“நான் தம் அடிக்கிற ஸ்டைல பார்த்து தனலெட்சுமி விரும்புச்சு.. நான்...”
“ஏய்.. நிறுத்து. என்ன இப்போ? நான் வர்றதுக்குக் கொஞ்ச நேரம் லேட் ஆயிடுச்சுனா போதும். போற வர்ற பொண்ணுங்களைப் பார்த்து லுக் உட்டுட்டுப் பாட்டு பாட வேண்டியது. இதுவரைக்கும் எத்தனை பேர் உன்னப் போட்டுச் சாத்திருக்காங்கன்னு தெரியலயே.. கையில இது வேற. ச்ச.. நான் வந்த வழியா போறேன். பை.. நீ வேற எவளையாவது பார்த்துக்கோ. இதெல்லாம் சரிபட்டு வராது”
“தேவி... ப்ளீஸ்.. என்ன விட்டுப் போயிறாத.. தேவீ..”
“பை பை..”
“தேவி.. ஸ்ரீதேவி.. உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா.. பாவி, அப்பாவி.. உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா....!”
“போ.. என் பின்னாடியே வராத. நான் உன் மேல ரொம்ம்ம்ப கோவமா இருக்கேன்.”
“என் கண்மணியே கண்மணியே.. சொல்லுவதைக் கேளு.. என் கண்மணிக்குக் கோபம் வந்தால் மின்னும் பனிப் பூவு..”
“ஷட் அப்.. எவளாவது ஏமாந்தவ காதுல பூ வெச்சிருப்பா.. அவகிட்ட போய் சொல்லு”
“சிந்துதடி சிந்துதடி முத்து மழை பூவு”
“அடடா.. என் கவியரசர் கம்பா!”
“கொஞ்சம் பாடுனா போதுமே.. எதிர்பாட்டு பாடிருவியே”
“...................”
“பேசு தேவி.. பேசு.. உன் குரலைக் கேட்க ஓடோடிவந்த என்னை ஏமாற்றி விடாதே”
“அய்யோ....”
“கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்... கோபுரமே உன்மேல் சாய்ந்து கொண்டு.. உந்தன் விரலுக்குச் சொடுக்கெடுப்பேன்”
“அடச்சீ.. தள்ளு. அது யாரு அந்த கோகிலம்.. புது ஆளா? சந்தோஷம்.. நான் எஸ்கேப்பு”
“என் கண்மணி என் காதலி.. இளமாங்கணி.. ஓராயிரம் கதை சொல்கிறாள்.. கதை சொல்கிறாள்.... நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ நீ.....”
“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. ஏன் இப்படி என் பின்னால சுத்துற?”
“சின்ன முள்ளு காதலியல்லோ.. பெரிய முள்ளு காதலனல்லோ.. ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில் காதலிங்கு நடக்குதல்லோ.. சின்ன முள்ளு அழுத்தமானது. மெதுவாய்ப் போகும்.. பெரிய முள்ளு துரத்திப் பிடிக்குமே அது தான் வேகம்”
“இந்த டான்ஸ அப்படியே அந்தத் தெருவோரமா ஆடிக்காட்டுனேனா கொஞ்சம் வருமானம் கிடைக்கும். நான் போறேன். பை.. உன்ன எனக்குப் பிடிக்கல.
“இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்.. இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்.. இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும். என்ன சொல்லப் போகிறாய்??”
“அய்யோ.. நான் சொல்லியாச்சு. ஐ டோண்ட் லைக் யூ அட் ஆல்...”
“ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. உன் காதலன் நான் தான் என்று.. அந்த சொல்ல்ல்ல்லில்..”.
“யாராவது பார்க்கப் போறாங்க. போய்த் தொலை”
“நறுமுகையே.. நறுமுகையே.. நீ ஒரு நாழிகை நில்லாய்.. செங்கனி ஊறிய வாய் திறந்து.. நீ ஒரு திருமொழி சொல்லாய்.. அற்றைத் திங்கள் அந்நிலவில்.. நெற்றித் தரல நீர் வடிய.. கொற்றைப் பொய்கையாடியவள் நீயா...”
