முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாழ்த்துகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வானவில் நீயோ..

என் இனிய சித்ரா, நலம் நலமறிய ஆவல். வருடா வருடம் உன் பிறந்தநாளின் போது சிறிது நேரம் ஒதுக்கி, நாம் கடந்து வந்த காலங்களை எண்ணிப் பார்ப்பது வழக்கம். இன்றும் அப்படியே. நாம் சந்தித்து ஏறத்தாழ 13 ஆண்டுகள் ஆகின்றன. பெண்களின் நட்பு நீடித்திருக்காது என்பதற்கு மாறாக இன்று வரை நாம் அதே நட்போடும் பரிவோடும் பழகி வருகிறோம். இதைப் பற்றிப் பேசுவது கூட இதுதான் முதல் முறையாக இருக்கும். ஏன் என்றால், எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசும் நாம், நம் இருவரின் நட்பு பற்றியோ, அது எதுவரை நிலைத்திருக்கும் என்பது பற்றியோ, எவ்வாறு தொடர்பிலேயே இருப்பது என்பது பற்றியோ, ‘இந்த உலகத்துலேயே நீ தான் எனக்கு பெஸ்ஸ்ஸ்ட் ஃப்ரெண்ட்’ என்பது போலவோ பேசியதில்லை. அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. நம் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது இதன் அர்த்தமாகாது. மாறாக, புரிதல் உள்ள உறவுகளுக்குள் பிரிவேதுமில்லை என்ற நம்பிக்கை தான் அதற்குக் காரணம். நம் நட்பை வழிநடத்திச் செல்வதும் அதுவே தான்.

தந்தையர் தின வாழ்த்துகள் :)

Thank U Paaaa...!

தேவதை வம்சம் நீயோ!

அப்போது பன்னிரெண்டாம் வகுப்பு . புதிதாக வீடு மாறிய சமயம் . பள்ளி முடிந்து நேராகப் புதுவீட்டுக்குப் போகத் தெரியாது . “நானே வந்திருதேன்ப்பா” என்று வேறு அப்பாவிடம் சொல்லியிருந்தேன் . மாலை ஆறு மணி ஆகியிருந்தது . எந்த பஸ் .. எந்த ஸ்டாப்பிங் என எல்லாம் கேட்டு வைத்திருந்தாலும் தனியே போவதற்குத் தயக்கம் . இருட்ட ஆரம்பித்திருந்த வேளையில் வகுப்பில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்க , “அந்த லாஸ்ட் பெஞ்ச்ல சித்ரா தேவினு ஒரு பொண்ணு இருக்காள்ல .. அவளும் கே . டி . சி . நகர் தான் . அவகிட்ட கேட்டுப் பாரு” என்று சொல்ல அவளைத் திரும்பிப் பார்த்தேன் .

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

அந்தா இந்தானு சொல்லி கடைசில தீபாவளி நாளைக்கே வரப்போவுது. மூனு வருஷம் குஜராத்ல தீபாவளி கொண்டாடிட்டு இப்பம் தான் திருநெல்வேலில அம்மா அப்பா தம்பிகளோட இந்த வருஷத் தீபாவளியைக் கொண்டாடப் போறேன். அதனால பயங்கர சந்தோஷத்துல இருக்கேன். வீட்டுல நாளைக்கு என்ன ‘ஸ்பெஷல்’னு இன்னுந் தெரியல. நானே குலாப் ஜாமூன் மிக்ஸ் வச்சு முதன்முறையா ஸ்வீட் செய்யலாம்னு ப்ளான். பார்க்கலாம். முன்னாடியே போயிருந்தா பக்கத்து வீட்டுக் குட்டீஸ்க்கு மெஹந்தி வச்சு உட்ருக்கலாம். தப்பிச்சிட்டாங்க ;-)       அத சாப்டு இத சாப்டுனு சொல்ற அம்மா, டிவி ப்ரொகிராம் பார்த்து கமெண்ட்ஸ் சொல்லிட்டு இருக்குற அப்பா, கைய புடிச்சு இழுத்துட்டுப் போய் வெடி(பட்டாசு) போட வைக்கிற தம்பி, மஞ்சள் தடவுன புது டிரெஸ்ல ரவுண்ட்ஸ் வர்ற சின்ன பிள்ளைங்க, ஃப்ரெண்ட்ஸ்னு சந்தோஷமா இருக்கப் போகுது. அதே சந்தோஷத்தோட உங்களுக்கும் என் மனம் நிறைந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

