முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாம்பார் வாசம்

வணக்கம்! இப்போதான் தோசை+சாம்பார் செஞ்சு ரூம்மேட்டுக்கும் கொடுத்துட்டு நானும் சாப்பிட்டுட்டு வர்றேன் :) அது இருக்கட்டும்.. UNESCO அமைப்பு இன்னும் 50 ஆண்டுகளில் அழிய வாய்ப்பிருக்கும் மொழிகளாக நம் தங்கத்தமிழையும் அறிவிச்சிருக்கிறதைக் கேட்டீங்களா? செய்தியைக் கேட்டதிலிருந்து எனக்கு பயங்கர அதிர்ச்சி.
            யோசித்துப் பார்த்தால் பயமாகத் தான் இருக்கிறது. என்னதான் தமிழில் நமக்கே தெரியாத மாதிரி சான்ஸ்க்ரிட் கலந்திருந்தாலும் அட்லீஸ்ட் இங்கிலீஷ் கலக்காத தமிழில் ஒரு செண்டென்ஸாவது நாம் பேசுகிறோமானு தின்க் பண்ணிப் பார்த்தால் ஆன்ஸர் நெகட்டிவாகத் தான் வருகிறது! (ஹய்ய்ய்யோ...!!!)
            இதுபத்தி விரிவான பதிவு அப்புறமா எழுதுறேன்.. இப்போ வழக்கம்போல என்னோட சுயபிரதாபம் தான் :) “இன்னைக்கு என்ன சுபத்ரா?”னு கேக்குறீங்களா? ‘”கேட்கலையே’னு சொன்னா விடவா போறனு நொந்துகிறவங்களே.. Excuse me! மேல படிக்காதீங்கனு சொன்னா நீங்க மட்டும் கேட்கவா போறீங்க? கேட்க மாட்டீங்க :) அதனால நானும் எழுதுறத நிறுத்தப் போறது இல்ல :) ம்ம்ம்.. இன்னைக்கு என்னோட சமையல் திறமையைப் பத்திப் பேசப்போறேன்.
            சின்ன வயசுல இருந்து...(அடடடடா...னுலாம் சொல்லக்கூடாது) சின்ன வயசுல இருந்து எங்க அம்மா என்னைச் சமைக்கவே விடமாட்டாங்க. “அப்பா எல்லாம் சாப்பிடனும்.. நானே சமைக்கிறேன். நீ ஒழுங்கா படிச்சா போதும்னு சொல்லி விரட்டி விட்டுருவாங்க. இருந்தாலும் அவங்க இல்லாத சமையத்துல சில தடவை சமைச்சிருக்கேன். அவ்வளோ தான்!
            வேலைக்குச் சேர்ந்த உடனே வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்லவேண்டிய நிர்ப்பந்தமானதால் வேறு வழியில்லாமல் சமையல் செய்து தான் சாப்பிடவேண்டும் என்றாகிவிட்டது.. விதி யாரை விட்டது? குறிப்பாக என் அறைத் தோழியை இன்றுவரை விடவேயில்லை :) அம்மாவின் ரெசிபிகளை ஓரளவு அறிந்திருந்ததாலும் அவ்வப்போது அலைப்பேசியில் கேட்டுக் கொள்வதாலும் தைரியமாகச் சமைக்கத் தொடங்கியிருந்தேன்.
            வட இந்தியாவில் வசிக்கும் நம்ம ஊர்க்காரர்களிடம் கேட்டால் தெரியும்.. நாம் சமைக்கும் இட்லி, தோசை, சாம்பார், சட்னி, வெரைட்டி ரைஸ்களுக்கு ()ங்கே எவ்வளவு வரவேற்பு என்பது! சாம்பார் செய்து அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றால் நிச்சயமாக நாம் சாப்பிடுவதற்கு மிஞ்சாது!! கதம் கதம் தான். ஒரே புகழ் மாலை. அதிலும், ஜீரா ரைஸ், புலாவ், பிரியாணி, கிச்சடி என்ற நான்கே வகைகளில் அரியைச் சமைக்கத் தெரிந்த அவர்களுக்கு நம்ம ஊர் இளமஞ்சள் நிற எலுமிச்சை சாதம், நிலக்கடலை போட்டுச் சமைத்த புளியோதரை, நெய் மணக்கும் பொங்கல், மசாலா வாசம் வீசும் தக்காளி சாதம், பூப்பூவாய்த் தேங்காய் சாதம், இஞ்சி மிளகாய் கருவேப்பிலை எல்லாம் போட்டுத் தாளித்துச் செய்த தயிர் சாதம் என வகைவகையாகச் சமைத்துக் கொண்டு போனால் அவ்வளவு தான்! கபளீகரம் செய்து விடுவார்கள். சமைத்து எடுத்துக் கொண்டு போகும் நான் உடன் உணவருந்தவரும் ஆன்ட்டீஸின் பாரட்டு மழையில் தொப்பலாக நனைந்து விடுவேன். ‘“ரைஸ்வைக்கிறதுல சுபத்ரா ஒரு எக்ஸ்பேர்ட்!’ என்று எனது உச்சந்தலையில் அமுல்ஐஸ்வைத்துவிடுவார்கள்.
