முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Happy New Year !

Happy New Year

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்-என்தன்
முன்னைத் தீயவினைப் பயன்கள்-இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதியவுயி ராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து-மதி
தன்னை மிகத்தெளிவு செய்து-என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

தோளை வலியுடைய தாக்கி-உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி-அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும்-கட்டு
மாறா வுடலுறுதி தந்து-சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல்-ஒளி
நண்ணித் திகழும்முகந் தந்து-மத
வேலை வெல்லும்முறை கூறித்-தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்
தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும்
தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும்
- மகாகவி பாரதியார்
**********
 
நன்றி: எனது கட்டுரையை வெளியிட்டு இந்தப் புத்தாண்டை மகிழ்வுடன் துவக்கிவைத்த ”இட்லிவடை”க்கு எனது மனமார்ந்த நன்றி!!!

 
அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள்!

கருத்துகள்

தமிழ்க்காதலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் கேட்டது கிடைக்கும்.... சர்வ நிச்சயமாய்.... சகலமும் சித்தியாகும்....அன்புடன் தமிழ்க்காதலன். வாழ்த்துக்கள்.
பத்மநாபன் இவ்வாறு கூறியுள்ளார்…
பாரதியின் பாடலோடு இவ்வாண்டின் இனிய தொடக்கம் .

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இட்லி வடையில் அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..
வினோ இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
மாணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்கும் இனிய புத்தாண்டு எல்லா வளமும் கொடுக்க வாழ்த்துக்கள்.. :-)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள்!

Who done minus vote?
settaikkaran இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! :-)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சற்று தாமதம்
கட்டுரை மிக அருமை
குஜராத் பற்றி நன்கு தெரிந்துகொண்டேன்
எப்படி பட்ட அரசாங்க செயல்முறைகள்
தமிழ்நாட்டிலும் இருந்தால் எவ்ளோ நல்ல இருக்கும்

அழகான கட்டுரை பகிர்வுக்கு நன்றி

அழகான பகிர்வு.

நன்றி வாழ்த்துக்கள்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
wish you a very happy new year dear subathra :)
எஸ்.கே இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
ரோமிங் ராமன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாம்மா சுபத்ரா(அ)வாப்பா சுபத்ரா, இ வ குடும்பமே உஙகள் பின்னாலே வருகுதே=== இனி,
நீங்கள் கேட்டது கிடைக்கும்.... சர்வ நிச்சயமாய்.... சகலமும் சித்தியாகும்

ரோமிங் ராமன்
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
பாரதியின் பாடலோடு இவ்வாண்டின் இனிய தொடக்கம் .

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பாரதி விரும்பி இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பார்ந்த சுபத்ரா,

பாரதி பாடலுக்கு நன்றி!!

சுட்டியைத் தொடர்ந்து சென்று உங்கள் கட்டுரை படித்தேன். அடடா என்ன அருமையான கட்டுரை. சொல்ல வந்ததை எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் சொல்லியிருக்கிறீர்கள்
இப்ப கிடைக்கிற பின்னூட்டங்களே உங்களுக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் தரக் கூடியதாய் இருக்கும்.

கவிதைக்கு வருபவை டெம்ப்ளேட்கள்.

கவிதை போட்டே தான் தீருவேன் என்ற பிடிவாதம் உங்களுக்கு இருக்குமெனில் இது போல ஒரிஜினல் கவிஞர்கள் எழுதியதைப் போடலாமே.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ தமிழ்க் காதலன்
மிக்க நன்றி...!!

@ பத்மநாபன்
நன்றி! நன்றி!

@ யோவ்
மிக்க நன்றி!

@ வினோ
நன்றி அண்ணா!

@ மாணவன்
மிக்க நன்றி!

@ கலாநேசன்
மிக்க நன்றி!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ரமேஷ்
நன்றி! (-)ve vote, dont know :-)

@ சேட்டைக்காரன்
நன்றி சேட்டை!!!

@ சிவா
நன்றி சிவா!

@ ஜெ.ஜெ.
THANK YOU DEAR :-) WISH U THE SAME TO U AND UR FAMILY..!

@ எஸ்.கே.
மிக்க நன்றி அண்ணா...!!!

@ ரோமிங் ராமன்
:-))

@ சே.குமார்
மிக்க நன்றி!
Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) இவ்வாறு கூறியுள்ளார்…
ஹாய் சுபத்ரா... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
பாரதி கவிதைகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. தேங்க்ஸ்.. :)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
மறுக்காமல் எழுத வேண்டுகிறேன்! :)

http://balajisaravana.blogspot.com/2011/01/2010.html
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சிவகுமாரன்
பாட்டாவே படிச்சிட்டீங்களா? அருமை. நன்றி!

@ ஆனந்தி
நன்றி டியர் :-)

@ BS
எழுதிருவோம் :)) நன்றி!!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

கதையின் கதை

... “ அ ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “ இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் ...