|
Click to view large & clear |
இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு.. அதாங்க, ஐ.ஏ.எஸ். பரீட்சை. அந்தப் பரீட்சையின் முக்கியத் தேர்வில் நிறைய மாற்றங்களைக் UPSC கமிஷன் கொண்டு வந்ததிலிருந்து நாடு முழுவதும் ஒரே சலசலப்பு. பிராந்திய மொழிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய கட்டுப்பாடுகளை விதித்ததால் நிறைய எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருக்க, ஏற்கனவே தாமதமாக வந்த அறிக்கை hold செய்யப்பட்டது.
பொதுவாகவே, Hindi தெரியாததாலோ என்னவோ பெரும்பான்மையான தமிழர்களுக்கு Hindi
பிடிப்பதில்லை. நிறைய பேருக்கு Hindi பிடித்திருக்கிறது. படிக்கத் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். படித்திருந்தால் வடமாநிலங்களுக்குச் சென்று செட்டில் ஆகியிருக்கலாம் என்றும் நினைக்கிறார்களோ என்னவோ. ஆனால் பொதுவாகவே Hindi
என்றாலே இருக்கும் ஒரு aversion தமிழர்களுக்கு மட்டுமில்லை. வடமாநிலங்கள் பலவற்றுக்கும் கூட இருக்கிறது.. ஆச்சர்யமாக இருக்கிறதா?
உதாரணத்திற்கு, குஜராத்தின் மாநில மொழி ‘Gujarati’. அங்கிருக்கும் பெரும்பான்மையினருக்கு Hindi
தெரியும் என்றாலும் Gujarati-க்குத் தான் first
preference. சொல்லப்போனால் Hindi பேச அவர்கள் விரும்புவதேயில்லை. குஜராத்தில் business personalities தான் அதிகம். அரசு உத்யோகங்களையோ அடிக்கடி transfers இருக்கும் வங்கி உத்யோகங்களையோ அவர்கள் விரும்புவதேயில்லை. அதனால் அங்கிருக்கும் வங்கிகளில் வேலை பார்க்கும்
90% க்கும் அதிகமானோர் UP,
MP, பிகார் போன்ற பிற மாநிலத்தவர் தான். Hindi பேசத் தெரிந்த அவர்கள் கூட குஜராத்துக்கு வரும் புதிதில் மொழிப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.
Hindi இந்தியாவின் official language தான்; national language இல்லை என்று குஜராத் உயர்நீதி மன்றம் மூன்று வருடங்களுக்கு முன்னர் கொடுத்த தீர்ப்பு ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதே போன்று மகராஷ்ட்ராவின் ‘Marathi’ மொழிப் பற்றாளர்களைச் சொல்லலாம். 30 மாநிலங்களில் 10 மாநிலங்களில் தான் Hindi பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது. மீதமுள்ள 20 மாநிலங்களிலும் வெவ்வேறு பிராந்திய மொழிகள் தான் வழக்கிலிருக்கின்றன.
இதனால் நான் சொல்ல வருவது, Hindi மற்றும் English மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து முன்னர் அறிவிக்கப்பட்ட
UPSC Notification பலராலும் எதிர்க்கப்பட்டு இப்பொழுது புதிய அறிக்கை வெளியாகியுள்ளது :)
இதன்படி, பிராந்திய மொழிப் பாடங்களை யார் வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். பிராந்திய மொழிகளில் பரீட்சை எழுதலாம் :) :)
தமிழ் மீடியத்தில் படிக்காததால் நான் ஆங்கில வழியில் தான் பரீட்சை எழுதப்போகிறேன் என்றாலும் தமிழ் மீது இருக்கும் தீராத காதலால் ;) இன்ஷா அல்லா முதனிலைப் பரீட்சையில் தேர்வாகி முக்கியத் தேர்வுக்குப் போகும் போது தமிழ் இலக்கியத்தையே optional
subject ஆக எடுத்துப் படித்துத் தேர்வெழுத உள்ளேன் :)
ஒரு வழியாக Mar 6, 2013, புதன்கிழமை அன்று UPSC Notification-க்கு நான் மறுப்பு தெரிவித்து ஒரு blog post எழுதியதைப் படித்து மனம் வருந்தித் திருந்தி நமக்குச் சாதகமான corrigendum வெளியிட்டுள்ள கமிஷனுக்கு மிக்க நன்றி :P :D
8 comments:
வாழ்த்துக்கள்....
முதலில் உங்களுக்கு எதிலும் வெற்றியே காண மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! ஆங்கில வழிக் கல்வியை ஜப்பானிய மொழியில் படித்து அவர்கள் முன்னேறிய நாடாகி விட்டனர். ஆகவே பிராந்திய மொழியில் படிப்பதும் எழுதுவதும் எனக்கு தப்பாத் தெரியலை. நல்ல விஷயும்தான்! கருத்தை உள்வாங்கிட்டா சரிதேன்...!
@கோவை நேரம்
நன்றி!
@பால கணேஷ்
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி :)
நானும் பிராந்திய மொழி வழிக் கல்வியை வரவேற்கிறேன். அதனாலேயே புதிய அறிக்கையின் பேரில் மகிழ்ச்சி அடைகிறேன் :)
சிறப்பாக எழுத வாழ்த்துக்கள் பல...
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி! :)
Aameen Subadhra:)
(இன்ஷா அல்லா முதனிலைப் பரீட்சையில் தேர்வாகி முக்கியத் தேர்வுக்குப் போகும் போது தமிழ் இலக்கியத்தையே optional subject ஆக எடுத்துப் படித்துத் தேர்வெழுத உள்ளேன் :) )
@Anonymous
:) :)
Post a Comment