There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

IAS தேர்வில் தமிழ் மாணவர்கள்

Mar 6, 2013




இந்த வருடத்திற்கான இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பை UPSC நேற்று வெளியிட்டது. ஏறத்தாழ 1000 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வுக்குப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வேறு சிறப்புத் தகுதிகள் எவையும் தேவையில்லை. தேர்வில் தோன்றுவதற்கான வயது வரம்பு, தேர்விற்கான பாடத்திட்டம், தேர்வு மையங்கள் போன்ற தகவல்களை அறிவிப்பைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

IAS, IFS, IPS உள்ளிட்ட நாட்டின் மிகமுக்கிய Group ‘A’ மற்றும் சில Group ‘B’ குடிமைப் பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் இத்தேர்வு இவ்வருடம் மே மாதம் 26ம் தேதி நடத்தப்படவிருக்கிறது. இந்தியா முழுவதிலும் இருந்து அதிக அளவில் பட்டதாரிகள் இத்தேர்வில் கலந்து கொள்ளும் பலத்த போட்டி நிலவுவதாலும் தேர்வு முறையைப் பற்றிய சில வாதங்கள் அவ்வப்போது எழுந்து வருவதாலும் முக்கியத் தேர்வில் (Main Examination) சில மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக ஆணையம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து 2014 ஆம் வருடத்தில் பாடத்திட்டம் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான அறிவிப்பு குறிப்பிடப்பட்ட தினத்தில் வெளியாகாமல் காலம் தாழ்ந்து வரவிருந்ததால் 2013 ஆம் வருடமே மாற்றங்கள் வரும் எனத் தெரிந்துவிட்டது.

இச்சூழ்நிலையில் தான் நேற்று (05.03.2013) அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதநிலைத் தேர்வு (Preliminary Examination), முக்கியத் தேர்வு (Main Examination), நேர்முகத் தேர்வு (Personality Test or Interview) என மூன்று கட்டங்களாக நடத்தப்படும் அவ்வப்போது மாற்றங்களைச் சந்தித்துவரும் இத்தேர்வில் முதநிலைத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டன. அதே வரிசையில் இப்போது முக்கியத் தேர்வின் பாடத் திட்டங்களும் சிறிது மாற்றங்களுடன் வெளிவந்துள்ளன.

பழைய முறை:
ஆங்கிலம், தமிழ், கட்டுரை, General Studies மற்றும் இரண்டு விருப்பப் பாடங்கள் ஆகியவை முக்கியத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருந்து வந்தன. இவற்றுள் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி (நமக்குத் தமிழ்) இரண்டும் Qualifying Papers. இவை இரண்டிலும் போதிய மதிப்பெண்கள் எடுத்திருந்தால் தான் விண்ணப்பதாரரின் மற்ற தாள்கள் திருத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். மீதம் இருக்கும் கட்டுரைத் தாள் + GS இன் இரண்டு தாள்கள் + இரண்டு விருப்பப் பாடங்களுக்குமான தலா இரண்டு தாள்கள் என மொத்தம் நான்கு தாள்கள் ஆகியவற்றின் மதிப்பெண்கள் மட்டுமே போட்டிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

மேலும் ஆங்கிலப் புலமை போதிய அளவில் இல்லாதவர்களும் பள்ளிகள்/கல்லூரிகளில் பிராந்திய மொழி மூலம் கல்வி கற்றவர்களையும் இத்தேர்வில் உற்சாகப்படுத்தும் விதமாகக் கொடுக்கப்பட்டுள்ள 22 இந்திய மொழிகளுள் ஏதாவது ஒன்றை Medium ஆகத் தெரிவு செய்து தேர்வெழுதலாம் எனவும் இருந்தது. பொதுவாகக் கேள்வித்தாளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தி மற்றும் பொது மொழியான ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே கேள்விகள் அமையப் பெற்றிருக்கும். ஆனால் உதாரணத்திற்கு, தமிழ் மீடியத்தைத் தேர்வு செய்திருந்தால் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்க, விடைகளை நாம் தமிழிலேயே எழுதலாம் என்ற நிலை இருந்து வந்தது.

மூன்றாவதாக விருப்பப்பாடத் தேர்வு. 25 பாடங்கள் + 23 மொழி இலக்கியங்கள் ஆகியவற்றுள் இருந்து நமக்குப் பிடித்த ஏதேனும் 2 விருப்பப்பாடங்களைச் சில விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

புதிய முறை:
            இவ்வருடத்துக்கான முக்கியத் தேர்வில் Regional Language மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு Qualifying Papers மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. பிராந்திய மொழியை (Tamil as a Qualifying Paper) நீக்கிவிட்டனர். ஆங்கிலத்தில் Comprehension மற்றும் Precis Writing ஆகியவை கொடுக்கப்பட்டு ஆங்கிலத் தாளும் போட்டிக்கான மதிப்பெண்ணில் சேர்த்துக் கொள்ளப்படும். General Studies இரண்டு தாள்களாக இருந்த நிலை மாறித் தற்பொழுது நான்கு தாள்களாக அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தரப்பட்டுள்ளது. முக்கியத் தேர்வுக்கான General Studies தாளிலும் Ethics மற்றும் Aptitude சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

            இரண்டாவது, Medium of Examination. எந்த மொழியிலும் தேர்வெழுதலாம் என இருந்தது அல்லவா? இவ்வருடத்தில் இருந்து இதில் சிறிது மாற்றம். அது என்னவென்றால், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தவிர்த்து, கல்லூரியில் பட்டப்படிப்பை எந்த மீடியத்தில் படித்தோமோ அந்த மீடியத்தில் தான் தேர்வெழுத வேண்டுமாம்! உதாரணத்திற்கு, நான் பள்ளிப்படிப்பு முழுவதும் தமிழ் மீடியத்தில் படித்திருந்தாலும் பட்டப்படிப்பை ஆங்கில மீடியத்தில் படித்துத் தேர்வு பெற்றிருந்தால் என்னால் இந்த IAS தேர்வைத் தமிழில் எழுத முடியாது. ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே எழுத முடியுமாம்.

