There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

அம்மா, மழை மற்றும் மரியான்

Aug 6, 2013Blog பண்ணி பல நாள் ஆச்சு. Time இருந்தா mood இல்ல. Mood இருந்தா விஷயம் இல்ல. விஷயம் இருக்கும் போது time இல்ல. படிக்கதுக்கு வேற எக்கச்சக்கம் இருக்கு. டிசம்பர் 1ம் தேதி ஒரு dragon மாரி என்ன பாத்து சீறிகிட்டு இருக்கு (அன்னைக்கு தான் Mains exam). படிக்கனும் படிக்கனும் ஒன்னு விடாம படிக்கனும் (அதுக்கு index தான் படிக்கனும்னு நீங்க சொல்றது எனக்கு கேக்கல) :))

கடின உழைப்பு, கடவுள் அருள், நண்பர்களின் உதவிகள் இது போக முதல்நிலை த் தேர்வுல நான் பாஸ் பண்ணதுக்கு முக்கிய காரணம் என் அம்மா :) தினமும் என்ன encourage பண்ணியே பேசிட்டு இருப்பாங்க. Hard work பண்ணு.. பலனை எதிர்பாருனு சொல்லுவாங்க. Result வர்றதுக்கு முந்தின நாள், ‘திக் திக்னு இருக்குமானு நான் சொன்னதுக்கு எந்த அம்மாவா இருந்தாலும் சொல்லியிருக்கக் கூடிய பதில் கவலப்படாத. நீ பாஸ் பண்ணிருவ’. ஆனா எங்க மம்மி என்ன சொன்னாங்க தெரியுமா? ‘நீ ஹார்ட் வொர்க் பண்ணிருந்தா கண்டிப்பா பாஸ் பண்ணுவ. கவலப்படாத’ (துலாம் ராசி) தைக் கேட்டதுக்கு அப்புறம் என் இதயம் நிமிஷத்துக்கு 144 தடவ துடிக்க ஆரம்பிச்சது :))

இப்ப மெயின்ஸ் பரீட்சைக்கு நான் படிக்கனும்னு அவங்க சொன்ன டயலாக் முயற்சி திருவினையாக்கும் - முயற்சி பண்ணுனா வெற்றி கிடைக்கும்’. நம்ம தான் தமிழ் இலக்கியச் செம்மண் ஆச்சே. உடனே சொன்னேன். அது திருக்குறள்ம்மா.. முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்னு.திரும்பச் சொல்லுனு சொன்னாங்க. சொன்னேன். அவங்களுக்கு புரியல.. அப்படின்னா என்னபிள?’னு கேட்டாங்க. நமக்குத் தான் அது போதுமே! :))

அம்மா அம்மா.. முயற்சி பண்றவங்களுக்கு வெற்றி கிடைக்கும். முயற்சி இல்லாம இருந்தா துன்பம் தான் கிடைக்கும்னு அர்த்தம்மா. ரெண்டாவது பகுதிய நீங்க விட்டுட்டீங்கனு சொன்னேன். அதுக்கு உடனே எங்கம்மா சீரியஸா சொன்ன பதில் நல்ல விசயத்தை மட்டும் தான் நான் படிச்சிருக்கேன். கெட்ட விசயத்தையெல்லாம் யாரும் எனக்கு சொல்லித் தரல’. தொப்பி தொப்பினு எனக்குள்ள இருந்த அந்த சின்ன சுபத்ரா என்ன அசிங்கப்படுத்திச் சிரிச்சா. வேற என்ன? :(

அப்புறம், மூனு நாளைக்கு முன்னாடி ஒரு ராத்திரி சென்னைல பயங்கர மழை. உங்க ஊர் மழை எங்க ஊர் மழை இல்ல.. அதகளம். நான் தங்கியிருக்கிறது மாடியோட சேர்ந்த ஒரு ரூம். அப்ப தான் ஒரு ஐடியா தோனுச்சு. எத்தன நாள் தான் ஜன்னல் கம்பிக்கு பின்னாடி நின்னு க்ரீன் டீ குடிச்சிக்கிட்டே மழையை ரசிக்க? முழுசா நனைஞ்சுத்தான் பாப்பமேனு. அதுக்கப்புறம் நடந்தத கேட்கவா வேணும். மாடில லைட் எல்லாம் அணைச்சிட்டு நனைஞ்சுகிட்டே இருட்டா இருந்த வானத்தை நிமிர்ந்து பார்க்குறப்போ முகத்துல சொட்டுச் சொட்டா விழுந்த மழையை நிறைவா ரசிச்சது அன்னைக்குத் தான். மொத்த வாழ்க்கைக்கும் சேர்த்து மொத்தமா மழையில நனைஞ்சாச்சு. நல்ல வேளை காலையில உடம்புக்கு ஒன்னும் ஆகல. மழை நல்லது :)

