There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

வேற கலர் இருக்கா?

Aug 16, 2011


வணக்கம்!
     
இன்னைக்கு ஆகஸ்ட் 15, சுதந்தரதினம். சுதந்தரதினமும் அதுவுமா ப்ளாக்ல போஸ்ட் போடலன்னா நம்மள யாரும் ‘பிரபல பதிவர்’னு ஏத்துக்க மாட்டாங்க. அதோட சகபதிவர்களுக்கு வாழ்த்துகள் வேற சொல்லனும் இல்லையா. அதுக்காகத் தான் இந்தப் பதிவு.

யாரோட தொல்லையும் இல்லாம நிம்மதியா சுதந்தரமா தூங்கி எழுந்தது தான் இன்னைக்கு ஸ்பெஷல்! நண்பர்களுக்கு எல்லாம் வாழ்த்துகள் சொல்லி குறுந்தகவல்கள் அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இணையத்திற்கு இணைப்பு கொடுத்தேன். நம்ம ப்ளாகர்ஸ் எல்லாம் சுதந்தரதின ஸ்பெஷலா வித்யாசமா கலக்கியிருப்பாங்களேனு தேடிப் பார்த்தேன். சிலர் ரொம்ப அழகா எழுதியிருந்தாங்க. நாட்டுக்காக நாம என்னல்லாம் செய்யனும்னு லிஸ்ட் போட்டிருந்தாங்க. 'படிக்க' ரொம்ப நல்லா இருந்தது :-)
     
அப்புறம் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் செங்கோட்டையில் வைத்து ஆற்றியிருந்த உரையைப் படித்தேன். ஏனோ மிகவும் சோகமாக இருந்தது. நிறைய விஷயங்கள் பற்றிப் பேசியிருந்தாலும் ‘ஊழல்’ பற்றிய பகுதிகள் தான் கவனத்தைத் தூண்டின. கடந்த சில காலமாக நம் நாட்டில் நலிந்து பெருகி வரும் ஊழலைப் பற்றியும் அதனை ஒழிப்பதற்கு வேண்டிய முயற்சிகள் பற்றியும் குறிப்பாகத் ‘தகவலறியும் உரிமைச் சட்டம்’ அதற்கு நன்றாக உதவுவதாகவும் பேசியிருந்தார். விழிப்பான பத்திரிகை துறையும் விழிப்புணர்வு மிக்க மக்களும் ஊழலை ஒழிப்பதற்க்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் லோக்பால் பில் குறித்துப் பாராளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
பார்ப்போம்.. என்ன நடக்குதுன்னு. நமக்கு ஆயிரம் வேலை. ‘அந்தக் காரை வெச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யார் வெச்சிருக்காங்க’னு ஆராய்ச்சி செய்யவே நமக்கு நேரம் பத்தல.. இதுல ஊழலாவது ஒன்னாவது மண்ணாவது!

ஊரில் இருந்த பொழுது வருடாவருடம் பாளை வ.உ.சி. மைதானத்தில் வைத்து அதிகாலை ஏழு மணி முதல் நடைபெரும் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்யும் கொடியேற்றத்தையும் அதன்பின் தொடரும் விருது வழங்கும் வைபவங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் சென்று கண்டுகளிப்பது வழக்கம். எங்கள் பக்கத்து விட்டு பாஸ்கர் அண்ணன் தான் வளர்க்கும் புறாக்களில் வென்மையான அழகான ஒரு புறாவைத் தேர்ந்தெடுத்து அதற்குக் காவி, வெள்ளை, பச்சை என வண்ணங்கள் தீட்டி உலர வைத்துக் கொண்டு வந்து நிகழ்ச்சியின் போது மைதானத்தில் வைத்து ஜிவ்வென்று பறக்க விடுவார். தேசியக் கொடி பறப்பது போலச் சுதந்தரமாக வானில் அது பறக்கையில் காண்பவரின் மனதும் ஆகாயத்தில் பறக்கும்! நிகழ்ச்சிகள் முடிந்து நாம் வீட்டிற்கு வந்து சேர்கையில் நமக்கு முன்பாக அந்தப் பறவை பாஸ்கர் அண்ணனின் வீட்டிற்கு வந்து இரையைக் கொத்தித் தின்று கொண்டு இருக்கும்!!
‘அட கன்றாவியே! சுதந்திரமா பறக்க விட்டா தப்பிச்சுப் போகாம மறுபடியும் இப்படி வந்து அடிமை பட்டுக் கிடக்கிறியே!’ எனத் திட்டிக் கொண்டிருப்பேன். ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற இந்தியா சுதந்தர வானில் பறப்பதாக ஒப்பிட்டு பறக்கவிடப்பட்ட அந்தப் பறவையின் அச்செயலை, சுதந்தரம் பெற்றும் ஏதேதோ விஷயங்களுக்குத் தாமாகவே அடிமைபட்டுக் கிடக்கும் நம் இந்திய நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும் நினைப்பு இன்றும் எழுவதை எவ்வளவு முயன்றும் தடுக்க முடிவதில்லை!!

