There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

வார்த்தைகள் தேவையா?

Jul 19, 2013


(Pls don’t go to the depth of analysing whether this is true or imaginary. Just read and comment ur views.. It’d be better if u read this in the voice of NEP Samantha ;) )


Dear Karthik,

உனக்குத் தெரியுமா? நான் உனக்காக நிறைய லவ் லெட்டர்ஸ் எழுதியிருக்கேன். ஆனா அதையெல்லாம் உன்கிட்ட காட்டுறதுக்கு எனக்குத் துணிச்சல் வந்ததில்ல. எப்போ நீ என் பக்கத்துல உட்கார்ந்து, என்கிட்ட கோபப்படாம, என்னைப் பார்த்துச் சிரிச்சிட்டே பேசுறியோ அப்போ அந்த லெட்டர்ஸை எல்லாம் உனக்குக் காட்டலாம்னு இருக்கேன். சோகம், ஏக்கம், தாபம், காதல்னு பலமூட்ல நான் எழுதுன அந்த லெட்டர்ஸை எல்லாம் படிச்சிட்டு நீ காட்டுற ரியாக்ஷன்ஸை நான் நேரில் பார்க்கனும். ஆனா நீ தான் வில்லன் ஆச்சே! எல்லாத்தையும் வாசிச்சிட்டு ரொம்ப சாதாரணமா ஒரு சிரிப்பு சிரிப்ப :( அதுலயே நான் அவுட். ஏன்னா, உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே கள்ளம் கபடம் இல்லாத அந்த smile தானே கார்த்திக்?

அய்யய்யயோ ஆனந்தமே.. நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே..”னுகும்கிபடத்துல இருக்குற அந்த song-ஐ இதுவரை 1000 தடவை கேட்டிருப்பேன். ஏன் தெரியுமா? “அந்தப் பாட்டை இதுவரைக்கும் 100 தடவை கேட்டுட்டேன்...இன்னும் கேட்டுட்டே இருக்கேன்னு நீ சொன்னதிலிருந்து தான்! அந்தப் பாட்டுல வர்ற எந்த அம்சம் உனக்குப் பிடிச்சிருக்கும்? இசையா, வரிகளா, வார்த்தைகளா, அந்த ‘feel’-லா? எதுன்னு தேடித் தேடி இருக்கா இல்லையானு தெரியாத ஒரு அர்த்தத்தை நானே கற்பனை பண்ணிக்கிட்டேன். “நெற்றியில் குங்குமம் சூட.. இள நெஞ்சினில் இன்பமும் கூட.. மெதுவா.. வரவா.. தரவா…”னு வர்ற வார்த்தைகளை கேட்டப்போ நீ யாரை நினைச்ச கார்த்திக்? (லக்ஷ்மி மேனன்னு சொல்லி எனக்குத் தொப்பி கொடுத்துறாத) :))

உலகத்துல எத்தனையோ ஆண்கள் இருந்தும் உன் ஒருத்தனை மட்டும் ஏன் இப்படிப் பிடிச்சிட்டுத் தொங்கனும்னு நான் என்மேலேயே நிறைய தடவை கோபப்பட்டு யோசிச்சிருக்கேன் கார்த்திக். அப்பெல்லாம் உன் காதல் முகம் மட்டும் என் கண்ணுக்குள்ள வந்து மத்த எல்லாத்தையும் மறைச்சிரும்.

வார்த்தைகளின்றித்
தவிக்கும்
சிறுகுழந்தையாகிப்
போகிறேன்
உன்மீதான என் காதலை
விளக்க முயலும்
போதெல்லாம்!

காதலுக்குக் காரணங்கள் தேவையில்லை கார்த்திக். அது ஒரு நிகழ்வு. அது ஏற்படும் அந்தக் கணம் தெய்வீகம். காரணத்தோடு வந்தா அதுக்குப் பெயர் காதலானு எனக்குத் தெரியல. நான் உன்னை முதன்முதலா photo-ல பார்த்தப்போ எனக்கு special-ஆ எதுவும் தோணல. சீக்கிரமே நாம நல்ல நண்பர்கள் ஆகிட்டோம். அதுவும் அப்போ நான் போட்ட கண்டிஷன்ஸ் உனக்கு நினைவிருக்கா? எனக்கு இருக்கு. “என்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது; என்னை propose பண்ணக் கூடாது”. விதியைப் போட்ட நானே அந்தச் சதிக்குள் விழப்போறேன்னு அப்போ எனக்குத் தெரியாதே :)