குஜராத்திலிருந்து

 இப்பொழுது தான் 12-01-2011 அன்று அபியின் 18-வது பிறந்தநாளுக்கு வாழ்த்தியது போல் இருக்கிறது. அதற்குள்ளே அவனுக்கு 19-வது பிறந்தநாளும் முடிந்துவிட்டது. பொங்கலும் வந்துவிட்டது! இந்த வருடம் பொங்கலுக்கு நான் ஊருக்குப் போகாதது வருத்தம் தான். யோசித்து பார்த்தால் நான் ஊரை மிஸ் பண்ணுவதை விட வீட்டில் அம்மாவும் அபியும் மிகவும் மிஸ் பண்ணுவார்கள் என நினைக்கிறேன். அப்படி என்ன தீபாவளிக்கு இல்லாதது பொங்கலுக்கு என்று கேட்கிறீர்களா? அது.. வருடத்துக்கு ஒரு முறை, பொங்கலுக்கு முதல்நாள் இராத்திரி தான் நான் கோலம் போடுவேன். அம்மா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வாசலைப் பெருக்கிக் கோலம் போடுவதற்கு ஏதுவாக ஏற்படுத்திக் கொடுத்த பின்னர், ஸ்கார்ஃப் எடுத்துத் தலையில் கட்டிவிட்டு கோலப்பொடிகளைத் தயார்நிலையில் வைத்து, அபியிடம் சொல்லி FM ரேடியோவை வாசலுக்கு அருகே மிகவும் சத்தமாக ஆன் செய்து வைத்துவிட்டுக் கோலம் போடுவதற்கு அமர்ந்தால் மணி 11 ஆகியிருக்கும். அதற்கு முன்னரே நான் என் கோலம் நோட்டை எடுத்து என்ன கோலம் போடவேண்டும் என முடிவு செய்து ஓரிரு முறை காகிதத்தில் வரைந்தும் பார்த்துப் பழகியிருப்பேன். அப்படியே 11 மணி...

வேற கலர் இருக்கா?

வணக்கம்!       இன்னைக்கு ஆகஸ்ட் 15, சுதந்தரதினம். சுதந்தரதினமும் அதுவுமா ப்ளாக்ல போஸ்ட் போடலன்னா நம்மள யாரும் ‘பிரபல பதிவர்’னு ஏத்துக்க மாட்டாங்க. அதோட சகபதிவர்களுக்கு வாழ்த்துகள் வேற சொல்லனும் இல்லையா. அதுக்காகத் தான் இந்தப் பதிவு. யாரோட தொல்லையும் இல்லாம நிம்மதியா சுதந்தரமா தூங்கி எழுந்தது தான் இன்னைக்கு ஸ்பெஷல்! நண்பர்களுக்கு எல்லாம் வாழ்த்துகள் சொல்லி குறுந்தகவல்கள் அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இணையத்திற்கு இணைப்பு கொடுத்தேன். நம்ம ப்ளாகர்ஸ் எல்லாம் சுதந்தரதின ஸ்பெஷலா வித்யாசமா கலக்கியிருப்பாங்களேனு தேடிப் பார்த்தேன். சிலர் ரொம்ப அழகா எழுதியிருந்தாங்க. நாட்டுக்காக நாம என்னல்லாம் செய்யனும்னு லிஸ்ட் போட்டிருந்தாங்க. 'படிக்க' ரொம்ப நல்லா இருந்தது :-)       அப்புறம் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் செங்கோட்டையில் வைத்து ஆற்றியிருந்த உரையை ப் படித்தேன். ஏனோ மிகவும் சோகமாக இருந்தது. நிறைய விஷயங்கள் பற்றிப் பேசியிருந்தாலும் ‘ஊழல்’ பற்றிய பகுதிகள் தான் கவனத்தைத் தூண்டின. கடந்த சில காலமாக நம் நாட்டில் ...

