There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

இலக்கிய விருதுகள்

Oct 19, 2012


வணக்கம்! நலம் நலமறிய ஆவல். ஊருக்கு வந்ததும் நான் எழுதும் முதல் பதிவு இது. East or west, home is best :-) படிக்கத் தொடங்கிவிட்டதால் வேறு எதற்கும் நேரம் ஒதுக்குவது சிரமமாக உள்ளது. இருந்தாலும் படிப்பே மிகவும் சுவாரசியமாகத் தான் செல்கிறது. எண்ணற்ற செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.


Hunt for Hint விளையாட்டைப் பற்றி எழுத இப்போது ஒரு நல்ல தருணம். நான்கு நாட்கள் அன்னம் தண்ணீர் இல்லாமல் விளையாடிய விளையாட்டு ஆயுசுக்கும் நன்மை பயப்பதாக இருந்தது. எப்படி என்று கேட்கிறீர்களா? விளையாடும் போது கற்றுக் கொண்ட விஷயங்கள் தான் காரணம். ஒவ்வொரு hint-ஐயும் வைத்துக்கொண்டு கூகிளிலும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிலும் தேடித் தேடி விளையாடிய அனுபவம் மறக்கமுடியாதது. விக்கிப்பீடியாவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்று மலைத்துப் போனேன். இதோ எனது படிப்பிற்கும் இப்போது விக்கிப்பீடியா தான் மூலம். அதை அழகாகப் பயன்படுத்தக் கற்றுத் தந்த HFH-க்கு நன்றி. அதோடு, மூளைக்குச் சிறந்த பயிற்சியாக அந்த விளையாட்டு விளங்கியது! கத்தியைக் கூர்மை தீட்டுவதுபோல் புத்தியைத் தீட்டவைத்தது என்றே கூறலாம். இதன்மூலம் டெரர்கும்மி குரூப்ஸ் நண்பர்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைபட்டிருக்கிறேன்


மீபத்தில் 2012-க்கான நோபெல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசை, சீனாவைச் சேர்ந்தமோ யான்பெறுகிறார். ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து அதன் பின்புலத்தில் வளர்ந்து படிப்பையும் பாதியிலேயே விட்ட இவரின் எழுத்துகள் பெரும்பாலும் விவசாயிகளையும் அவர்களது அவலநிலையையும் பற்றியே இருக்கின்றன. எடுத்துக்காட்டுக்காகக் நோபெல் பரிசு வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சில பகுதிகளிலிருந்து அவரது எழுத்துத்திறனை நாம் உணரமுடிகிறது. படித்தவுடன் ஒரு காட்சி கண்முன் வந்து நின்றது.

இன்று மதியம் பேரூந்தில் பயணித்துக் கொண்டிருக்கையில் ஒரு நிறுத்தம் வந்தது. அந்நிறுத்தத்தில் நின்றிருந்த யாரும் ஏறத்தாழக் காலியாக வந்த இந்தப் பேரூந்தில் ஏறுவதாகத் தெரியவில்லை. இரு இளைஞர்கள் ஒரு பெரிய மூட்டையைத் தூக்கியவாறு கூடவே ஓடிவந்த ஒரு வயதான பாட்டியுடன் பேரூந்துக்கு அருகில் வந்துஆவடி போகுமா? போகுமா?” என்று கத்தத் தொடங்கினர். அந்தப் பாட்டி, ஒரு பெரிய அலுமினியடப்பில் கொஞ்சம் கருவேப்பிலை வைத்திருந்தார். “ஆவடிஎன்ற பெயர்ப்பலகையுடன் போய்க்கொண்டிருக்கும் இந்தப் பேரூந்துஆவடியில் நிற்காதுஎன்று கூறவும் ஒருமாதிரியாக இருந்தது. மெதுவாகப் பேரூந்தைநிறுத்தலாமா? வேண்டாமா?” என்றவாறு உருட்டிச்சென்ற ஓட்டுனர் நடத்துனரின் விசில் இல்லாமலே எப்படியோ பேரூந்தை நிறுத்திவிட்டார். நிறுத்தியதும் நடத்துனர் அந்தர்பல்டி அடித்துஆவடி போகும்என்று சொல்லவும் அந்தப் பையன்கள் எதையோ முனுமுனுத்தபடி அந்த மூட்டையைப் பேரூந்துக்குள் போட்டுவிட்டுச் சென்றனர். இந்தப் பாட்டி பேரூந்துக்குள் ஏறி அமர்ந்து வண்டி கிளம்பியதும் நடத்துனர் அவருக்குப் பயணச்சீட்டு கொடுக்க வந்தார். பணத்தைக் கொடுத்த பாட்டியிடம், “என்னது இது? இந்த மூட்டையும் சட்டியும் சேர்த்து மூனு டிக்கெட்டுக்கு காசு கொடு, இல்லன்னா அடுத்த ஸ்டாப்ல எறங்கிக்கோஎன்று கறாராகச் சொல்லிவிட்டார் அவர். மூட்டைக்கு இன்னொரு டிக்கெட் சரி. அந்தச் சட்டியைக் கணம் என்றோ இடத்தை அடைக்கும் அளவிற்குப் பெரியது என்றோ சொல்லிவிடமுடியாது. அதற்கு ஒரு டிக்கெட் என்பது சற்று அதிகமாகவே தோன்றியது. “ஐயா..என்னய்யா என்னய்யாஎன்று பலமுறை கெஞ்சிய அந்தப் பாட்டியை, “நீ மூனு டிக்கெட் எடுக்கலன்னா என்னைத் தான் புடிப்பாங்கஎன்று கூறி அடுத்த டெப்போ நிறுத்தத்தில் இறங்கச் சொல்லிவிட்டார் அவர்.