“நான் அவள் இல்லை”
“அய்யோ... ஒத்த சொல்லால.. என் உசுரெடுத்து வெச்சிக்கிட்டா.. ரெட்ட கண்ணால.. என்னத் தின்னாடா..”
“உனக்கும் எனக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் கிடையாது. கெட் லாஸ்ட்..”
“உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது. அட ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகாது.. ஆத்தங்கர மரமே.. அரசமர இலையே.. ஆலமரக் கிளையே.. அதிலுறங்கும் கிளியே.. ஓடக்கர ஒளவுக் காட்டுல ஒருத்தி.. யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி.. தாவிவந்து சண்டையிடும் அந்தமுகமா.. தாவணிக்கு வந்தவொரு நந்தவனமா….”
“இது சுடிதாரு...”
“சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. உன்மீது காதல் வந்தது. எப்போது எங்கு என்று நீ சொல்வாயா?”
“போடா.. பொல்லாத பொய்யா..”
“காற்றின் அலைவரிசை கேட்கின்றதா.. கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா.. நெஞ்சு நனைகின்றதா.. இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா.. காற்றில் கண்ணீரையேற்றி... கவிதைச் செந்தேனை ஊற்றி.. கண்ணே உன் வாசல் சேர்த்தேன்.. ஓயும் ஜீவன்... ஓயுமுன்னே... ஓடோடி.....”
“இந்த எமோஷனல் ப்ளாக் மெயிலிங் எல்லாம் என்கிட்ட வேண்டாம்..”
“முகம்கண்டு முகம்கண்டா நேசம் கொண்டேன்.. அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்.. வெண்ணிலாவின் தேரிலேறிக் காதல் தெய்வம் நேரில் வந்தாளே.. மானமுள்ள ஊமை போல தானம் கேட்கக் கூசி நின்றேனே.....!!”
“வந்தேன் வந்தேன்.. மீண்டும் நானே வந்தேன்… எனது கனவு.. கனவை எடுத்துச்செல்ல வந்தேன்..”
“இது யார்டா.. ஆகா.. இவதான் அந்தக் கோகிலமா.. அடிச்சதுடா யோகம். சரிடி.. புது ஆப்பற்சூனிட்டி வந்திருக்கு. நான் போறேன்...”
“ஏ ஏ ஏ ஏ.. யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப் போடி.. ராமனின் மைதிலி நான் தான்டி.. பொம்பள போக்கிரி ஓடிப் போடி.. உன் ஆசைக்கு ஆதிசேசன் தேடுதோடி..? பந்தியில.. பங்கு கேட்டா.....”
“போதும் போதும். தேவையா இது? கூப்பிடும்போது திருப்பிக்கிட்ட. இப்ப இன்னொருத்தி வந்தவொடனே துப்பட்டாவ தலையில கட்டிட்டுக் கிளம்பிட்ட? அய்யய்யோ.. அழுறியா? என் கண்ணுல..”
“எனக்கு உன்ன விட்டா வேற யாரு இருக்கா.”.
“அழாதமா...”
“அப்போ பாட்டு பாடு”
“கொல்லையில தென்னை வைத்துக் குறுத்தோலப் பெட்டி செஞ்சு.. சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ.. மரக்கிளையில் தொட்டில் கட்ட.. மாமனவன் மெட்டு கட்ட.. அரண்மனையை விட்டுவந்த அல்லிராணி கண்ணுறங்கு.....ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்..”
“ஹ்ம்ம்ம்ம்.......”
..
30 comments:
ரைட்டு!! ஒரு எப்.எம் கேட்ட மாதிரி இருந்துச்சு சுபா.. சில பாட்டு தெரியல..
//Labels: நகைச்சுவை //
ஐ லைக் தட்! ;)
உங்களுக்கு இவ்ளோ பாட்டு தெரியுமா? நிச்சயமா நீங்க ஒரு புலவர்
சினிமா பாட்டின் வரிகளை வைத்து ஒரு காமெடி பதிவை தேத்துவது எப்படி? அனுகவும் - சுபத்ரா,துபாய் பஸ் ஸ்டேண்ட், துபாய் குறுக்குத்தெரு,துபாய்
>>Your comment has been saved and will be visible after blog owner approval.
ஹி ஹி ஹி இது வேறயா?
