உருட்டி ஊட்டிய பின்பு
வயிறு நிறைத்த
வழித்துப் பிசைந்த
கடைசிக் கையுருண்டை
கோர்த்த சரம் போக
எஞ்சிச் சிதறிப்போன
பிஞ்சு பிச்சி மொட்டுகள்
கடைசிப் பொருளைப்
பொறுக்காமல் விட்டுவந்த
வாடகை வீடு
மருண்டு விழித்த பின்னிரவு
உறக்கத்தினூடே
புதைந்த கனவுவொன்றின் எச்சம்
சாயம் வெளுத்த ரவிக்கையின்
ஆயுளை நீட்டிக்கொண்டே சென்ற
காலண்டர் ஊசி
மைத்தடவல்களை மறந்து
ஸ்டிக்கர்ப் பொட்டுகளுக்கு மாறிவிட்ட
கண்ணாடிச் சட்டம்
மொழுகிய மேடையின் ஈரத்தில்
கரைந்து மணந்த
வெள்ளைக் கோலங்கள்
காக்காமுள் குத்திய காற்றாடியுடன்
ஓலைக்கூரையில்
காய்ந்து போன வேப்பங்குச்சி
அடிவாங்கிய ஒலிச்சுருளின் பாடலைப்போல
அவ்வப்போது நிறுத்தி
நிதானிக்கச் செய்யும் இவைகளால்
நகர்ந்து கொண்டிருக்கும் என் உலகம்.
9 comments:
Excellent!!!!
நெஞ்சை தொட்ட வரிகள்
Good one di. write more
MOre Excellent suba!!!!....repeatuu...
சின்ன சின்ன விஷயஙகளின் அழகான கோர்வை உங்கள் கவிதை.
@ dheva
Thank u :)
@ கோவை நேரம்
மிக்க நன்றி!
@ பொன்மலர்
Thank u dear..
@ siva sankar
Thanks Siva :)
@ dhanasekaran .S
கடைசிவரியைக் கவனிக்கவில்லையா? நன்றி!
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யைப்
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!//
நான் ஒரு கேள்வியும் கேக்க மாட்டேன்
இப்படியே எழுதிக் கிட்டு இருந்தாக்க “மடக்கி” எழுதறதே உங்களுக்கு மறந்திட போது பார்த்துக்கிடுங்க.
ஒஹோன்னு சொல்ல முடியாட்டாலும் அய்யே-ன்னு சொல்ல வைக்கல. சில வரிகள் நறுக்.
கவிதை முயற்ச்சி நல்லாருக்கு
வாழ்த்துக்கள்
தீ.சு.
கவிதை நல்லா இருக்கு சுபத்ரா... உங்களுக்காக ஒரு விருது இதோ.. http://sadharanamanaval.blogspot.in/2012/02/blog-post_20.html
Post a Comment