There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

என்னமோ ஏதோ..

Aug 1, 2011

      அலுவலகத்தில் ஆணி.. சாரி.. (எல்லாரும் இப்படிச் சொல்லிச் சொல்லி எனக்கும் அப்படியே வருது) வேலை அதிகமாக இருப்பதால் ப்ளாக்ஸ்பாட் பக்கம் எட்டி கூட பார்க்க முடியவில்லை! அதிக வேலை செய்ய வேண்டியிருக்கையில் “சரி பரவால்ல. இதெல்லாம் முடிச்சிட்டு இன்னைக்குப் போய் ஜாலியா ஒரு ப்ளாக் போஸ்ட் போட்றலாம்”னு சமாதானம் சொல்லிக்கிட்டே எந்த வேலையா இருந்தாலும் முடிச்சிடுறேன் :-) ப்ளாக் வச்சிருந்தா இது ஒரு அட்வான்டேஜ் போல!
   
   சாயந்தரம் 5.00 மணிக்கு மேலே வாடிக்கையாளர்களின் வருகை ஓரளவிற்குக் குறைந்த பின்னர் அலைபேசியில் இயர்போனைச் சொருகி நான் பாட்டுக்கு பாட்டு கேட்டுட்டே கணினியில் வேலையைச் செய்துகொண்டு இருப்பேன்.
      
       “...நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்குக் காத்திருந்தேன் காணல.. அட சாயங்காலம் ஆன பின்னும் சந்த மூடிப் போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோனல....”

      “மேடம் எப்பவும் தனியாவே பாட்டு கேட்குறாங்க... நமக்கும் கொஞ்சம் தமிழ்ப் பாட்டு வெச்சுக் காட்டலாம்ல”
      
      “ஆமா.. அஞ்சு மணியாச்சுனா அவங்க பாட்டுக்கு ‘டிவோஷனல் சாங்ஸ்’ கேட்க ஆரம்பிச்சிட்டே வேலையை முடிச்சிருவாங்க”
இதையெல்லாம் கேட்டுக்கொண்டு ‘ஹிஹீ’னு ஒரு சிரிப்பு மட்டும் சிரித்து வைத்துவிட்டு அப்படியே வேலையைக் கன்டினியூ தான். இன்னும்மா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டு இருக்கு!

*~*~*~*~*~*

      நான் குஜராத் வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் அம்மாவை ஒருமுறை கூட இங்கு அழைத்து வந்ததில்லை. அம்மா திருப்பதியைத் தாண்டி வடப்பக்கம் வந்ததேயில்லை. ஒரு மாதம் இங்கு வந்து இருப்பதாகச் சொன்ன அம்மாவிற்கும் கூடவே வந்து அவரை விட்டுச் செல்லும் அப்பாவிற்கும் டிக்கெட்ஸ் எல்லாம் எடுத்து வைப்பதாக முடிவானது. முடிவான நொடியிலிருந்து இப்பொழுது வரை அம்மா என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கும் ஒரே கேள்வி..

“சுபா, அங்க சின்ன வெங்காயமே கிடைக்காதா?”

      “ஐயோ.. அதை எத்தன தடவ மா சொல்லுவேன். நீங்க இங்க வரவே வேண்டாம் போங்க! :-)

*~*~*~*~*~*

      நீண்ட நாட்களாய் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒன்று இது. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் கட்டுரைப் போட்டி ஒன்றில் முதல் பரிசு வென்றதுக்காக எனக்கு ஒரு புத்தகம் பரிசாகத் தரப்பட்டது. அது ஒரு நாவல். வாழ்க்கையில் நான் படித்த முதல் நாவல். வாங்கிய அன்றே படிக்க ஆரம்பித்தேன். படித்து முடித்து விட்டுப் பிழியப் பிழிய அழுதுவிட்டு அந்தப் புத்தகத்தைத் தோழி ஒருத்திக்கு நினைவுப் பரிசாகக் கொடுத்துவிட்டேன். அது என்ன புத்தகம் என்றே அறிந்திருக்காத நிலையில் கதையை மட்டும் அடிக்கடி மனதில் நினைத்துக் கொள்வேன். இன்று கூகிளாண்டவரின் அருளால் அது என்ன புத்தகம் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன் :-) ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் பரிசாக அந்தப் புத்தகமா என ஆச்சர்யமாக இருந்தது!

நாவலின் பெயர் : மனோரஞ்சிதம் எழுதியவர் : காண்டேகர்

  தேடிப் பிடித்து நியூபுக்லேண்ட்ஸ் தளத்தில் கிடைப்பதை அறிந்து கொண்டேன்.

குறிப்பு : மனோரஞ்சித மலரை வைத்துக் கொண்டு எந்த வாசனையை மனதில் நினைத்தாலும் அந்த வாசனை வீசுமாம் :-) மலர்களுக்கே உரிய வண்ணங்களில் இல்லாமல் மிகவும் வித்யாசமாக இலைகளைப் போலவே பச்சை நிறத்தில் இருக்கும் இந்த மனோரஞ்சித மலர்கள் அதன் நிறத்தால் அல்லாமல் மணத்தாலே பூச்சிகளைக் கவருகின்றனவாம்.

      என்னமோ ஏதோ.. இந்த மனோரஞ்சிதம் நாவலைப் படித்தவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

*~*~*~*~*~*

கடைசியாக ஒன்று.. ரசிக்க!

இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடியும்
பட்டுப் போகிறது.
உன் உடைகள் காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறது.
-தபூ சங்கர்

*~*~*~*~*~*

29 comments:

அமுதா கிருஷ்ணா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சின்ன வெங்காயம் கிடைக்குமா கிடைக்காதா?

