தேடல்

Apr 22, 2012


எழுதி முடித்துவிட்டுக்
காணாமல் தேடிய
பேனா மூடியொன்று பின்
ஒரு மழைநாளின்
கேளிக்கைப் பொழுதின்போது
சேற்றில் புதைந்தவாறு
காட்சியளித்துக் கொண்டிருந்தது.

யாரும் பார்க்காவண்ணம்
எடுத்து
வெயிலில் போட்டுவிட்டு
நினைவின்றி வீடு திரும்பியதும்
தொலைந்து போனது
அதன் ஆயுள்.

தேடிக்கிடைக்காத பொருட்கள்
எப்படியும்
வேறுசிலப் பொருட்களின்
தேடல்களின்போது
கிடைத்தேவிடுகின்றன.

...அப்படியே
எப்பொருளின் எந்நாளையத்
தேடலில்
கிடைத்தே போய்விடப்போகிறது
நான் எப்பொழுதும்
தேடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கை எனும் பொருள்?
*

5 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்க்கையின் யதார்த்தப் பக்கங்கள் கண்முன்னே உங்கள் கவிதையில். அருமை. பகிர்விற்கு நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நாம் புரியாமலும் அறியாமலும்
பயன்படுத்திக் கொண்டிருக்கிற
மிக உயர்ந்த பொருள் இதுதானே
என்ன செய்வது
சிலருக்கு அதன் மகத்துவம் கடைசியில் தெரிகிறது
பலருக்கு இறுதிவரை தெரியாமலே போய்விடுகிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு

கேரளாக்காரன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Super Paappa :D

தக்குடு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கவித! கவித! :)

Athisaya said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யதார்◌ாமான இயல்பு சொல்கின்ற கவிதை..ரசித்தேன்.வாழ்த்துக்கள் சொந்தமே..!