முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இட்லிவடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

3

விநாயகருக்குப் பூஜையெல்லாம் முடிச்சு கொழுக்கட்டை எல்லாம் சாப்பிட்டீங்களா ? இன்னைக்கு இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியுமா ? 

கமலாவும் நானும்

வணக்கம் ! ரொம்ப நாள் கழிச்சு என்னோட பதிவு இட்லிவடைல வந்திருக்கு . உங்க எல்லாருக்கும் “ திரு . பி . எஸ் . ரங்கநாதன் aka கடுகு aka அகஸ்தியன் ” அவர்களை நல்லா தெரிஞ்சிருக்கும் . அவரோட “தாளிப்பு” வலைப்பூல வந்த கமலா சீரீஸ் கட்டுரைகளோட, அவரோட பல முக்கியமான சொந்த அனுபவங்களை எல்லாம் சேர்த்து வந்த புத்தகம் தான் “கமலாவும் நானும்”. நந்தினி பதிப்பகம். அவரோட வலைத்தளம் கூட ஒரு treasure house மாரி இருக்கும் . அவர்கள் எழுதுன “ கமலாவும் நானும் ” புத்தகத்தைப் பத்தி ரசிச்சு ஒரு பதிவு எழுதிருக்கேன் .

திருநெல்வேலி அல்வா

என் எழுத்தை எனக்கே அறிமுகம் செய்து வைத்த எனது அபிமான வலைப்பூ “ இட்லிவடை ” யில் எனது மற்றுமொரு பதிவு ஒன்று வெளியாகியுள்ளது ..  “ நீங்க எந்த ஊரு ?” யாரோ . “ திருநெல்வேலி ” இது நான் . “ ஓ ... தின்னவேலியா ? ( நக்கலாக ) சரி சரி ” “ இல்ல , திருநெல்வேலி ” எரிச்சலுடன் நான் . “ நானும் அதைத் தான் சொன்னேன் .. தின்னேலினு தானே சொல்வீங்க ?” இன்னும் சிரிப்புடன் . “ தின்ன எலியுங் கிடையாது .. திங்காத எலியுங் கிடையாது ... எங்க ஊரு பேரு திருநெல்வேலி !” ( ஹ்ம்க்கும் ) ஒரு தடவ ரெண்டு தடவயில்ல .. நெறைய தடவ இது நடந்துருக்கு . அது ஏன்னே தெரியல . திருநெல்வேலின்னாவே எல்லாருக்கும் எங்கயிருந்து தான் வருதோ ஒரு நக்கல் தெரியல . ஊருக்குள்ளயே இருந்தவரைக்கும் ஒன்னுமே தெரியாது . டிவியில விவேக்கு பேசுனாலும் வடிவேலு பேசுனாலும் விஜய் பேசுனாலும் விக்ரம் பேசுனாலும் வேற யாரு பேசுனாலும் ஜோக்கோடு ஜோக்கா பார்த்துச் சிரிச்சிக்குவோம் . ஆனா பன்னெண்டாப்பு முடிச்சிக் காலேஜில சேரனும்னு வெளியூருக்குப் போவும்போது தான் தெரியும் .. நம்மளும்...