புத்தகம் கண்டு பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

dsfs said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மேடம் அப்பவே கட்டுரைப்போட்டியில முதல் பரிசு வாங்கிட்டிங்களா?

ஆபிஸ்ல பக்திப்பாடலா? நாங்களலாம் ஆபிஸ் போறதே ஆணி பிடுங்கதானே.

Chitra said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சின்ன வெங்காயத்தில் இருந்து மனோரஞ்சித பூவு வரை, கலந்து கட்டி அசத்துறீங்க..... :-)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Amutha Krishna

சின்ன வெங்காயம் இங்க கிடைக்காது போல. இது வரைக்கும் நான் பார்த்ததேயில்ல :(

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ பொன்மலர்

:) சின்ன வயசுல கட்டுரை எல்லாம் என்னோட கசின் எழுதிக் கொடுப்பாங்க டீ..நான் படிச்சிட்டுப் போய் போட்டியில எழுதுவேன் :)

பக்திப் பாடலா..என்ன பாடல்னு திரும்பவும் பதிவைப் படிச்சுப் பாரு :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Chitra

சித்ராக்கா.. உங்களை விடவா? உங்கள் வருகையில் மகிழ்ச்சி.. பாப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Amutha Krishna
வாழ்த்துகளுக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன்மா... :) மிக்க நன்றி!

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கலந்து கட்டி ஆடியிருக்கீங்க...
அம்மாவுக்கு சின்ன வெங்காயத்து மேல ரொம்ப விருப்பமோ?

settaikkaran said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//“சுபா, அங்க சின்ன வெங்காயமே கிடைக்காதா?”

“ஐயோ.. அதை எத்தன தடவ மா சொல்லுவேன். நீங்க இங்க வரவே வேண்டாம் போங்க! :-)//

என்னாது, அம்மா சென்டிமென்ட்-லேயே கைவைக்கறீங்களே? :-)))

Rathnavel Natarajan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

Arjun said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல நீங்க கட்டுரைப்போட்டியில அப்பவெ முதல் பரிசு வாங்கிட்டிங்க. அதான் சும்மா சாதாரணமா எழுதுனா கூட நல்லாயிருக்கு.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ சே.குமார்
ஆமா.. சாப்பாட்டிற்கு என்றாலும் சரி, மருத்துவத்திற்கு என்றாலும் சரி, அம்மா அடிக்கடி சின்ன வெங்காயத்தைத் தேடுவார்கள் :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ சேட்டைக்காரன்
அப்றம் என்ன.. ஒரே கேள்வியை ஓராயிரம் முறை கேட்டா? :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Rathnavel
தங்களது வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ அர்ஜூன்
இது நெஜமாவே காம்ப்ளிமென்ட் தானா? இல்ல.. நான் தான் நம்பிட்டனா? :)

Prabu Krishna said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பச்சை கலரில் பூ இன்றுதான் அறிகிறேன்.

சாதாரணமானவள் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹப்பா.... இன்றுதான் உங்கள் பதிவு எனக்கு open ஆகிறது. இதுவரை நான் படிக்க முயற்சி செய்தபோதெல்லாம் உங்கள் ப்ளாக் does not exist என்ற மெசேஜே வரும். அதனால் தான் பின்னூட்டம் இட முடியவில்லை.

ஆச்சரியம் தான் ஐந்தாம் வகுப்பு பெண்ணிற்கு காண்டேகரின் நாவல் பரிசு ...

Jaleela Kamal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஆபிஸுல ஜாலியா பாட்டு கேட்கிறீங்க
இங்க எங்க கேட்க முடியுது ...

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ பலே பிரபு

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ சாதாரணமானவள்
என் ப்ளாக் அப்பப்போ காணாம போயிரும். அந்தச் சமயத்துல தான் நீங்க வந்திருக்கீங்க.. :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Jaleela Kamal
எங்க? :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹப்பா.... இன்றுதான் உங்கள் பதிவு எனக்கு open ஆகிறது. இதுவரை நான் படிக்க முயற்சி செய்தபோதெல்லாம் உங்கள் ப்ளாக் does not exist என்ற மெசேஜே வரும். அதனால் தான் பின்னூட்டம் இட முடியவில்லை.
/// REPEATU...

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என் ப்ளாக் அப்பப்போ காணாம போயிரும். அந்தச் சமயத்துல தான் நீங்க வந்திருக்கீங்க.. :)//BLOG MATUM ELLAI..NEENGALUMTHAN...ALWAYS MISSING..

YOU ARE NOT L BOARD. MISSING BOARD.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என் ப்ளாக் அப்பப்போ காணாம போயிரும். அந்தச் சமயத்துல தான் நீங்க வந்திருக்கீங்க.. :)//

THIRUMBA OPEN AANATHIL ORU PAKKAM SANTHOSAM ENDRALUM..MARUPAKKAM KONJAM VARUTHAM THAAN :))))

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

HEY Template supera erukku suba..

Valthukkal.

thirumba vanthu blog post pativiathukku..

enimey kaanama pogatha..appdi ponal chollitu kaanamal ponga okva..

HiCRT said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Enna panrathu... aankal eppothum penkal nallavanga...nu romba nambidarommmmm....

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வணக்கம். என் பெயர் மனோரஞ்சிதம். நான் அந்த நாவலை படிக்க ஆவலாக உள்ளேன். உதவி செய்யவும்.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வணக்கம். என் பெயர் மனோரஞ்சிதம். நான் அந்த நாவலை படிக்க ஆவலாக உள்ளேன்.உதவி செய்யவும்.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மனோரஞ்சிதம் :))

நல்ல பெயர். தாங்கள் என்னை

“subadhra23@gmail.com”

என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு செய்யுங்களேன்!

நன்றி.