முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏப்ரல் 20

காவியம் சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது . ரஸவாதம் இதயத்தில் உன் மறுப்பின் வேல் புதைந்து வாய் பிளந்து பசி என்ற குரல் எடுத்தது வடு குரல் மேட்டு தாய் மன நிலவு முலை சுரந்தாள் சொரிந்ததுவோ துக்கத்தின் விஷ நீலம் ஆனால் பருகிய வடுவின் இதய வயிற்றுள் துக்கம் செரித்துப் பிறந்தது வேதனை அமிர்தம். சைத்ரீகன் வெண்சுவர்த் திரையிலென் தூரிகை புரண்டது. சுவரே மறைந்தது. மீந்தது காட்சி. ஓஹோ , உயிர்த்தெழும் ஒளிக்கு இருள் ஒரு திரையா ? பாழாம் வெளியும் படைப்பினை வரையவோர் சுவரா ? வண்ணத்துப் பூச்சியும் கடலும் சமுத்திரக் கரையின் பூந்தோட்ட மலர்க ளி லே தேன்குடிக்க அலைந்தது ஒரு வண்ணத்துப் பூச்சி வேளை சரிய சிறகின் திசைமீறி காற்றும் புரண்டோட கரையோர மலர்களை நீத்து கடல் நோக்கிப் பறந்து நாள i ரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ ஒன்றில் ஓய்ந்து அமர்ந்தது முதல் கணம் உவர்த்த  சமுத்திரம் தேனாய் இனிக்கிறது. ஒளிக்கு ஒரு இரவு கா...

கவிதைகள்

நான் ரசித்த பிரமிள் , ஆத்மாநாம் , கல்யாண்ஜி மற்றும் கலாப்ரியாவின் கவிதைகள் உங்களுக்காக ...

களவாடிய காலம்

முகத்தைச் சுழித்து அருகே அப்பாவின் அதட்டலுக்குப் பயந்தவாறே வாய் நிறைய நீரை நிரப்பி கண்களைச் சிக்கென மூடியபடி தலையை உயர்த்தி தொண்டைக்குள் சரியாகப் போட்டு விழுங்கியது போய்.. இயல்பாக வாயில் வைத்து தண்ணீர் விட்டு மாத்திரையை விழுங்கிவிடும் த ருணங்களில் உணர்கிறேன் நான் வளர்ந்து விட்டதை..

அமாவாசையும் பௌர்ணமியும்

“ கருவேப்பிலைக் கொழுந்தே ” என்றே எப்போதும் செல்லமாகக் கொஞ்சும் அப்பா .. “ அப்படியென்ன தெரிகிறது அந்தக் கண்ணாடியில் .. கருவாச்சி ” எனக் கடிந்துகொள்ளும் அம்மா .. அடிவாங்கி அழும்போதெல்லாம் “ போடீ … கருப்பாயி ” என ஆத்திரத்தைக் கொட்டும் தம்பி .. “ உனக்குக் கல்யாணம் ஆகுறது கஷ்டம்டீ ” என வக்கணை காட்டும் தோழி .. “ உன் நிறத்துக்கு இதுதான் பொருந்தும்மா ” எனப் பிடிக்காததைத் திணிக்கும் துணிக்கடைக்காரன் .. மாதா மாதம் மளிகைப் பொருட்களுடன் மறவாமல் இடம்பிடிக்கும் ஃபேர் அன்ட் லவ்லி எல்லாம் மறந்து போனது “ நீ என் கிளியோபட்ரா ” எனப் பாடிப் பரிசம்போட்டுப் போன சீமைக்காரன் போன்ற சிவப்பு மாப்பிள்ளையால் ! .