வணக்கம் ! இப்போதான் தோசை + சாம்பார் செஞ்சு ரூம்மேட்டுக்கும் கொடுத்துட்டு நானும் சாப்பிட்டுட்டு வர்றேன் :) அது இருக்கட்டும் .. UNESCO அமைப்பு இன்னும் 50 ஆண்டுகளில் அழிய வாய்ப்பிருக்கும் மொழிகளாக நம் தங்கத் “ தமிழை ” யும் அறிவிச்சிருக்கிறதைக் கேட்டீங்களா ? செய்தியைக் கேட்டதிலிருந்து எனக்கு பயங்கர அதிர்ச்சி . யோசித்துப் பார்த்தால் பயமாகத் தான் இருக்கிறது . என்னதான் தமிழில் நமக்கே தெரியாத மாதிரி சான்ஸ்க்ரிட் கலந்திருந்தாலும் அட்லீஸ்ட் இங்கிலீஷ் கலக்காத தமிழில் ஒரு செண்டென்ஸாவது நாம் பேசுகிறோமா னு தின்க் பண்ணிப் பார்த்தால் ஆன்ஸர் நெகட்டிவாகத் தான் வருகிறது ! ( ஹய்ய்ய்யோ ...!!!) இதுபத்தி விரிவான பதிவு அப்புறமா எழுதுறேன் .. இப்போ வழக்கம்போல என்னோட சுயபிரதாபம் தான் :) “ இன்னைக்கு என்ன சுபத்ரா ?” னு கேக்குறீங்களா ? ‘” கேட்கலையே’னு சொன்னா விடவா போற ’ னு நொந்துகிறவங்களே .. Excuse me! மேல படி...
Hi from a Hikikomori 🐌