எழுதி முடித்துவிட்டுக்
காணாமல்
தேடிய
பேனா மூடியொன்று
பின்
ஒரு மழைநாளின்
கேளிக்கைப்
பொழுதின்போது
சேற்றில்
புதைந்தவாறு
காட்சியளித்துக்
கொண்டிருந்தது.
யாரும் பார்க்காவண்ணம்
எடுத்து
வெயிலில்
போட்டுவிட்டு
நினைவின்றி வீடு திரும்பியதும்
தொலைந்து
போனது
அதன் ஆயுள்.
தேடிக்கிடைக்காத
பொருட்கள்
எப்படியும்
வேறுசிலப்
பொருட்களின்
தேடல்களின்போது
கிடைத்தேவிடுகின்றன.
...அப்படியே
எப்பொருளின்
எந்நாளையத்
தேடலில்
கிடைத்தே
போய்விடப்போகிறது
நான் எப்பொழுதும்
தேடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கை
எனும் பொருள்?
*
*
5 comments:
வாழ்க்கையின் யதார்த்தப் பக்கங்கள் கண்முன்னே உங்கள் கவிதையில். அருமை. பகிர்விற்கு நன்றிகள்.
நாம் புரியாமலும் அறியாமலும்
பயன்படுத்திக் கொண்டிருக்கிற
மிக உயர்ந்த பொருள் இதுதானே
என்ன செய்வது
சிலருக்கு அதன் மகத்துவம் கடைசியில் தெரிகிறது
பலருக்கு இறுதிவரை தெரியாமலே போய்விடுகிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
Super Paappa :D
கவித! கவித! :)
யதார்◌ாமான இயல்பு சொல்கின்ற கவிதை..ரசித்தேன்.வாழ்த்துக்கள் சொந்தமே..!
Post a Comment