            ஹிந்தியை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் மற்ற மாநிலத்தவர்க்கு இதனால் சொல்லிக் கொள்ளும்படியான பாதிப்பு ஏதும் இல்லை. நம் தமிழ் மொழியில் Technical Words முழுதாகக் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பெரும்பான்மையான கல்லூரிகள் ஆங்கில மீடியத்திலேயே பட்டப்படிப்பை வழங்குகின்றன. பள்ளி முழுவதிலும் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள் கூட ஆங்கிலம் (தமிழ் தவிர தாம் அறியும் இரண்டாவது மொழி) கற்றுக் கொள்ளக் கிடைக்கும் சந்தர்ப்பமாக எண்ணிக் கல்லூரிகளில் ஆங்கில மீடியத்தையே தேர்வு செய்யும் நிலையில் அவர்களுக்கு அந்த 3 () 4 வருடங்களில் ஆங்கிலத்தில் பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான போதிய தொழில்நுட்ப அறிவு கிட்டுவதில்லை. மேலும் மிகச் சொற்ப அளவிலேயே தமிழ் வழிப் பாடத்திட்டங்களைக் கொண்ட கல்லூரிகள் நம் மாநிலத்தில் உள்ளன.

            இந்த நிலையில் இருக்கும் ஒரு மாணவனை, “கல்லூரியில் நீ ஆங்கில வழிக் கல்வி பயின்று தேரியதால் IAS தேர்விலும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் தேர்வெழுத வேண்டும். தமிழில் எழுதக் கூடாதுஎன்று சொன்னால் ஹிந்தி என்றால் என்னவென்றே தெரியாத அவனது நிலை என்னவாகும்? இன்னொரு விஷயம் என்னவென்றால், முக்கியத் தேர்வில் எம்மொழியில் தேர்வெழுதியிருக்கிறோமோ அதே மொழியில் தான் நேர்முகத் தேர்வும் அமையும். தமிழ் மீடியத்தில் முக்கியத் தேர்வு எழுதினால் மட்டுமே நேர்முகத் தேர்வில் தமிழில் கேள்விகள் கேட்கப்பட்டுத் தமிழில் பதிலளிக்க அனுமதிக்கப்படும். இல்லையென்றால் ஆங்கிலம் () ஹிந்தியில் தான் நேர்முகத் தேர்வு அமைந்திருக்கும். எனவே மேலும் சிக்கல் தான்..

            மூன்றாவதாக, விருப்பப்பாடத் தேர்வு. முன்னாளில் முதனிலைத் தேர்வுக்கும் ஏதாவது ஒரு விருப்பப் பாடத்தைத் தெரிவு செய்து படிக்கும் கட்டாயம் இருந்த போது விருப்பப்பாடப் பட்டியலில் இலக்கியப் பாடங்கள் கொடுக்கப்படவில்லை. இந்த வருடம் முக்கியத் தேர்விலும் ஒரே ஒரு விருப்பப் பாடமே எடுக்க வேண்டும் என்னும் நிலை வரும் பட்சத்தில் அவ்வாறே இலக்கியப் பாடங்கள் இருக்குமா இருக்காதா என யோசித்துக் கொண்டிருந்தோம். பட்டப்படிப்பில் அந்த மொழி இலக்கியத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்திருந்தால் மட்டுமே அம்மொழி இலக்கியத்தை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்யலாம். இல்லையென்றால் இலக்கியப் பாடங்களைத் தேர்வு செய்ய முடியாது என்னும் புதிய முறையும் இவ்வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலக்கியப் பாடங்கள் அதிக மதிப்பெண்களைத் தருவதால் தேர்வாணையம் இம்முடிவை எடுத்திருக்கலாம்.

            General Studies பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததோ, இலக்கியப் பாடங்களைத் தேர்வு செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்ததோ கூட பரவாயில்லை. Medium of Examination இல் செய்துள்ள மாற்றத்தால் ஹிந்தி தெரியாத நம் தமிழ் மாணவர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள் என்னும் உண்மை Union Public Service Commission க்குத் தெரியுமா? தெரிந்து தான் இவ்வாறு செய்துள்ளார்களா? இதனை நம் மாநில அரசு கண்டுகொள்ளுமா? என்னும் கேள்விகள் நம்மைக் கலக்கம் கொள்ளச் செய்கின்றன.

 

7 comments:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Indha padhivai neenga oru IAS adhigaariya porupetru arasaangamun padhivu seiyungal.. Apodhu dhan oru vidivu pirakum endru naan nambugiren...

Erode Nagaraj... said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

is a translation available? to send to a friend of mine

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Anonymous

What till then?

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Erode Nagaraj...

She might have seen the notification by now :-)

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Vetri.. Vetri.. Subadhra IAS Vetri..
"http://timesofindia.indiatimes.com/india/Stung-by-row-UPSC-allows-regional-language-in-Main-exam/articleshow/19118009.cms"

Ennavo sonninga... Ipo happy ah ??

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Anonymous

Yes :) :)

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஐஏஎஸ் பாடத்திட்டம் பதிவிறக்கம் தருக