முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அபாயக் குறிப்புகள்

    என் முதல் கவிதைத் தொகுப்பு. என் வெகு நாளைய கனவை நனவாக்கித் தந்திருக்கும் தேநீர் பதிப்பகத்திற்கு நன்றி புத்தகம் உருவாகக் காரணமாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி   அபாயக் குறிப்புகள் பக்கங்கள் - 72 விலை- 80   நூல் பெற – நா. கோகிலன் – 9080909600 https://www.commonfolks.in/books/d/abaaya-kurippugal   GPay ( அ) PhonePe: N. Kokilan - 9080909600 நன்றி 😊  

சொல்வனம் – கவிதைகள்

சொல்வனம் 191ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதைகள் :-) உறவு   வாலாட்டி மேலேறிக் குழைந்து எச்சில்படுத்திய நாய்க்குட்டிக்கு நல்லவேளையாக நான் இருந்தேன் .

சொல்வனம் – கவிதைகள்

சொல்வனம் 188 ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதை கள் :-) பார்வைகள் தவிர்த்து அனைவரும் என்னையே பார்ப்பதாய்த் தோன்றிய எண்ணம் தவிர்த்து பேருந்து இருக்கையில் அமர்கிறேன் அலைபேசியின் செவிப்பொறியை அவிழ்க்கத் தொடங்கி உள்ளே வெளியே உள்ளே வெளியே என சிறிய சிக்கலைப் பிரிக்கப் பிரிக்க பெரிதாய்ப் பின்னிக்கொண்ட சரடு ஒரு சிறு பந்தைப் போல் ஆகிறது அப்படியே கேட்கலாம் எனக் காதில் செருகும்போது கவனிக்கிறேன் பேருந்தில் இருக்கும் வேறெவரின் செவிப்பொறியும் சிக்கலாயில்லை அது தரும் இசையில் லயித்திருக்கும் அவனும் அவளும் அதோ அவரும் ஒரே அலைவரிசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்களா அவரவருக்குப் பிடித்த இசை என்னவாக இருக்கும் மீண்டும் பின்னியிருக்கும் சரடைப் பிரிக்க முயன்றிருக்கும் போதே நிறுத்தம் வர இறங்குகிறேன். நாளை பார்த்துக்கொள்ளலாம் பேருந்தில் இடம்பிடிப்பதையும் சரடை நேராக்குவதையும் பேருந்துப் பயணத்தில் பாட்டு கேட்பதையும். *** பி.எம்.எஸ். நாட்கள் __ உலகம் சரியில்லை. நாடு சரியில்லை. வீடு குப்பையாக இருக்கிறது. பொருட்கள் இரைந்து கிடக்கின்றன. துணி துவைக்கத் தெம்பு ...

சொல்வனம் – கவிதை

சொல்வனம் 188 ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதை 😊 ஆச்சி நான் பால் ஊற்றிக் கொண்டிருந்தபோது ஆச்சி இறந்தாள் என் முக வாஞ்சைகளும் அவளுக்கென்றே வைத்திருந்த பேரன்பும் உட்செல்லாமல் வெளியே வழிந்தன .

தனிமைக் காதலர்கள்

தனிமையே.. உன் காதலர்கள் கபடதாரிகள். உன் மடியமர்ந்து அவர்கள் பருகும் தேநீர் எச்சில் கலந்தது. உன் தோள்சாய்ந்து அவர்கள் வாசித்துக் கொண்டிருப்பது வேறொருவனின் அந்தரங்கத்தை. அவர்கள் முகர்வதெல்லாம் முற்றியுதிர்ந்த காலவெளி கடந்த முடிவிலி பிரியத்தின் மலர்களை. அவர்கள் சிந்தனையெங்கும் முன்னாள் காதலர்களிடம் அவர்கள் கேட்கத் தயங்கிய சில அபத்த ஐயங்களின் பட்டியல்கள் . உன் நிலவொளியில் அவர்கள் தூண்டிலிடுவதோ பல்லாயிரம் விண்மீன்களை.

சொல்வனம் – கவிதை

சொல்வனம் – கவிதை நலம், நலமறிய ஆவல்.  சொல்வனம்174 ஆம் இதழில் வெளிவந்த என் கவிதை 😊        

பழக்கங்கள்

ஒரு கோப்பை நிறைய உரிமைகளை ஊற்றிப் பருகத் தந்தீர்கள் எனக்குப் பழக்கமில்லை என்றேன் காபி குடித்தால் நாளை வரப்போகும் தலைவலி தீரும் என்றீர்கள் கட்டாயப்படுத்தினீர்கள் ருசித்துப் பார்த்தபோது கசப்பாக இருந்தது கொஞ்சம் இனிப்பாகவும். இனிக்கிறதா? எனக் கேட்டீர்கள் ஆமோதித்தவாறே இல்லாத தலைவலியை நான் விரட்டத் தொடங்கியிருந்தேன்

மழை மாலை

கயிறறுத்து ஓடிய கன்றுகுட்டியின் கண்ணீரில் நனைந்தது மழை.

தற்கொலை

இதயத்தைத் துளை போடும் ரணம் ஒன்று வேரறுத்துக் கொண்டிருக்கிறது

உயிர்த்தேடல்

மரவுடலின் கிளைநரம்புகளில் முளைத்திருக்கும் இலைமுடிச்சுகளினூடே பிரவகிக்கும் வெப்பநாளங்களில் ரத்தவோட்டத்தைப் பீய்ச்சியடிக்கும் இதயப்பழத்தின் எவ்வணுவில் உயிர்த்திருக்கும் எனக்கான உனதுயிர் ?

அதுவும் அவளும்

ஆரஞ்சு பழத்தை விழுங்கிபடியே குமுறியது கடல். அருகாமையில் நிரதியில் மிதந்தோர் தட்டிகளால் நெம்பி த் தள்ளிக்கொண்டிருந்தனர் அதன் வயிற்றில் . செரிக்காமல் கரையில் நுரைகக்கிய அதன்மேல் விழுந்து அணைத்தவளைத் தள்ளிக்கொண்டேயிருந்தது . சிரித்த அவளின் உள்ளாடைக்குள் மணல்நிரப்பி பொய்வன்மம் தீர்த்தபின் தொலைவாகிப் போனது குழந்தைக்குக் கடல் . இப்பொழுதெல்லாம் அவள் கடற்கரையில் நடக்கையில் கால் மட்டுமே நனைக்கிறாள் அலைகளைக் கட்டியணைப்பதில்லை .