நீ விழவெச்சிட்ட. உன் புன்னகை, கம்பீரம், குழந்தைத்தனம், humour, என்னைபாப்பானு கூப்பிடுறது, உன் அட்டகாசமான voice, நேரில் வந்தப்போ கட்டிப்பிடிச்சது, முத்தம் கொடுத்தது, என் கைபிடிச்சிட்டே ரொம்ப தூரம் walk போனது, எதுல விழுந்தேன்னு யோசிச்சதுல இப்படி ஒரு லிஸ்ட்டே வருது. நான் எதைனு சொல்றது?

பேசிக்கொண்டே இருக்க
விஷயங்களும்
கொடுத்துக் கொண்டேயிருக்க
முத்தங்களும்
எங்கிருந்து குறையாமல்
எடுக்கிறாய் நீ?

கார்த்திக், உன்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது உன்னோட கண்ணியம். பொண்ணுங்ககிட்ட வழியாம பேசுறது. நானே விளையாட்டுக்கு யாரையாவது உன்னோடு சேர்த்து வெச்சு பேசினா கூடஅப்படியெல்லாம் பேசாத பாப்பானு கொஞ்சுற குரல்ல நீ சொல்றது எனக்கு ஆச்சர்யமா இருக்கும். இப்படியே பேசிப் பேசி, அம்மா அப்பா மேல கூட possessive-வா feel பண்ணாத என்னை நீ எப்படி மாத்திட்ட தெரியுமா? “எனக்கு லக்ஷ்மி மேனன் பிடிக்கும்னு ஒருதடவை casual-லா நீ சொல்லிட்டுப் போயிட்ட. யாரும் பார்க்காம உட்கார்ந்து புழிஞ்சிப் புழிஞ்சி நான் அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும். Shame shame :)

ஒரு நிலவும்
சில நட்சத்திரங்களும்
இந்த இரவும்
உன் கவிதைகளுக்காக...
உன் காதலுக்காக?
நான் மட்டும்.

நீ எனக்குக் கொடுக்குற சுதந்தரத்தை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. என்னோட ஜிமெயில், ஃபேஸ்புக், Net banking-னு எந்த அக்கவுண்ட் பாஸ்வேர்டும் உனக்குத் தெரியாது. கொடுத்தாலும் அலட்டிக்காம வேண்டாம்னு சொல்லிடற. என்னை அந்த அளவுக்கு நம்புறியா கார்த்திக்? ஆமா, உன்கிட்ட தான் என்னால எதையும் மறைக்க முடியறது இல்லையே! மனசுல ஏதோ கவலை இருந்தாலும் வெளியே காட்டிக்காம உன்கிட்ட phone-ல மறைச்சுப் பேசுற ஒவ்வொரு தடவையும் என்னோட அந்தச் சின்ன voice modulation வெச்சே கண்டுபிடிச்சிடுறியே, அது என்ன magic கார்த்திக்?

ஒரு சின்ன விஷயம் எடுத்துக்கிட்டாலும் அதுல நீ எனக்குத் தர்ற கருத்துச் சுதந்தரம், சுயமா முடிவுகள் எடுக்க என்னை அனுமதிக்கிறது, எனக்குனு ஒரு free space தர்றது, அதேசமயம்எப்படியும் போனு விடாம நான் செய்றதை criticise பண்றது, அதை straight forward ஆ என்கிட்ட சொல்றது, என்னைத் திட்டுவது, அழவைப்பது, கொஞ்சுவது, பாராட்டுவது, motivate செய்வது.. மொத்தத்துல ஒரு ரமணிசந்திரன் நாவல் hero மாதிரி U match all the qualities of my dream-boy. இதற்குமேல் உன்னை விட்டுட்டு என்னால் போக முடியுமா கார்த்திக்? சொல்லேன்..

