ஆச்சி
நான்
பால் ஊற்றிக் கொண்டிருந்தபோது
ஆச்சி
இறந்தாள்
என்
முக வாஞ்சைகளும்
அவளுக்கென்றே
வைத்திருந்த பேரன்பும்
உட்செல்லாமல்
வெளியே வழிந்தன.
நான்
சிரித்துவிட்டதை என் தம்பி பார்த்தான்
அம்மாவைச்
சுற்றியமர்ந்து ஒப்பாரி வைத்தனர் ஊர்மக்கள்
ஆச்சிக்காகத்
திடுமென முளைத்த
கண்ணீரும்
கம்பலையும் பெருகப் பெருக
நான்
குறுகிப் போனேன்
ஆச்சி
என்னை ஏமாற்றிவிட்டாள்
மூலையிலமர்ந்தேன்..
தேம்பியழுது
கொண்டிருந்த என்னை அழைத்துச் சிரித்தாள் ஒருத்தி.
‘காரியம் முடிஞ்சிட்டு தொடச்சிக்கோ’ என்றாள்
நான்
கதறத் தொடங்கியிருந்தேன்
ஆச்சி
ஏமாந்து போயிருப்பாள்..
-
சுபத்ரா
ரவிச்சந்திரன்
0 comments:
Post a Comment