            வீட்டுக்கு வந்து ஃப்ரீயானவுடன் முதல் வேலையாக அம்மாவுக்குப் போன் பண்ணிஇந்த மாதிரி இந்த மாதிரிம்மானு சொல்லுவேன். முதலில் நம்பாதவாறு பேசினாலும் முடிக்கையில்ஆமா சுபா.. உனக்கு ஆச்சியின் கைப்பக்குவம் இருக்கு.. நீ இங்க சமைக்கும் போது நான் பார்த்திருக்கேன்என்று சொல்லும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்குறது மாதிரி!! எல்லாருக்கும் எப்படினு எனக்குத் தெரியல. ஆனா எனக்கு எப்பவுமே என்னோட அம்மா தான் எல்லா விஷயங்களிலும்வசிஷ்டர்”. அவங்களே நல்லாயிருக்குனு சொல்லிட்டாங்கன்னா, No second word!
            சரி.. இந்தவாட்டி வீட்டுக்குப் போய் ஏதாவது சமைச்சுக் காட்டுவோம்னு நினைச்சேன். ஸ்பெஷலா ஒன்னும் பண்ணல.. ஒரு நாள் சப்பாத்தி செய்யச் சொன்னாங்க. நானும் செஞ்சு வெச்சிட்டு facebook- status update பண்ணிட்டு இருந்தேன். பவர் அப்போ பார்த்து கட் ஆகிடுச்சு. கொஞ்ச நேரத்துல அம்மா ஒரு கைவிசிறியோட என் பக்கத்துல வந்து எதையோ பேசிட்டு இருந்தாங்க. “அட! இந்த விசிறி புதுசா இருக்கே.. எங்க வாங்குனீங்க?”னு கேட்டுட்டு உத்துப் பார்த்தா தான் தெரியுது.. அது கொஞ்ச நேரத்துக்கு முன்ன நான் செஞ்சு வெச்ச சப்பாத்தினு :D அப்புறம் என்ன.. சப்பாத்திக்கள்ளிமாதிரி அசடு வழிய சிரிச்சு வெச்சேன் எங்க அம்மா கிட்ட :)
            இப்படித் தான் இன்னொரு நாள் தோசை வார்க்கச் சொன்னாங்க. அதையும் செஞ்சு வெச்சிட்டு வழக்கம் போல facebook- status update பண்ணிட்டு இருக்கும் போது எங்க அம்மா கையில ஒரு அப்பளம் வச்சு சாப்பிட்டுகிட்டே வந்தாங்க. நான் பார்க்காமலேஅம்மா.. எனக்கு அப்பளம்னு கேட்டு வாங்கித் திங்கப் பார்த்தா... அது.. :) :) :) :) :) சரி சரி.. ஓவர் சிரிப்பு ஒடம்புக்கு ஆகாது... சிரிக்கிறத நிறுத்துங்க :)
           கடந்த சனிக்கிழமை சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமே பேன்க் முடிஞ்சு கிளம்பி எங்க அப்பார்ட்மெண்ட் வாசலுக்குள்ள நுழைஞ்சுகிட்டு இருந்தேன். அப்போ ஒரு வயசான பாட்டி, “சப்ஜி வாலாகிட்ட காய்கறி வாங்கிட்டு இருந்தாங்க. க்ராஸ் பண்ணிப் போன என்னைக் கூப்பிட்டு.. “..பென் ருக்கோ(நில்லு) நீ தான் அந்தசாம்பார்வைக்கிற பொண்ணா? ஐயோ.. என்ன மணம்..என்ன மணம்! எங்க வீடு வரைக்கும் வந்து வீசும். அவ்வளவு வாசனை!! என்ன தான் போட்டு சமைக்கிறியோ. நாங்களும் சாம்பார் வைக்கிறோம். ஆனா இப்படிலாம் வாசம் வரமாட்டேங்குதே? எப்படிமா?” அப்டினு சொன்னாலும் சொல்லுச்சு... எனக்கு பயங்கர சந்தோஷம் :) என்ன ஒரு காம்ப்லிமெண்ட்!! உடனே ப்லாக்ல எழுதி உங்க எல்லார்கிட்டயும் பெருமை பீத்திக்கனும்னு தான் இந்தப் பதிவையே ஆரம்பிச்சேன். [அதுசரி.. அந்த பாட்டி எப்படி தமிழ்ல சொல்லுச்சுனு கேக்காதீங்க. அது குஜராத்தில தான் சொல்லுச்சு. உங்களுக்குப் புரியாதுங்கறதுனால நான் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணிக் கொடுத்திருக்கேன். எந்த அளவுக்கு அருமையா ட்ரான்ஸ்லேட் பண்ணிருக்கேங்குறது இதைப் படிச்ச உடனே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும் ;) ]
            ம்ம்.. சரி சரி டைம் ஆச்சு. நான் போய் ஒரு sugarless green tea போட்டுக் குடிச்சிட்டுப் படிக்கப் போறேன். நீங்களும் படிங்க.. சாரி குடிங்க.. சாரி சாரி...என்னவோ பண்ணுங்க :) TAKE CARE :) SEE U SOON :)