ஒரு பெண்ணுக்கு ஒரு பையன் மேல முழு நம்பிக்கை, ஒரு விதமான secure feel வந்ததுக்கு அப்புறம், நிறைய விஷயங்கள்ல அவன்மேல impress ஆன அப்புறம் காதல் வர்றதுல ஆச்சர்யமே இல்ல. ஆனா நீ எப்போ என்னை விரும்ப ஆரம்பிச்ச கார்த்திக்? பொண்ணுங்ககிட்ட வழியாத நீ கூட ஏதோ ஓர் இடத்துல என்கிட்ட விழுந்துட்டனு நினைக்கும் போது என் வாழ்க்கையிலேயே எப்பவும் இல்லாத பெருமை இப்போ எட்டிப்பார்க்குதுனு சொல்றதுல நான் ஏன் வெட்கப்படனும்?

என்னிடம் இருக்கும்
உனக்கு மட்டுமே
சொந்தமானவைகள்
ஏராளம்..
அவைகளுள்
முதன்மையானது
எனது வெட்கம்!

Books வாசிக்கிறத பத்தி நாம அதிகமா பேசியிருக்கோம். நீ ஒரு voracious reader-னு தெரிஞ்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அந்த மாதிரி ஒரு partner அமையறது குதிரைக் கொம்புனு எனக்கு நல்லாத் தெரியும். Birthday-க்கு book வாங்கி gift பண்ற காதலன்/காதலியை எத்தனை பேருக்குப் பிடிக்கும் கார்த்திக்? அந்த சந்தோஷத்துல வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற category நான். Controversial புத்தகங்கள் பத்தியும் எழுத்தாளர்கள் பத்தியும் அதுல படிச்ச விஷயங்கள் பத்தியும் எவ்வளவோ பேசியிருக்கோம். இதுவரை நம்ம வாழ்க்கைல நடந்த ஏகப்பட்ட விஷயங்களைக் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாம share பண்ணிக்க நம்மளால முடிஞ்சதுக்கு அதுவும் ஒரு காரணம். ரெண்டு பேருக்குமே இது முதல் crush இல்லைங்கறது உட்பட!

உன்கிட்ட எனக்குப் பிடிச்ச இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? நீ உங்க அம்மா மேல வச்சிருக்குற பாசம். பொதுவா எந்தப் பொண்ணும் அதை நினைச்சு பயப்படத்தான் செய்வா. ஆனா அந்த விஷயம் தான் என்னை ரொம்ப impress பண்ணுச்சு தெரியுமா? அம்மாகிட்ட பாசத்தைக் கத்துக்கிட்டவனுக்குத் தான் மனைவி மேல பாசம் காட்ட முடியுங்கறது என்னோட லாஜிக். அப்படி இருக்குறவனால தான் ஒரு பொண்ணு அவளோட அம்மாகிட்ட எவ்ளோ attached-டா இருப்பான்னும் புரிஞ்சிக்க முடியும். உங்க அழகான குடும்பத்துல என்னையும் சேர்த்துக்குவீங்களா கார்த்திக்?

கைபிடித்து நடைபழக்கிய
அன்னைக்கும்
என் கரம்பிடித்து
வாழ்க்கை நடத்தும்
உனக்கும்
எத்தனை வித்தியாசங்கள்?

கொஞ்ச நாளாவே எனக்கு மனசு சரியில்ல குட்டி. நீ முன்ன மாதிரி என்கிட்ட பேசுறதில்ல. நம்ம ரெண்டு பேரும் நேரில் பார்த்து நாள்கணக்காச்சு. தினமும் 24 மணிநேரத்துல (24 x 60 = 1440 நிமிடங்கள்) நீ என்கிட்ட பேசுற நேரம் வெறும் 7-10 நிமிஷம் தான். மீதி 1430 நிமிஷமும் உன்னை ‘143’ னு சொல்லிகிட்டே இருக்கச் சொல்லல. எனக்காக, என்கிட்ட பேசுறதுக்காக, நான் பேசுறத கேட்குறதுக்காக இன்னும் கொஞ்சம் (கொஞ்சூண்டு தான்) நேரம் ஒதுக்கேன்? (அய்யய்யோனு கத்தாத! இதையே தாங்கிக்க முடியலைனா, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன்கிட்ட பேசிட்டே இருப்பேனே, அப்போ என்ன செய்வ?) :P