பேசாமல் நாமே டிக்கெட்டை எடுத்து இந்தப் பாட்டிக்குக் கொடுத்துவிடலாமா என்று யோசித்திருக்கையிலே நான் இறங்க வேண்டிய அந்தஅடுத்த நிறுத்தம்வந்துவிட்டது. கூச்சமாக இருக்கவே வேறு வழியில்லாமல் பேரூந்தைவிட்டு இறங்கிவிட்டேன். என் பின்னே இறங்கிய அந்தப் பாட்டியின் மூட்டையை இறக்கிவிடுவதற்கு நடத்துனரோ வேறு ஆண்கள் யாரோ உதவிக்கு வரவில்லை. கையில் வைத்திருந்த புத்தகங்கள் மற்றும் பையோடு அந்த மூட்டையை இறக்கிவைக்க பாட்டிக்கு உதவினேன். அங்கிருந்து நடந்துவந்த பிறகு நடந்தவை எதுவும் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நம் ஊரில் விவசாயிகளுக்கு நாம் அளிக்கும் மதிப்பு இவ்வளவு தான். அச்சடிக்கப்பட்ட ஒரு கரென்சி காகிதத்தைத் தூக்கிப் போட்டவுடன் அரிசி, பருப்பு, காய்கறிகள் என அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் நம்மில் எத்தனைப்பேர் அதன் பின்னே மறைந்துகிடக்கும் விவசாயிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணருகிறவர்கள் ஆகிறோம்? உணர்ந்தால் அந்தப் பாட்டிக்குக் கொடுக்கவேண்டிய குறைந்தபட்ச மரியாதையாக அந்த மூட்டையை இறக்கிவிட உதவியாவது செய்திருப்போம்.

ங்கிலப் புத்தகங்களுக்கு என அளிக்கப்படும் இந்த வருட Man Booker Prize அறிவிக்கப்பட்டுவிட்டது. Hilary Mantel என்னும் ஆங்கில எழுத்தாளருக்கு அவரது Bring up the bodies நாவலுக்காகக் கிடைத்துள்ளது. ஏற்கனவே கேள்விபட்ட பெயர் போல் உங்களுக்குத் தோன்றலாம். ஏனென்றால் 2009-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசையும் Wolf Hall என்ற நாவலுக்காக இவரே வென்றிருந்தார். இப்போது பரிசு பெற்றிருக்கும் புத்தகம் அதன் இரண்டாவது பாகம். மொத்தம் மூன்று பாகங்களைக் கொண்டதாக எழுதப்பட்டுவரும் இந்தச் சரித்திர நாவல்களின் முதல் இரண்டும் மிக உயரிய விருதான புக்கர் பரிசை வென்றுவிட, மூன்றாவது பாகமான The Mirror and the Light இன்னும் வெளிவரவில்லை. தொடர்ந்து இருமுறை புக்கர் பரிசு வென்ற உலகின் முதல் பெண்மணி இவரே. மேலும் ஒரே புத்தகத்தின் Sequel-க்காக இரண்டாவது முறை புக்கர் பரிசை வாங்கியிருப்பது இதுவரை இவர் ஒருவரே. மொத்தம் 145 புத்தகங்களில் 12 புத்தகங்கள் தேர்வுசெய்யப்பட்ட போது அதில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம். தனது முதல் நாவலாகிய Narcopolis-க்காகப் பரிந்துரைக்கப்பட்ட அவர் கேரளத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜீத் தாயில் (Jeet Thayil).

மீண்டும் சந்திக்கலாம் :-)

5 comments:

பால கணேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல எழுத்து நடை உங்கள்ட்ட இருக்கு சுபத்ரா. அந்தக் கிழவி சம்பந்தப்பட்ட சம்பவம் வருத்தத்தை தந்தது. அவங்களுக்கு நீங்க ஹெல்ப் பண்ணினது ரொம்பவே மகிழ்ச்சியான விஷயம். தொடருங்க. வாழ்த்துக்கள். மற்ற தகவல்களும் அருமைங்க.

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல பதிவு

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பல தகவல்கள் அடங்கிய பகிர்வு... நன்றி...

Erode Nagaraj... said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விவசாயிகளையும் முதிய வயதினரையும் மதிப்பவர்களாக நம் மக்கள் ஆகப்போவது எப்போதோ...

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ பால கணேஷ்
தங்களது முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

@ முனைவர்.இரா.குணசீலன்
நன்றி ஐயா ;)

@ திண்டுக்கல் தனபாலன்
நன்றிங்க :)

@ ஈரோடு நாகராஜ்
ம்ம்.. :(