“கருவேப்பிலைக் கொழுந்தே”
என்றே எப்போதும்
செல்லமாகக் கொஞ்சும்
அப்பா..
“அப்படியென்ன தெரிகிறது
அந்தக் கண்ணாடியில்..
கருவாச்சி”
எனக் கடிந்துகொள்ளும்
அம்மா..
அடிவாங்கி அழும்போதெல்லாம்
“போடீ… கருப்பாயி”
என ஆத்திரத்தைக் கொட்டும்
தம்பி..
“உனக்குக் கல்யாணம் ஆகுறது
கஷ்டம்டீ”
என வக்கணை காட்டும்
தோழி..
“உன் நிறத்துக்கு
இதுதான் பொருந்தும்மா”
எனப் பிடிக்காததைத் திணிக்கும்
துணிக்கடைக்காரன்..
மாதா மாதம்
மளிகைப் பொருட்களுடன்
மறவாமல் இடம்பிடிக்கும்
ஃபேர் அன்ட் லவ்லி
எல்லாம் மறந்து போனது
“நீ என் கிளியோபட்ரா”
எனப் பாடிப்
பரிசம்போட்டுப் போன
சீமைக்காரன் போன்ற
சிவப்பு மாப்பிள்ளையால் !
.
கருத்துகள்
ஒரு கருவாச்சி காவியமா இருக்கு
நல்ல இருக்கு
எதார்த்தமான இலக்கிய வரிகள்
பிடித்தமான துணிகூட
போடமுடியாத
நிலையை கூட கவிதையாய்
மிக ரசித்தேன்...
ரொம்ப நாள் கழித்து பதிவு போட்டாலும் நச்
நன்றி நாஞ்சில் மனோ சார் :)
ரொம்ப பேசிட்ட.. இருந்தாலும் என்னுடைய heartfelt thanks :)
:))))))))))
கிளியோபட்ராக்கு என்ன?
Thank You BS :)
நன்றி நண்பன் :)
Thank You Dear ;)
Thank U :)
Thank U very much. Keep visiting :)
மிக்க நன்றி !!
மிக்க நன்றி !! :)
சிவப்பு மாப்பிள்ளையால் !//
ஹா சூப்பர் கலக்கலான முடிவு
Thank U Kumar :)
நன்றிங்க சதீஷ் :)
Thank u dear :)