ஏதோ ஒரு காரணத்துக்காக நீ என்னை அவாய்ட் பண்றது தெரிஞ்சு, ஒரு வேளை உனக்கு என்னைப் பிடிக்கலையோனு மனம்குலைஞ்சு போய் ஒரு நாள் உன்கிட்ட சண்டை போட்டேன். “தயவு செஞ்சு என்னை விட்டுப் போய்டு.. டார்ச்சர் பண்ணாதனு சொன்னேன். அதோட நீ என்னைவிட்டுப் போய்டுவனு நினைச்சுக் கூட பயங்கரமா அழுதேன் கார்த்திக். ஆனா எப்பவும் போல ஒரு 5 நிமிஷம் கூட பொறுக்காம நீ எனக்கு phone பண்ணி எதுவுமே நடக்காதது மாதிரி பேசி. பேசிட்டு cut பண்றதுக்கு முன்னாடி உன்கிட்ட பேசாம எல்லாம் என்னால இருக்க முடியாதுனு சொன்னியே? என்னால மட்டும் உன்கிட்ட பேசாம எப்படிடா இருக்க முடியும்?

பெங்களூர்ல இருந்தப்போ Friends ஓட partying-னு சொல்லிட்டு ஒரு நாள் ராத்திரி full booze-ல எனக்கு phone பண்ணிஐ லவ் யூ செல்லம்னு ரோட்டுல நின்னு கத்துனது உனக்கு ஞாபகம் இருக்கா? என்னால மறக்க முடியாது. நீ என்னை உயிராக் காதலிக்கிறனு எனக்குத் தெரிவிச்ச நிறைய நொடிகள்ல இதுவும் ஒன்னு.. “நீ பேசலன்னா செத்துப் போயிருவேன்னு உன்னைத் தவிர வேற யாருமே என்கிட்ட சொன்னதில்ல கார்த்திக். அப்பவே என் வாழ்க்கை உன்னோடு தான்னு நான் முடிவு பண்ணிட்டேன்.

திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்..
எனக்குச்
சொர்க்கம் என்பதே
நம் திருமணத்தில் தான்
நிச்சயிக்கப்படுகிறது!

கடைசியில் நீ என்னை எதுக்காக avoid பண்ணுனங்கற காரணத்தைக் கேட்டு நான் நொறுங்கிப் போயிட்டேன் கார்த்திக். அப்போ தான் நீ என் பக்கத்துல இல்லாததே எனக்கு நினைவு வந்த மாதிரி உன்னைத் தேடினேன். படிப்பு, வேலை எல்லாத்தையும் விட்டுட்டு அந்த நொடியே உன்கிட்ட ஓடி வந்துரலாமானு தவிச்சேன். நீ என்னை ஆசுவாசப்படுத்துனதுக்கு அப்புறம் சமாதானம் பண்ணிகிட்டு உன்னைச் சேர்ற அந்த நாளுக்காக தினமும் காத்துட்டு இருக்கேன். Infact, மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைத் தான் நாம செய்றோம்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்.

உன்னை நான் எந்தக் காரணத்துக்காகவும் விடுறதா இல்லை கார்த்திக். என் வாழ்க்கை உன்னோட தான்னு தீர்மானம் பண்ணிட்டேன். நம்ம ரெண்டு பேர் அம்மா அப்பா கால்ல விழுந்தாவதுகார்த்திக்கை எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கனு கெஞ்சப் போறேன். நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன் கார்த்திக். கல்யாணத்துக்கு அப்புறம் உனக்குப் பிடிச்சதையெல்லாம் சமைக்கிறதுக்காக ரெசிபீஸ் பார்த்துட்டு இருக்கேன். உனக்கு ஒரு perfect match-ஆ இருக்குற மாதிரி நிறைய விஷயங்கள்ல என்னை நானே சரிபண்ணிட்டு வர்றேன். உண்மையைச் சொல்லனும்னா உன்னை லவ் பண்ணுனதுக்கு அப்புறம் தான் நான் என்னையே லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன் கார்த்திக்.

2011 Lovers Day க்கு எனக்காக நீ ஒரு கவிதை எழுதினியே? So sweet. I loved it. அந்த மாதிரி இன்னொரு கவிதை எழுதேன்? இப்பவே என்கிட்ட சொல்லனும்னு அவசரம் இல்லை. மெதுவா நம்ம கல்யாணத்தன்னைக்கு சொன்னா கூட போதும் ;)

எனக்கே எனக்கென்று
அழகான
ஓர் உலகத்தை
அறிமுகம்
செய்து வைத்த
பேரழகன் நீ!