ஆகஸ்ட் 15, 2008 அன்று நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம். விடுமுறை நாள் ஆதலால் வழக்கமாக வீட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மந்தமான மதிய வேளை. திடீரென்று, அப்பொழுது ஓடிக்கொண்டிருந்த திருநெல்வேலி சூரியன் எஃப்.எம். ரேடியோவின் வால்யூமைக் கூட்டி வைத்துவிட்டு சமையல் கட்டிலிருந்த அம்மாவிடம் ஓடினேன். சில நொடிகளில் வீட்டிலிருந்த அனைவரும் வானொலியைக் கேட்கத் தொடங்கினர். மதியம் 2 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘மகளிர் மட்டும்’ நேரடி நிகழ்ச்சியில் பெண்மணி ஒருவர் எனது கவிதை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்.
“உன்னைக் ‘கல்’ என்று
அழைத்தால்
ஏன் கவலை கொள்கிறாய்?
உளி கொண்டு செதுக்கு..
பின் ‘சிற்பம்’ என்பார்கள்
கோவிலில் வைத்து..”
என்கிற ரீதியில் கல்லூரியில் நடைபெற்ற சுதந்தரதின விழாவுக்காக எழுதி அரங்கேற்றப்பட்டுப் பின் கல்லூரி ஆண்டுமலரில் வெளியிடப்பட்ட கவிதை.
நான் எழுதியதையும் மதித்து எனக்கே தெரியாமல் ஒருவர் படித்துக் கொண்டிருந்ததை ரசித்திருந்தேன்.. :-) ம்ம்ம்..

அப்புறம், சுதந்தரதின ஸ்பெஷல் ஜோக் ஒன்று எஸ்.எம்.எஸ். ஆக வந்தது.

உனக்கு நியாபகம் இருக்கா,
அந்த நாள்?
ஆகஸ்ட் 15..
நம்ம ரெண்டு பேரும் தேசியக் கொடி வாங்க போனோம்..
கடைக்காரன் கொடி தந்த போது
நீ கேட்ட கேள்வி...
*
*
*
"வேற “கலர்” இருக்கா?"
சிரிக்காத..
வெக்கமாயில்ல?

 அனைவருக்கும் இனிய சுதந்தரதின நல்வாழ்த்துகள்!

25 comments:

kuthu said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சுதந்தரம் என்று எழுதாதீர், விடுதலை என்று எழுதுங்கள்.

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அந்தக் கவிதையும் நகைச்சுவைத் துணுக்கும்
தங்கள் பதிவும் மிக மிக அருமை
பிரபல பதிவர் என பதிவே சொல்கிறதே?
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

settaikkaran said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//'படிக்க' ரொம்ப நல்லா இருந்தது :-)//

ஆஹா, வாழைப்பழத்துலே ஊசியா? :-))

நல்லாயிருக்கு! :-)

dsfs said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல பதிவு. ஜோக் அருமை. விட்டால் கலர் கலராக கொடி கேப்பார்கள்

Prabu Krishna said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற இந்தியா சுதந்தர வானில் பறப்பதாக ஒப்பிட்டு பறக்கவிடப்பட்ட அந்தப் பறவையின் அச்செயலை, சுதந்தரம் பெற்றும் ஏதேதோ விஷயங்களுக்குத் தாமாகவே அடிமைபட்டுக் கிடக்கும் நம் இந்திய நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும் நினைப்பு இன்றும் எழுவதை எவ்வளவு முயன்றும் தடுக்க முடிவதில்லை!! //

எனக்கும் இதே எண்ணம். கவிதை அருமை.

