Exam Jokes

Mar 8, 2013




ஒரு சின்ன conversation.. யார் யாருக்குனு கேட்கக் கூடாது ;-)

அக்கா..”

என்ன சொல்லு

நேத்து டெஸ்ட்க்கு நான் படிக்காம பொயிட்டேன்

நாய் மனுஷன கடிச்சா நியூஸ் இல்ல. மனுஷன் நாயைக் கடிச்சா தான் நியூஸ்

என்ன சொல்லுத?”

நீ படிக்காம போனா ஆச்சர்யமில்ல. படிச்சிட்டுப் போனா தான் அது உலக அதிசயம்.. மேல சொல்லு

மொத்தம் 5 questions. 50 marks”

.. சரி.. உனக்கு எத்தனை தெரிஞ்சிச்சி?”

எனக்கு ஒன்னுமே தெரியல

பெறகு என்ன பண்ணுன?”

ஒவ்வொரு question க்கும் ரெண்டு ரெண்டு பக்கம் என்னத்தையோ answer எழுதி வெச்சேனா..”

.. அப்பம் பாஸ் ஆயிருவியா?”

இரு என்ன முழுசா சொல்லவுடு

சொல்லு

வீட்டுக்கு வந்து assignment எழுதனும்னு புஸ்தகத்தை எடுத்து answer பார்த்தா..”

பார்த்தா?”

அவ கேட்டிருந்த 5 கொஸ்டீனும் 2 மார்க் கொஸ்டீன்ஸ்! ஒவ்வொரு ஆன்ஸர்லயும் ரெண்டே ரெண்டு வரி தான் இருக்கு. அதுக்கு நான் ரெண்டு ரெண்டு பக்கம் எழுதி வெச்சிருக்கேன்.. கதையடிச்சிருக்கேன்னு கண்டு பிடிச்சிருவாளே!”

“ :D :D :D :D ”


இன்னொரு SMS:

Hosanna Song – After receiving Question Paper in an Exam Hall :-

அந்த நேரம் காலை நேரம்
கண் பார்த்து கந்தலாகி
போன நேரம் ஏதோ ஆச்சே..

Question Paper வந்தாச்சு
படிச்ச Question எல்லாமே
காற்றோடு போயே போச்சு..

Hosanna..
என் பெஞ்ச்சை தாண்டிப் போனாளே..
Hosanna..
Answer ஒன்றும் சொல்லாமலே..

நான் mental ஆகிறேன்
சுக்கு நூறாகிறேன்
அவள் போன பின்பு எந்தன் bit- தேடிப் போகிறேன்..

H E L L O......!”

படம்: Degree-யை தாண்டி வருவாயா :-)

7 comments:

கவியாழி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பிட்டுக்கு அவசியம் இல்லையா?

பால கணேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதல் ஜோக் ஏற்கனவே கேட்டதுதான் சுபத்ரா! ஆனால் நீங்கள் எழுதிய நடையில் அது மீண்டும் ரசித்துச் சிரிக்க வைத்து விட்டது. டிகிரி தாண்டி வருவாயா..? சூப்பர்! இன்னும் ரசித்து சிரித்துக் கொண்டுதானிருக்கிறேன்!

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அது சரி...!!!!!!

கோவை நேரம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

Easy (EZ) Editorial Calendar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Hosanna மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Jayadev Das said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Good stories.......