ஆகாசவாணி அனுபவம்

வணக்கம்! பரீட்சை ஒன்றை எதிர்கொள்ள உள்ளதால் வலைப்பூ பக்கமே வரமுடியவில்லை :-) இந்த மாதம் முழுவதும் அப்படித்தான். சரி இங்கே எழுத முடியாவிட்டாலும் இட்லிவடையில் எனது பதிவு ஒன்று வெளியாகியிருக்கிறது! ஆல் இண்டியா ரேடியோ திருநெல்வேலி வானொலி நிலையத்தில் நான் நிகழ்ச்சிகள் புரிந்த அனுபவம் பற்றி ஒரு கட்டுரை. அதன் லின்க் கீழே: நான் சுபத்ரா பேசுறேன் !   படிச்சிட்டு கமெண்ட் பண்ணுவீங்கனு எதிர்பார்க்கிறேன்.. நன்றி :-)   Special Thanks : Idlyvadai- இட்லிவடை சமூக விழிப்புணர்வு சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டு வரும் கழுகு வலைத்தளத்திற்கு வாழ்த்துகள்...! வலை : கழுகு Forum : kazhuhu Group க ட்ட ுர ை க ீழ ே:   ரேடியோ கேட்டிருப்பீர்கள், ரேடியோ ஸ்டேஷன் பார்த்திருக்கிறீங்களா? நான் பார்த்திருக்கிறேன் ஏன் ரேடியோவில் பேசியே இருக்கிறேன்! நான் கொடுத்த முதல் நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது. எனக்கு மறதியும் சந்தேகமும் ஒட்டிக்கொண்டு பிறந்தவை. வீட்டைவிட்டு வெளியே கிளம்பி சற்றுத் தூரம் நடந்து வந்தபின்தான் பொட்டு வைத்துக்கொண்டோமா என்ற சந்தேகம் வரும்; கேஸ் ...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

அதுக்குள்ள வளர்ந்துட்டியே அபி..! என் கண் முன்னால் பிறந்து வளர்ந்து இப்பொழுது 18 வயதைத் (பிறந்த நாள்: 12-01-1994 ) தொட்டு நிற்கும் என் அன்புத் தம்பி அபினேஷ் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....! நம்ம விவேக் குக் (சுவாமி விவேகானந்தர் தாங்க! பிறந்த தினம்: 12-01-1863 ) கூட இன்னைக்குத் தான் பிறந்த நாள்....! :-) இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! பி.கு.: 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் உனக்கு எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.  STOP NOT TILL UR GOAL IS REACHED HAPPY BIRTHDAY TO YOU! * *

Happy New Year !

Happy New Year நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவை நேரே இன்றெனக்குத் தருவாய்-என்தன் முன்னைத் தீயவினைப் பயன்கள்-இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி என்னைப் புதியவுயி ராக்கி-எனக் கேதுங் கவலையறச் செய்து-மதி தன்னை மிகத்தெளிவு செய்து-என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்! தோளை வலியுடைய தாக்கி-உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி-அரி வாளைக் கொண்டுபிளந் தாலும்-கட்டு மாறா வுடலுறுதி தந்து-சுடர் நாளைக் கண்டதோர் மலர்போல்-ஒளி நண்ணித் திகழும்முகந் தந்து-மத வேலை வெல்லும்முறை கூறித்-தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும் தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும் தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும் - மகாகவி பாரதியார் **********   நன்றி : எனது கட்டுரையை வெளியிட்டு இந்தப் புத்தாண்டை மகிழ்வுடன் துவக்கிவைத்த ”இட்லிவடை”க்கு எனது மனமார்ந்த நன்றி!!!   அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Wishes :)

நூறாவது பதிவை க் காணும் என் அன்புத் தோழி “ பொன்மலர் ”க்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்....!! கணினி மென்பொருள்கள், தொழில்நுட்பம் பற்றிப் பல தரமான பதிவுகளை வாசகர்களுக்குத் தரும் அவளுடைய முயற்சிக்கு என் வணக்கங்கள்!! வாழ்த்துகள்!!!

வாழ்த்துகள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் . HAPPY DIWALI அன்புடன் சுபத்ரா :-) * *