பாட்டுக்கு எசப்பாட்டு நல்லாவே இருக்குது :-)))))
@Balaji saravana
எல்லாமே பிரபல பாட்டுகள் தானே பாலா? அது இருக்கட்டும். நகைச்சுவைன்னு லேபிள் வச்சத அப்ரிசியேட் பண்ணதுக்கு ரொம்ப சந்தோஷம் :)
@jaisankar jaganathan
அய்யய்யய்யய்யோ.... இந்த வார்த்தைய விடமாட்டேங்குறாங்கடா சாமி :)
@சி.பி.செந்தில்குமார்
ஹி ஹீ.. அதுசரி, நான் எப்போ துபாய் போனேன்? ;)
@சி.பி.செந்தில்குமார்
அது வந்து.. நாம பிரபல பதிவர் ஆயிட்டோமா.. அனானிங்க தொல்ல தாங்க முடில. அதனால ;)
@அமைதிச்சாரல்
நன்றிங்க எசமான்/னி :)
@ஜெ.ஜெ
:) :) :)
100..!!!
@அதிர்ஷ்டரத்தினங்கள்
மிக்க நன்றி! வாழ்த்துகள் :-) நல்ல ராசியான பேரு ;)
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா அந்த பால் நிலவ கேட்டு
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
பாடுங்க பார்ப்போம் :)
நல்ல தான ஒரு போஸ்ட் போட்ட சுபா
அதுக்குள்ள என்ன வெயில் அதிகமா இருக்கா..
பட் எதுவும் நல்லாத்தான் இருக்கு
இனி எப்படி எழுதினா அவ்ளோதான்...
bt sirikirapola eruntchu..nice one.
Awesome!
கொள்ளையில தென்னை வச்சு பாட்டு காதலன் பிட் சாங் எனக்கு பிடிக்குமே !!!
நல்ல சிந்தனை வாழ்க உம் தொண்டு வளர்க உம் புகழ் :)
@siva
நன்றி சிவா! வெயில் அதிகம் தான்.. சிங்கப்பூர்ல எல்லாம் எப்படி?
@கனவின் பயணம்
:) மிக்க நன்றி !!
@ப்ரியமுடன் வசந்த்
ஹி..ஹி... நன்றி வசந்து :-)
:-)
//ராமனின் மைதிலி நான் தான்டி//
கேள்விபடாத பாட்டு... என்ன படம்?
என்னுடைய லிஸ்டில், சமீபத்தில் கேட்டதில் மிகவும் பிடித்த பாடல்.
"நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
...
வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே..."
Glory to Kannamma ! :-)
:-))))
பதிவை படித்தவுடன் நினைவிற்கு வந்த பாடல்:
"லோ லீட்டா ஹலோ லீட்டா...உன் தூரம் கூட பக்கமாக மாறுதே"
என் சகோதரியின் இது போன்ற சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் வல்ல கண்ணபிரான் நிறைவேற்றி வைப்பாராக ! :-)))
@Radha
"ராமனின் மைதிலி நான் தான்டி”
--- பஞ்சதந்திரம் படத்துல ரம்யா கிருஷ்ணனும் சிம்ரனும் சண்டை போட்டுப் பாடுற பாடல் :-)
Then, what a lovely song from Madarasapattinam !!
//என் சகோதரியின் இது போன்ற சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் வல்ல கண்ணபிரான் நிறைவேற்றி வைப்பாராக ! :-)))//
இன்ஷா அல்லாஹ் :-)
eppadi...ippadiyellam...hmmmm
super di
திரைப் பாடல் வரிகளை அடிப்படையாக வைத்து வித்தியாசமான ஓர் உரை நடைப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. ரசித்தேன்.
கொள்ளையில தென்னை வைத்துக் குறுத்தோலப் பெட்டி செஞ்சு//
அது கொள்ளையில இல்லை கொல்லையில
எங்க சொல்லுங்க
கொல்லையில
நல்லா இருக்கு. ஆனா ஏன் ரெண்டு டைம் copy paste ஆகி இருக்கு? சரி பண்ணிக்கோங்க.
தலைலெழுத்து... இப்படி ஒரு பாட்டு (title) இருக்கா!!
Post a Comment