ஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா ? பொதுவாக இந்தப் பாடங்கள் இணையத்தில் ஆங்கிலத்தில் தான் அதிகம் கிடைக்கின்றன . தமிழில் தேடுபவர்களுக்காக இது :-) நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் – இதில் வரும் பாடங்களில் நல்ல materials கிடைத்தால் சிரமம் பாராமல் எனக்கு subadhra23@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள் .. ப்ளீஸ் . தமிழ் முதல் தாள் UPSC Tamil optional syllabus Tamil I paper பிரிவு -A பகுதி : 1 தமிழ் மொழி வரலாறு முதன்மையான இந்திய மொழிக் குடும்பங்கள் - இந்திய மொழிகளுக்கிடையே பொது நிலையிலும் சிறப்பாக திராவிட மொழிகளிடையிலும் தமிழ்மொழி பெருமிடம் - திராவிட மொழிகளின் வகைப்பாடும் அவை பரவியுள்ள தன்மையும் . சங்ககாலத் தமிழ் - இடைக்காலத் தமிழ் – பல்லவர் காலத் தமிழ் மொழி அமைப்பு மட்டும் - தமிழில் பெயர் , வினை , பெயரடை , வினையடை , கால இடைநிலைகள் மற்றும் வேற்றுமை உருபுகள...