படம் : ஆயிரத்தில் ஒருவன்
பாடியவர் : Andrea Jeremia
மாலை நேரம்
பாடியவர் : Andrea Jeremia
மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன்..
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே..
இதுதான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா?
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே..
காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே..
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே..
இதம் தருமே..
உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓராயிரம்
பின் இருகரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது..
கனவில் தொலைத்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது..
ஒரு காலையில் நீயில்லை
தேடவும் மனம் வரவில்லை
விடிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேனடா..
காதல் இங்கு ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே..
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே..
இதம் தருமே..
ஒருமுறை வாசலில்
நீயாய் வந்தால் என்ன..
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன..
இருமனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்துக் கொண்டால் என்ன..
இருதிசைப் பறவைகள் இணைந்தே
விண்ணில் சென்றால் என்ன..
என் தேடல்கள் நீயில்லை
உன் கனவுகள் நானில்லை
இருவிழிப் பார்வையில்
நாம் உருகி நின்றாலென்ன...
மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன்..
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே..
சிறுமேகம் போலே
மிதக்கிறேன்..
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே..
இதுதான் வாழ்க்கையா
ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே..
காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே..
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே..
இதம் தருமே..
இதம் தருமே...
2 comments:
சோகத்தில் சுகம் காண்பது இதம்... அருமை...
அருமை...
Post a Comment