தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

Nov 12, 2012

அந்தா இந்தானு சொல்லி கடைசில தீபாவளி நாளைக்கே வரப்போவுது. மூனு வருஷம் குஜராத்ல தீபாவளி கொண்டாடிட்டு இப்பம் தான் திருநெல்வேலில அம்மா அப்பா தம்பிகளோட இந்த வருஷத் தீபாவளியைக் கொண்டாடப் போறேன். அதனால பயங்கர சந்தோஷத்துல இருக்கேன். வீட்டுல நாளைக்கு என்ன ‘ஸ்பெஷல்’னு இன்னுந் தெரியல. நானே குலாப் ஜாமூன் மிக்ஸ் வச்சு முதன்முறையா ஸ்வீட் செய்யலாம்னு ப்ளான். பார்க்கலாம். முன்னாடியே போயிருந்தா பக்கத்து வீட்டுக் குட்டீஸ்க்கு மெஹந்தி வச்சு உட்ருக்கலாம். தப்பிச்சிட்டாங்க ;-)

      அத சாப்டு இத சாப்டுனு சொல்ற அம்மா, டிவி ப்ரொகிராம் பார்த்து கமெண்ட்ஸ் சொல்லிட்டு இருக்குற அப்பா, கைய புடிச்சு இழுத்துட்டுப் போய் வெடி(பட்டாசு) போட வைக்கிற தம்பி, மஞ்சள் தடவுன புது டிரெஸ்ல ரவுண்ட்ஸ் வர்ற சின்ன பிள்ளைங்க, ஃப்ரெண்ட்ஸ்னு சந்தோஷமா இருக்கப் போகுது. அதே சந்தோஷத்தோட உங்களுக்கும் என் மனம் நிறைந்த


தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்ன வேண்டுமாலும் பேசுவார்கள்... எல்லாம் பணம் செய்யும் மாயை...

தரம்-வரவர குறைந்து வருவது உண்மை...

குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Avargal Unmaigal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

me the first wishes

happy deepavali.