            கார்த்திக்.. நான் உனக்கேத்த ஜோடியானு எனக்குத் தெரியல. ஆனா உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. Life is short. அந்தச் சின்ன வாழ்க்கையை உன்னோட ரசிச்சு வாழனும்னு ஆசையா இருக்கு. உன்கூட சண்டை போடாம, உன் சொல் பேச்சு கேட்டு நல்ல பொண்ணா நடந்துக்கிறேன் கார்த்திக். என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா? உன்னைப் பத்தி எழுத ஆரம்பிச்சு என்னலாமோ எழுதிகிட்டே இருக்கேன். உனக்குப் புரியுதா கார்த்திக்?

I love U <3 :-*

   Forever Urs..

எச்சரிக்கை: மகனே, இதையும் படிச்சிட்டு “post super.. as usual”னு feedback கொடுக்காம ஒழுங்கா பொறுப்பா பதில் சொல்லு. இல்லன்னா divorce தான் :)

64 comments:

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிக உரிமையையும்
ஆழமான அன்பையும்
மிக அழகாக சொல்லிப்போகும்
காதல் கடிதம் அருமை
பரிசும் வெல்ல வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ப்ரபோஸ் செய்யக் கூடாதுன்னு சொல்லி, அப்புறம் கட்டிப் பிடிச்சு, முத்தம் கொடுத்து எல்லாமா....!

செம லவ்ஸ் தெரியுது கடிதத்துல. உணர்வு பூர்வமான கடிதம். பாராட்டுகள்.

Parimala R said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

jenmam muzhuvathum unthan vizhigalil
thangi kolla varava
unnai vida oru nalla manithanai
kandathillai thalaiva...

Parimala R said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

solla ninaipathai solli mudithida
illai illai thunichal
nenjil irupathai kangal uraipathu
romba romba kuraichal

சீனு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சொர்கமே திருமணத்தில் தான் நிச்சயிக்கப் படுகிறது.. எப்படி இப்படி ஒரு அசாதாரண கவிதையை சாதாரணாமாக எழுதிவிட்டீர்கள், கவிதையை மட்டுமே பலமுறை படித்து சிலாகித்துக் கொண்டிருந்தேன்....

பாப்பா எனக்கும் அப்படி அழைப்பது பிடிக்கும்...

நீ தானே என் பொன் வசந்தம்பார்க்கவில்லை, ஆனால் கௌதம் படத்தில் ஹீரோயின் வாய்ஸ் எப்படி இருக்கும் என்று தெரியும் என்பதால் ஜெஸி கார்த்திக்கிடம் படித்துக் காட்டுவது போல் படித்துப் பார்த்தேன்...

நமக்கு அமையும் துணைக்கும் புத்தக உலகம் மேல் காதல் இருந்தால் தவமின்றி கிடைத்த வரமே... குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உங்கள் அத்தனை வரிகளையும் சொல்லலாம், ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்

உங்கள் காதலையும் அதை விட உங்கள் எழுத்துகளையும் பார்த்து பொறாமைப்படுகிறேன்...

காதலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Ramani S

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஸ்ரீராம்.

நன்றி ஸ்ரீராம்! காதல் கடிதத்துல காதல் இல்லைன்னா எப்படி? அதான் :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Parimala R

Superb lines akka :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சீனு

‘Competition-ல் வெற்றி பெற வாழ்த்துகள்’னு சொல்லாம ‘காதலில் வெற்றி பெற வாழ்த்துகள்’னு சொன்னதையே என் காதல் கடிதத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன் ஸ்ரீ :)

Tamizhmuhil Prakasam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

" திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்..
எனக்குச்
சொர்க்கம் என்பதே
நம் திருமணத்தில் தான்
நிச்சயிக்கப்படுகிறது!"

அழகான வரிகள்.மிகவும் இரசித்தேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி.

அனைவருக்கும் அன்பு  said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காதலின் தவிப்பு விரைவில் கைகூட வாழ்த்துக்கள்

ஜீவன் சுப்பு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வரிக்கு வரி வார்த்தை சிக்சர்கள் , சூப்பர் சுபா ...!

அதென்ன எல்லாப் பொண்ணுங்களுக்கும் கார்த்திக் க்குங்க்குற பேர்ல அவ்ளோ கிரேஸ் ...! ஒடனே போய் பேர மாத்தனும்பா ...!

