ஆரஞ்சு பழத்தை
விழுங்கிபடியே குமுறியது கடல்.
அருகாமையில் நிரதியில் மிதந்தோர்
தட்டிகளால் நெம்பித்
தள்ளிக்கொண்டிருந்தனர்
அதன் வயிற்றில்.
செரிக்காமல் கரையில் நுரைகக்கிய அதன்மேல்
விழுந்து அணைத்தவளைத்
தள்ளிக்கொண்டேயிருந்தது.
சிரித்த அவளின்
உள்ளாடைக்குள் மணல்நிரப்பி
பொய்வன்மம் தீர்த்தபின்
தொலைவாகிப் போனது
குழந்தைக்குக் கடல்.
இப்பொழுதெல்லாம் அவள்
கடற்கரையில் நடக்கையில்
கால் மட்டுமே நனைக்கிறாள்
அலைகளைக் கட்டியணைப்பதில்லை.
8 comments:
கடல்...
" சிரித்த அவளின்
உள்ளாடைக்குள் மணல்நிரப்பி
வன்மம் தீர்த்தபின்
தொலைவாகிப் போனது
குழந்தைக்குக் கடல்."
ரசித்தேன். நன்று
குழந்தையின் படமும் அதற்கேற்ற படைப்பும் அழகு. பாராட்டுக்கள்.
வித்தியாசமான பார்வையில் கடல்! மிக ரசித்தேன்!
@கோவை நேரம்
:-)
@Muruganandan M.K.
மிக்க நன்றி!
@வை.கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி!
@பால கணேஷ்
மகிழ்ச்சி :-)
Post a Comment