ஜெய்லானி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//அப்புறம், சுதந்தரதின ஸ்பெஷல் ஜோக் ஒன்று எஸ்.எம்.எஸ். ஆக வந்தது.//

சுதந்தர தின வாழ்த்துக்கள் :-))

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சுதந்தர தின வாழ்த்துக்கள் :-))

Radha said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ம்ம்ம்....ரொம்ப மனம் நொந்து கொள்ளும்படி பெரும்பான்மையினர் இல்லை. தினமும் நான் சந்திக்கும் மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.maybe, i am very lucky. :-)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/*kuthu said...

சுதந்தரம் என்று எழுதாதீர், விடுதலை என்று எழுதுங்கள்*/

அப்படியே ஆகட்டும் ஐயா!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/* Ramani said...

அந்தக் கவிதையும் நகைச்சுவைத் துணுக்கும்
தங்கள் பதிவும் மிக மிக அருமை
பிரபல பதிவர் என பதிவே சொல்கிறதே?
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் */

எப்பொழுதும் தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும் தொடர்ந்த வருகைக்கும் மிக மிக மிக நன்றி !!! :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/* சேட்டைக்காரன் said...

//'படிக்க' ரொம்ப நல்லா இருந்தது :-)//

ஆஹா, வாழைப்பழத்துலே ஊசியா? :-))

நல்லாயிருக்கு! :-) */

எது நல்லாயிருக்கு சேட்டை..வாழைப்பழமா, ஊசியா?
இல்ல.. பக்கத்து வீட்டுல ஒளியும் ஒலியும் போடுறாங்களே..அதுவா? ;)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/* பொன்மலர் said...

நல்ல பதிவு. ஜோக் அருமை. விட்டால் கலர் கலராக கொடி கேப்பார்கள் */

நன்றி தோழி! :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/* பலே பிரபு said...

எனக்கும் இதே எண்ணம். கவிதை அருமை. */

Thank you. Great scholars think alike :)))

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/* ஜெய்லானி said...

//அப்புறம், சுதந்தரதின ஸ்பெஷல் ஜோக் ஒன்று எஸ்.எம்.எஸ். ஆக வந்தது.//

சுதந்தர தின வாழ்த்துக்கள் :-)) */

நன்றி ஜெய்லானி..ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க! வருக வருக!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/* siva said...

சுதந்தர தின வாழ்த்துக்கள் :-)) */

வாடா ராஜா..எங்க இந்தப் பக்கமா? :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/* Radha said...

ம்ம்ம்....ரொம்ப மனம் நொந்து கொள்ளும்படி பெரும்பான்மையினர் இல்லை. தினமும் நான் சந்திக்கும் மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.maybe, i am very lucky. :-) */

வாங்க ராதா..ரொம்ப சந்தோஷம். நீங்க செய்றதையே உங்களுக்கு ரிஃப்ளெக்ட் பண்றாங்க போல..அதான்.
அதுசரி, இப்ப எதுக்கு இதைச் சொல்றீங்க?

Radha said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
This comment has been removed by the author.
Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தெரிச்சவங்க தெரியாதவங்க அப்படின்னு எதுவுமே இல்லை
என்னை பொறுத்த வரையிலும் எல்லாருமே தெரிந்த அல்லது தெரியாத நண்பர்கள் .
சிலருக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டேன் அவங்க ஒரு மரியாதைக்கு கூட வாழ்த்து சொன்னவங்களுக்கு
நன்றி சொல்லல.
ம் வாழ்த்துவதில் என்ன இருக்கு காசா பணமா
சந்தோசத்தில பெரிய சந்தோசம்
மத்தவங்கள சந்தோசம் படுத்துவது தான்.
பெரிய கிபிட் எல்லாம் வாங்கி கொடுப்பது விட
மனசார வாழ்த்துக்கள் சொன்னா அவர்கள் ஒரு நிமிசவது சந்தோஷ படுவாங்க
அதான் ஒரு சின்ன போஸ்ட் போடறேன்.எனக்கு தெரிந்து நேரம் இருந்தால் ஒரு அலைபேசி அழைத்தாவது வாழ்த்து சொல்லிக்கொண்டு வருகின்றேன்
உங்களுக்கு நேரம் இருந்தா விருப்பம் இருந்தா வாழ்த்துங்கள்
வானம் வாசப்படும்.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

