முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

களவாடிய காலம்

முகத்தைச் சுழித்து
அருகே
அப்பாவின் அதட்டலுக்குப் பயந்தவாறே
வாய் நிறைய நீரை நிரப்பி
கண்களைச் சிக்கென மூடியபடி
தலையை உயர்த்தி
தொண்டைக்குள் சரியாகப் போட்டு
விழுங்கியது போய்..
இயல்பாக வாயில் வைத்து
தண்ணீர் விட்டு
மாத்திரையை விழுங்கிவிடும்
ருணங்களில் உணர்கிறேன்
நான் வளர்ந்து விட்டதை..

கருத்துகள்

பீர் | Peer இவ்வாறு கூறியுள்ளார்…
நான் இன்னும் வளரவில்லை என்பதை இந்தக் களம் உணர்த்துகிறது. :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
அப்படினா, நீங்களும் ‘L’ போர்டா? :)
Yaathoramani.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
நான் வெகு காலம் மாத்திரையை வாயில் வைத்துக் கொண்டே
தண்ணீரை மட்டுமே முழுங்கி நிறைய தடவை
அடிவாங்கியதை நினைத்துச் சிரித்துக் கொண்டேன்
நானும் வள்ர்வதற்கு வெகு காலம் ஆனது
பழைய நினைவுகளை கிளறிப் போகும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
:)
மழை இவ்வாறு கூறியுள்ளார்…
அப்டினா ...நானும் வளர்ந்துவிட்டேன்:)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
என் கருத்தை வெளியிட்டமைக்கு நன்றி!!

பழைய நினைவுகள்,குஜராத்/செங்க சூள காரா போன்ற பதிவுகளில் உங்கள் எழுத்தும் ரசிப்புத் தன்மையும் தெரியுது. அது மாதிரி நிறைய எழுதாலாமே.

தீர்த்தபதி சுந்தரேசன்
ஜீவன்பென்னி இவ்வாறு கூறியுள்ளார்…
super.... G..l.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Ramani
அழகான நினைவுகூர்தல். வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சிவா
தங்களது வருகைக்கும் புன்னகைக்கும் மிக்க நன்றி ஐயா! (ஏன் சிரிக்கிறனு தான் தெரியமாட்டேங்குது..ம்ம்)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மழை
தாங்கள் வளர்ந்தமைக்கு வாழ்த்துகள்! :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ஜீவன் பென்னி
Thanks.... B..y :)
நாமக்கல் சிபி இவ்வாறு கூறியுள்ளார்…
மாத்திரை போட்டுகிட்டு சர்க்கரை கேட்பீங்களா? நான் இன்னமும் கேட்பதுண்டு!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ அருணையடி
அது இல்லாமலா? சீனி இல்லைனா மாத்திரை நோ.. :)

@ ப்ரியா கதிரவன்
வாங்க அர்ஜூன் அம்மா :) மிக்க நன்றி
சாமக்கோடங்கி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கவிதை..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கூடை ,குடை வச்சிருக்கவங்களுக்கு எல்லாம் நன்றி கிடையாதா ...?

சும்மா ஒரு டவுட்டு
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சாமக்கோடங்கி
நன்றி :))))
Radha இவ்வாறு கூறியுள்ளார்…
:-)
சாதாரணமானவள் இவ்வாறு கூறியுள்ளார்…
அச்சச்சோ... நானும் வளந்துட்டேனே...
Marc இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதை அற்புதம்.வாழ்த்துகள்.
goma இவ்வாறு கூறியுள்ளார்…
அப்படிப் பார்த்தால் நான் வளர 60 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன ...
மாத்திரை விழுங்கத்தெரியாதென்றால் அதுவரை நாம் ஆரோக்கியமாக இருந்திருக்கிறோம் என்று நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்லணும்
rishvan இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்..நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Good way of describing, and fastidious article to get information regarding my
presentation subject matter, which i am going to present in academy.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I truly love your blog.. Excellent colors & theme.
Did you make this website yourself? Please reply back as I'm trying to create my own site and would love to learn where you got this from or just what the
theme is named. Many thanks!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
If some one wants expert view concerning blogging and site-building then i suggest him/her to pay a visit this website, Keep up the
nice job.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Anonymous

There are a lot of blogger themes available on net for free.. U can even preview them before using for ur own. I wanted a simple blogger theme with more space for writing and with less columns. Then I personalised the widgets available default and also through web.

Just Google. Happy to see someone who likes my taste :-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...