VOICE OF INDIAN said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான காதல் கடிதம்... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Tamizhmuhil Prakasam

நன்றி!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@கோவை மு சரளா

நன்றி!!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஜீவன்சுப்பு

Thank U அண்ணா! ஏதோ ஒரு கௌதம் மூவி ஹீரோ நேம் வைக்க ஆசைபட்டேன். கார்த்திக் செட் ஆகிருச்சு :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Bala subramanian

மிக்க நன்றி!

சீனு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஜீவன்சுப்பு

Thank U அண்ணா! ஏதோ ஒரு கௌதம் மூவி ஹீரோ நேம் வைக்க ஆசைபட்டேன். கார்த்திக் செட் ஆகிருச்சு :)

அண்ணே உங்க தங்கச்சி சொல்றத நீங்க வேணா நம்பலாம், நாங்க ஹி ஹி ஹி

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சீனு

எனக்குன்னு ஒரு நேரம் வரும்ல.. அப்பம் பாத்துக்கிடுதேன் :))

Vijayan Durai said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடிதத்தில் இறைந்து கிடக்கும் கவிதைகளை மிகவும் ரசித்தேன் அத்தனையும் சூப்பர் !

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@விஜயன்

மிக்க நன்றி!

Prem S said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காதல் நிரம்பி வழிகிறது இந்த கடிதத்தில் ...

//பேசிக்கொண்டே இருக்க விஷயங்களும் கொடுத்துக் கொண்டேயிருக்க முத்தங்களும் எங்கிருந்து குறையாமல் எடுக்கிறாய் நீ?//

அட அட உண்மை தான்

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Prem s

மிக்க நன்றி!

பால கணேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வரிக்கு வரி காதலில், உணர்வுகளில் தோய்ந்து வந்த கடிதம். எனக்கும் ஒரு காதல் கடிதம் எழுதணும்னு ஆசையை உண்டாக்கிட்டீங்க சுபத்ரா..!

Ranjani Narayanan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நீங்கள் பிழிஞ்சு பிழிஞ்சு அழுததைவிட, இந்தக் கடிதத்தில் உங்கள் காதலை அதிகமாகவே பிழிஞ்சு பிழிஞ்சு கொடுத்திடீங்க!
நடுநடுவில் வந்த நகைச்சுவையையும் ரசித்தேன்.
(லக்ஷ்மி மேனன் னு சொல்லி தொப்பி குடுத்துறாத)

//எச்சரிக்கை: மகனே, இதையும் படிச்சிட்டு “post super.. as usual”னு feedback கொடுக்காம ஒழுங்கா பொறுப்பா பதில் சொல்லு. இல்லன்னா divorce தான் :)//
காதல் கடிதத்திலேயே divorce ஆ?

வரிக்கு வரி - இல்லையில்லை எழுத்துக்கு எழுத்து காதல், காதல், காதல்!

I love you <3 அருமை!
//பேசிக்கொண்டே இருக்க....// கவிதை ரொம்ப பிடித்திருந்தது.


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@பால கணேஷ்

நன்றி! எழுதுங்க எழுதுங்க :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Ranjani Narayanan

நன்றி மா :)

"divorce" எல்லாம் சும்மா.. உல்லுல்லாயீ :))

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Dear Karthik,//


Wish you all the best Karthik & Subathra..

Send Invitation Soon.

congrats.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Siva sankar

Hello, yen ippadi? This is for a competition! I don't know anyone named Karthik!! :)

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Nambitom..Yen Unmaiyaga erukka koodathu..:)

Wish you all the best suba..

அப்பாதுரை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

intellectம் passionம் சமமாகக் கலந்த coctail. போதையான கடிதம். பாராட்டுக்கள். (எனக்கு மட்டும் சொல்லிடுங்க: who the #@$ is samantha?)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@அப்பாதுரை

Thank U! Good question indeed :)

Ahem.. Samantha is really one hell of a girl born to love Karthik. Nothing more nothing less :P

Suresh Selvaraj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Super Post :)
Ha Ha..Hearty Congrats on Winning the First Prize for Love Letter Contest conducted by seenuguru.com

aavee said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பரிசுப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

சத்ரியன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதல்பரிசினைத் தட்டிச் சென்றிருக்கின்றீர்கள்.
வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

மிகவும் ரசனையான (மிரட்டல்) காதல் கடிதம்.