* siva said...

சுதந்தர தின வாழ்த்துக்கள் :-)) */

வாடா ராஜா..எங்க இந்தப் பக்கமா? :)

//

ஏன் ராஜாத்தி நாங்க உங்கட ப்ளாக் பக்கம் வரகூடதா?
உன்னைத்தான் காணும் அடிக்கடி காணமல் போய்டர..?(something wrong):)

Radha said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//அதுசரி, இப்ப எதுக்கு இதைச் சொல்றீங்க? //
இப்போ எதற்கு சொல்கிறேன் என்றால்...பதிவில் ஊழல்வாதிகள் பற்றி எல்லாம் இருந்தது.
ஊழல்வாதிகள், பேராசை பிடித்தவர்கள், சுயநலத்துடன் அற்ப லாபத்தை நாடுபவர்கள்...நம் சமுதாயத்தில் நிச்சயம் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் இந்தியாவின் உயிர் இன்னும் கிராமங்களில் தான் உள்ளது என்று தோன்றுகிறது. அங்கெல்லாம் சாமான்ய மனிதர்கள், நல்லெண்ணம் நிரம்பியவர்கள், அளவிற்கு அதிகமான ஆசை இல்லாத மனிதர்கள்...இது போன்றவர்களைத் தான் சந்திக்க நேர்கிறது. நகரங்களிலும் மிகவும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பெரும்பான்மையினர் இருப்பதாகத் தோன்றுகிறது. தனக்கு பிச்சை போடாத நபர்களிடம் சில மேலை நாடுகளில் செய்வது போல இங்கு ஒரு பிச்சைக்காரர் கூட வன்முறையில் இறங்கி பார்த்ததில்லை. collective good will of the majority will engulf the petty minded minority...this is the land which produced greats like swami vivekananda, bharathiyaar,gandhi...so i shall be a proud indian. :-)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ சிவா
/*உன்னைத்தான் காணும் அடிக்கடி காணமல் போய்டர..?(something wrong):)*/

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது; எது நடக்கவிருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/* இந்தியாவின் உயிர் இன்னும் கிராமங்களில் தான் உள்ளது என்று தோன்றுகிறது*/

‘கிராமங்கள்’ எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நகரங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனவே!

/* collective good will of the majority will engulf the petty minded minority*/

எது மைனாரிட்டி, எது மெஜாரிட்டினு உறுதியாச் சொல்லமுடியுமா ராதா?

/*this is the land which produced greats like swami vivekananda, bharathiyaar,gandhi...so i shall be a proud indian. :-)*/

It is true that I too feel proud of being an Indian which begot the great persons like Vivek, Bharathi, Gandhi etc. At the same time it is more true that I feel ashamed of being born in a country which is one among the world's most corrupted countries.

Matangi Mawley said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

புறா சம்பவம் மிக அருமை.... எத்தனையோ விஷயங்களில் "சுதந்திரம்" தேடும் மனிதன், இறுதியில் அவனது மனச் சிறையினுள் கைதியாகிறான்--- அழகான concept ... :)
Special நாட்களில், மகிழ்ச்சி தரக்கூடிய எதிர்பாராத சம்பவங்கள்- என்றுமே ஒரு தனி சுகம்! :) உங்கள் கவிதை, radio வில் படிக்கப்பட்டதர்க்கு வாழ்த்துக்கள்!

rjd13 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

good one. i really appreciate your positive thinking

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Thank You Mawley!

Thank You rjd13 !