கருத்துகள்

Avargal Unmaigal இவ்வாறு கூறியுள்ளார்…
ஓசி சாப்பாடு கிடைத்தா யாருதான் நல்லா இல்லேன்னு சொல்லுவாங்க... இட்லி சாம்பார் செய்வதில் நீங்கள் வடநாட்டில் பேமஸ்ன்னா நான் அமெரிக்காவில் பேமஸுன்ங்க லெமன் ரைஸ்ஸை தமிழ்நாட்டில் நம்ம எதிரிக்கு கூட செஞ்ச்சு போடமாட்டோம் ஆனா அதை இங்கு செஞ்சு ஆபீஸ் கொண்டு போனா வெள்ளைக்காரிங்க போட்டி போட்டு சாப்பிடுறாங்க
கேரளாக்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
Vanakkam subathra
Admin இவ்வாறு கூறியுள்ளார்…
சாம்பார் வாசத்தை முகர்ந்தவுடனேயே பசி அதிகமாயிடுச்சு சகோ..

பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு
இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
TAKE CARE :
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
எழுத்து நடை நன்றாக உள்ளது...
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்
✨முருகு தமிழ் அறிவன்✨ இவ்வாறு கூறியுள்ளார்…
|| ஒரு கட்டத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருத்தி அம்பு இருந்தும் எய்யலாம். இல்லாவிட்டாலும் எய்யலாம் :))||

ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்றிருந்தால் நன்றாக சாம்பார் வைக்க வரும்னு சார்லி சொல்லலியே..
:))
mohan baroda இவ்வாறு கூறியுள்ளார்…
During the first few months after my marriage, I used to take 30 - 40 idlis in my lunch box and I did not get even a single piece to eat. Within 10 minutes, all idlies got vanished, and those who are late, they have to eat idly without sambar and chutney.
அமுதா கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
ஸ்ஸப்பாஆஆஅ..இங்கே வாசம் அடிக்குது சுபத்ரா..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Avargal Unmaigal
ரொம்ப சரியா சொன்னீங்க :)

@ மதுமதி
:) பதிவைப் படித்தேன் சகோ.. கலந்துகொள்ள முடியாதே என்ற வருத்தம் :(

@ இராஜராஜேஸ்வரி
நன்றி! :)

@ திண்டுக்கல் தனபாலன்
நன்றிங்க :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ அறிவன்
ஒரு கிரகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருத்தி.....சார்லி சொன்னாலும் சாம்பார் நல்ல வைப்பாள்.. சார்லி சொல்லலனாலும் சாம்பார் நல்லா வைப்பாள் :)))
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மோகன், பரோடா
வணக்கம்! நலமா? வீட்டில் அனைவரும் சுகமா? இட்லி கதையைப் படித்தேன்.. :) சந்தோஷமாக இருந்தது :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ அமுதா கிருஷ்ணா
உங்க வீட்டுக் கிச்சன்ல பாருங்க :) யாராவது சாம்பார் வச்சிருப்பாங்களா இருக்கும் :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...