முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உதவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Help Please!

பொதுவா Picasa நான் அவ்வளவா use பண்றதில்ல . திடீர்னு ஒரு நாள் என்னோட Picasa Account- க்குப் போய் பார்த்தேனா .. அங்க என்னோட blog posts- ல உபயோகப்படுத்தின புகைப்படங்கள் எல்லாம் தானாவே upload ஆகி இருந்தது . சரி இங்க எதுக்கு வேஸ்ட்டா இருக்குனு எல்லாத்தையும் delete பண்ணிட்டேன் :) :) அடுத்த நாள் என் blog திறந்து பார்த்தா ஒரு படத்தையும் காணோம் :( படத்துக்குப் பதிலா எங்க பார்த்தாலும் ஒரு grey minus symbol வெச்ச படம் தான் இருந்தது . எனக்கு அப்படியே அழனும் போல இருந்தது :( நிறைய google பண்ணிப் பார்த்தேன் . Recovery Options இல்லைனு தெரிஞ்சது :) சரி இனிமேல் என்ன செய்றது .. Exam முடிஞ்ச உடனே எல்லாப் பதிவிலும் புதுசா upload பண்ண வேண்டியது தான்னு நினைச்சு விட்டுட்டேன் . Widgets- ல படம் வராத மாதிரி settings மாத்தியிருக்கேன் . Actually எல்லாப் பதிவிலும் முதல் படம் மட்டும் தான் இந்த மாதிரி ஆனது . வேற படங்கள் எல்லாம் அப்படியே தான் இருக்கு . அதோட நான் மொத்தமே 80 பதிவு தான் போட்டிருக்கேன் ;) அதனால தப்பிச்சேன் .....

IAS தேர்வில் தமிழ் மாணவர்கள்

இந்த வருடத்திற்கான இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பை UPSC நேற்று வெளியிட்டது . ஏறத்தாழ 1000 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வுக்குப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . வேறு சிறப்புத் தகுதிகள் எவையும் தேவையில்லை . தேர்வில் தோன்றுவதற்கான வயது வரம்பு , தேர்விற்கான பாடத்திட்டம் , தேர்வு மையங்கள் போன்ற தகவல்களை அறிவிப்பைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் .

பதிவுலகத் தோழர்களே..

என்னவோ நான்  “ இது கதையல்ல நிஜம் ”னு ஒரு பதிவு போட்டதைப் பத்தி.. ”இதெல்லாம் பொய், நம்பாதே.. ரொம்ப அப்பாவியா இருக்க.. அவங்கள பிச்சையெடுக்குறதுக்கு ஊக்குவிக்காத..” அப்படின்னும் ”சே.. என்ன ஒரு தாராள குணம்.. பத்து ரூபா கொடுத்திருக்கியே..” அப்படினு எல்லாம் நிறைய டையலாக் பேசினீங்களே.. மகா ஜனங்களே.. இங்க வாங்க. இதக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க. http://gconnect.in/gc/lifestyle/get-ahead/narayanan-krishnan-hero-of-india.html 2002-ம் ஆண்டில் உயர்தர நட்சத்திர உணவகங்களில் பணிபுரியும் சமையல்காரர்களுக்கான (Chef) சிறந்த விருதைப் பெற்று சுவிட்சர்லாந்து சென்று வேலை பார்க்கும் ஒரு அருமையான வாய்ப்பை பெற்றார் நம் கதையின் ஹீரோ.  சரி.. சுவிட்சர்லாந்து போறதுக்கு முன்னாடி நம்ம ஊருக்குப் போவேமேனு போயிருக்கார். மதுரையில் இருக்கிற ஏதோ ஒரு கோயிலுக்குப் போற வழியில ஒரு பாலத்துக்கு அடியில ஒரு காட்சியப் பார்த்திருக்கார். அங்க ஒரு வயதான மனிதர் பசியில.. சாப்பிடுறதுக்கு ஒன்னுமில்லாம தன்னோட கழிவைத் தானே சாப்பிட்டுட்டு இருந்திருக்கார். ஃபிரண்ட்ஸ்.. நான் கேக்குறேன்.. நம்மில் யாரோ ஒருத்தர் இதே காட்சியப் பார்...