(கடைசி மிரட்டலுக்கு உங்கள் காதலன் பயந்தானோ இல்லையோ, நடுவர்கள் பயந்துட்டாங்க போல.)

saidaiazeez.blogspot.in said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அட உண்மையிலேயே சிறந்த கடிதத்துக்கே முதல் பரிசு கிடைத்திருக்கிறதே!
வாழ்த்துக்கள்!

கார்த்திக் சரவணன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

போட்டியில் முதல் பரிசை தட்டிச்சென்றதற்கு வாழ்த்துக்கள்....

ஜீவன் சுப்பு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்த்துக்கள் சுபா ...!
அழகான (காதல் கடிதம்) எழுதும் ஒரு பெண் "கலெக்டர்" விரைவில் அவதரிக்க இருக்கிறார்....!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Suresh Ginger

மிக்க நன்றி :))

ரிஷபன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதல் பரிசை வென்றதற்கு மனப்பூர்வமான வாழ்த்துகள் :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@கோவை ஆவி

மிக்க நன்றி! :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சத்ரியன்

Hahaha :)) Thank U :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சைதை அஜீஸ்

மிக்க நன்றி சைதை அஜீஸ்!! :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஜீவன்சுப்பு

நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள் அண்ணா :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ரிஷபன்

மனப்பூர்வமான நன்றி! :)

சமீரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்த்துக்கள்!!
இப்போ தான் உங்கள் காதல் கடிதம் படித்தேன்... ரொம்ப அழகா இருக்கு...
கார்த்திக்..ஏதோ மாதவன் கிட்ட propose பண்ற feeling வருது....

உங்கள் எழுத்து நடை மிக அழகு!!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்த்துக்கள் சுபத்ரா.அற்புதமான கடிதம்.

Deepak said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ரொம்ப அழகான காதல் கடிதம்.
இடையில வர குட்டி குட்டி கவிதைகளும் அருமையா இருக்கு.
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் :)

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதல் பரிசு வென்றதற்கு வாழ்த்துக்கள் தோழி !
கடிதம் ஒரு இனிய காதல் மசாலா திரைப்படம் பார்த்தது போல்
உணர்வு இருந்தது.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சமீரா

மிக்க நன்றி! :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@T.N.MURALIDHARAN

நன்றி :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Deepak

மிக்க நன்றி :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஸ்ரவாணி

அப்படியா? நன்றி :)

Ranjani Narayanan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் சுபத்ரா! உங்கள் காதல் கடிதத்தையும், கடைசியாக ஒரு எச்சரிக்கை விட்டிருக்கிறீர்களே, 'மவனே...' என்று அதையும் ரசித்தேன்.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Ranjani Narayanan

ஹிஹிஹீ :D :D மிக்க நன்றிமா :) நேரில் சொல்ல முடியாததை எல்லாம் கடிதத்தில் மட்டும் தான் எழுதமுடியுமாக்கும் :)

Kanmani Rajan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

:) இன்னைக்கு தான் படிச்சேன், அருமையோ அருமை! வாழ்த்துக்கள்!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Kanmani Rajan

Thank U Kanmani! உனக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள் :)

வருண் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

This is the first time I am visiting your blog, I think Subathra! You seem like a serious writer! :) Since you have already won the first prize in this competition and so, it is too late to make any comments or criticisms. Congrats! However, it is my belief that காதல் கடிதம்னா பொண்ணுங்க எழுதுவதுபோல் எழுதினால்தான் அர்த்தமாகவும், இயல்பாகவும், கவர்ச்சியாகவும், இருக்கும்.. மேலும் பரிசு பெறும் தகுதியைப் பெறும் என்பது.

அநத நம்பிக்கை பொய்யாகவில்லை! :) Take it easy! :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@வருண்

வாழ்க ur nambikkai வருண்ஜி. But u see, male writers have also won prizes in this love letter competition :)

எம்.ஞானசேகரன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் பதிவு இன்று தமிழ்மணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@கவிப்ரியன் கலிங்கநகர்

வலைச்சரத்தில் பார்த்தேன்.. மிக்க நன்றி கவிப்ரியன்!

Ganesh said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வேதங்களை வலைப்பக்க வரிகளில் சொல்லித்தரும் வேதநாயகி என்று உங்களுக்கு பெயர்வைத்தால் தகும் தோழியே! அருமை அருமை

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Ganesh

Heheee :-)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Ganesh

Heheee :-)