கயிறறுத்து ஓடிய
கன்றுகுட்டியின் கண்ணீரில்
நனைந்தது மழை.
மழைச்சுமை தாளாமல்
பழைய
இலைக்கம்மல் வடிவில்
உதிர்ந்து கிடந்தது
மரத்தின் இலை.
அரித்த தெருமணலில்
வரிகளாய் ஓடியிருந்தன
அயிரை மீன்கள்.
மீன் முள்க்கூடாக
வெந்து கொண்டிருந்தது
சதையற்ற ட்ரான்ஸ்பார்மர்.
மழை புள்ளிக்கோலமிட்ட
நீர்த் தொட்டியில்
நிரம்பி வழிந்தது பாசம்.
இம்மழைக் காட்சிகளை
மிடறுகளாய்
விழுங்கியிருந்தது
காலிக் காப்பிக் கோப்பை.
5 comments:
மீன்முள் கூடாக வெந்து கொண்டிருந்த சதையற்ற டிரான்ஸ்பார்மர்! க்ளாஸிக்! உங்களின் அழகான கவிதையை மிகமிக ரசித்தேன் சுபத்ரா. (அஃப்கோர்ஸ், நமக்கு கவிதை எழுத வரலையேங்கற பெருமூச்சோடவும்)
சிறப்பாக எழுதியுள்ளீர்கள் . மழைதான் அனைத்தையும் நனைக்கும் . கண்ணீரில் நனைந்தது மழை என்பதை வெகு நேரம் ரசித்தேன் . கடைசி வரியும் வெகுவாக ரசித்தேன் . மழை எனும் இனிய அனுபவத்தை இப்படி சொற்களில் வெளிப்படுத்த உங்களை போன்ற கவிஞர்களால் மட்டுமே முடியும் . ஹேட்ஸ் ஆஃப். இதற்கு முன்னும் நல்ல கவிதைகள் எழுதியுள்ளீர்கள் . ஆனால் ஒரே கவிதையை மீண்டும் மீண்டும் எழுவதாக தோன்றும் . எனவே பின்னூட்டம் இட்டதில்லை . this one diffent .
அருமை... ரசித்தேன்...
வாழ்த்துக்கள்...
கவிதைச்சாரல் அழகு ...!
அருமையான கவிதை நல்ல புதுக்கவிதைக்கு உரிய நயத்துடன் கருத்து வளத்தையும் இயற்கையின் வளங்களும் சேர்ந்துள்ளதால் மேலும் மெருகு ஊட்டுகிறது. சிந்திக்க வைக்கின்ற சிந்தனைச் சிற்பி என்றே பாராட்டலாம்
ஆ.மாரிமுத்து
மதுரை
Post a Comment