்த்தேன். அந்தப் பொண்ணுக்குக் கல்யாணமாம்” :-)
சரி, ரோஜாவோட கல்யாணத்துக்கு என்ன பரிசு கொடுக்கலாம்னு நீங்க கொஞ்சம் ஐடியா கொடுங்களேன் ;-) :-)
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஒரு டேபிள் டாப் வெட் கிரைண்டர் பரிசா குடுங்க
டேபிள் ரோஸ் பொக்கே
@ நா.மணிவண்ணன்
நான் பையனுக்குக் கேட்கல..பொண்ணுக்குக் கேட்டேன் ;-)
அவளுக்கு என்ன கொடுக்குறதுனு சொல்லுங்க :-)
@ LK
பொக்கே ரெடி ஆகுறதுக்குள்ள பூ வாடிப் போயிருமே :-(
அனுபவங்களை உணர்வுகளுடன் அழகாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை,
//சரி, ரோஜாவோட கல்யாணத்துக்கு என்ன பரிசு கொடுக்கலாம்னு நீங்க கொஞ்சம் ஐடியா கொடுங்களேன் ;-) :-)//
பொன்னுங்க உங்களுக்கு தெரியாததா எங்களுக்கு தெரியப்போகுது பார்த்து நீங்களே ஏதாவது தேர்வு செய்து கொடுத்திடுங்க, நாங்களே யாருக்காவது பரிசு கொடுக்க எங்க தோழியதான் ஐடியா கேக்குறோம் அதனால உங்கள் choice...
அப்புறம் உங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்
@ மாணவன்
வாழ்த்துகளுக்கு நன்றி மாணவன் :-)
நானும் உங்கமாதிரிதான்...
பரிட்சைக்குப்போகும்போது கட்டாயம் பூவச்சுக்கணும்னு ஒரு சென்டிமென்ட் வேற :)
உங்க தோழிக்கு வாழ்த்துக்கள்!
மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் சந்திக்கிறேன். கொஞ்சம் சிந்திக்கிறேன். இந்த டேபில் ரோஜா பூவை நானும் வீட்டில் வளர்த்திருக்கிறேன். "பட்டு ரோஜா" என்று பெயர். கொள்ளை அழகுதான். பூக்களை செடியோடு பார்க்க பரவசம் பூக்கும். பறிப்பதில்லை.
உங்க தோழிக்கு வாழ்த்துக்கள். நல்ல வாழ்க்கை அமைய...., சீறும் சிறப்பும் பெற... இறையருளில்....வாழ்த்துக்கள்.
பரிசுக் கேட்டீங்கதானே.... ( உங்க புன்னகை ஒன்னு போதாதா.... ஹி..ஹி..ஹி சும்மா.. )
உங்க மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு நல்ல புடவை, உங்கள் இருவர் இரசனைக்கும் ஏற்றார் போல் டிசைன் புடவை, அல்லது நினைவில் நிற்கும் படி... சின்னதாய்... ஒரு மோதிரம், மூக்குத்தி,... இப்படி.., அல்லது... பல உள்ளர்த்தம் காட்டும்... ஆழமான பொருள் தரும்... "கண்ணாடி" ( கொஞ்சம் நல்ல தரமானதாய் ) தரலாம். கண்ணாடிப் பார்க்கப் படும் பொழுதெல்லாம் பார்ப்பவரின்... நிசத்தையும், அழகையும் காட்டி, அதை பரிசுக் கொடுத்தவரின் அன்பை காட்டி, அடிக்கடி ஞாபகப்படுத்தும்.
என்ன ஐடியா ஒ.கே வாங்க....
poi saptu..kaiya koduthutu vaaanga boss...
enna athu kodukirathu vangarthu ellam...
@ சுந்தரா
நன்றி! :) Same Pinch :)
@ தமிழ்க்காதலன்
அழகான ஐடியாக்கள் கொடுத்ததற்கு நன்றி!
கண்ணாடி எனக்கு மிகவும் பிடித்துள்ளது :)
@ siva
போக முடியலயேனு தான் என் சார்பா பரிசுங்க.. :)
Post a Comment