அப்புறம் Green Tea ரொம்ப நல்லாயிருக்கு. அதுல நிறைய antioxidants இருக்கு. Caffine content ரொம்ப கம்மி. உடம்புல Metabolic rate அதிகமாக்குதாம். அதனால ஏகப்பட்ட நன்மைகள் கண்கூடாவே பாக்குறேன். நீங்களும் try பண்ணிப் பாருங்க. நான் TajMahal – Honey Lemon flavour வாங்குனேன். அப்புறம் இப்போ ஊட்டில வாங்குன ஒரு Leafy (இலையிலையா இருக்கும்) Green Tea யூஸ் பண்றேன். ஒரே ஒரு விஷயம்.. Anaemic-கா இருக்குறவங்க, sugar, pressure எல்லாம் ரொம்ப low-வா border-ல இருக்குறவங்க வெறும் வயித்துல க்ரீன் டீ குடிக்காதீங்க. அது சட்டுனு pressure இன்னும் லோவாக்கிருமாம். :(


Then, மரியான் படம் பார்த்தேன். எனக்கென்னவோ படத்துல ஒரு பிடிப்பே வரல. பனிமலர் பார்வதிக்காகவும் தனுசுக்காகவும் ஒருதடவ பார்க்கலாம். அதுக்கப்புறம் பார்த்தா சரியான தொம்ச.. sorry இம்சையா தான் இருக்கும் போல. Dialogues-ல தூத்துக்குடி slang சரியா set ஆகல. ரொம்ப artificial-லா தெரிஞ்சிச்சு. பனிமலரோட Eye make-up, duplicate மூக்குத்தி (sometimes on left side of the nose & sometimes right), கடல் சம்பந்தபட்ட காட்சிகள், A.R. Rahman’s background music, songs எல்லாம் செம :) அப்பப்ப light-டா அழவைக்கிற சீன்ஸ் வேற. ஆனா கண்ணுல lens & kajal போட்ருந்ததால நான் அழல ;)

சரி அடுத்த பதிவில் சந்திக்கலாம். யாரங்கே! சூடா ஒரு க்ரீன் டீ ப்ளீஸ்ஸ்!! :-* (யாரையும் காணோம் நானே போறேன் tata bye see u) :) :) :)

11 comments:

Avargal Unmaigal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடினபட்டு படிக்கும் உங்களுக்கு நான் க்ரின் டீ போட்டு எடுத்து வரலாமுன்னு நினைச்சேன் அதுக்குள்ள நீங்க tata tea buy பண்ண போறீங்கன்னு அதை தப்பு தப்பா இப்படி டைப் பண்ணிட்டு போயிட்டீங்க tata bye see u

ஒகேங்க படிச்சதுல மண்டை குழம்பி போயிருக்கும்.. இனிமமேலும் குழம்பாமல் நன்றாக் படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Avargal Unmaigal

Post எழுதுன எனக்கே அந்த நிலைமைனா அதைப் படிச்ச உங்க நிலைமை..பாவம் தான் :))

சே. குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மழையில் நனைந்தது...

கிரீன் டீ...

அம்மாவின் அரவணைப்பு...

மரியான்...

படிப்பு...

அனுபவங்கள் அருமை....

Ramani S said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக இயல்பான நடையில்
சொல்லிச் சென்றவிதம் இதம்
தொடர வாழ்த்துக்கள்

ஸ்கூல் பையன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அனுபவங்களை பளிச்னு சொல்லியிருக்கீங்க சகோதரி... ரசித்துப் படித்தேன்... நன்றி..

சீனு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

குற்றலாம்ள செம மழ நல்லா நனைந்தேன்... குடை நல்லது :-)

//மழை நல்லது :)// ஒருவேள ஏதாவது ஆகியிருந்தா என்ன மாதிரி குடை நல்லதுன்னு சொல்லிருபீங்களோ

ப்ர்லிம்ஸ் பாஸ் பண்ணினதுக்கு நீங்க மட்டும் ஸ்வீட் எடுத்து கொண்டாடக் கூடாது.. எங்களுக்கு எப்போ ட்ரீட்

மரியான் சொன்னாலும் சொல்லாட்டாலும் சரியான தொம்ச தான்... ரஹ்மான் வேற அப்பபோ நெஞ்சுக்குள்ள நியாபகபடுத்தி ஒரே கடல் எபெக்ட் தான்...

அமுதா கிருஷ்ணா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எழுதப்போகும் தேர்விலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

mohan baroda said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Congratulations for passing the prelims. Best of luck for mains.
Your way of writing is quite simple and very interesting.

sivaananth said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

"இது போக முதன்மைத் தேர்வுல நான் பாஸ் பண்ணதுக்கு "

அது முதல்நிலை தேர்வு .. மெயின் தேர்வு என்பதே முதன்மை தேர்வு

sivaananth said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சிறிய திருத்தும்

முதல்நிலை தேர்வுக்கு(Prelims) முதன்மை தேர்வு(mains) என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@sivaananth

நன்றி சிவா. திருத்தியாச்சு.