சாம்பார் வாசம்
Jul 25, 2012
வணக்கம்! இப்போதான் தோசை+சாம்பார் செஞ்சு ரூம்மேட்டுக்கும் கொடுத்துட்டு நானும் சாப்பிட்டுட்டு வர்றேன் :) அது இருக்கட்டும்.. UNESCO
அமைப்பு இன்னும் 50 ஆண்டுகளில் அழிய வாய்ப்பிருக்கும் மொழிகளாக நம் தங்கத் “தமிழை”யும் அறிவிச்சிருக்கிறதைக் கேட்டீங்களா? செய்தியைக் கேட்டதிலிருந்து எனக்கு பயங்கர அதிர்ச்சி.
யோசித்துப் பார்த்தால் பயமாகத் தான் இருக்கிறது. என்னதான் தமிழில் நமக்கே தெரியாத மாதிரி சான்ஸ்க்ரிட் கலந்திருந்தாலும் அட்லீஸ்ட் இங்கிலீஷ் கலக்காத தமிழில் ஒரு செண்டென்ஸாவது நாம் பேசுகிறோமானு தின்க் பண்ணிப் பார்த்தால் ஆன்ஸர் நெகட்டிவாகத்
தான் வருகிறது! (ஹய்ய்ய்யோ...!!!)
இதுபத்தி விரிவான பதிவு அப்புறமா எழுதுறேன்.. இப்போ வழக்கம்போல என்னோட சுயபிரதாபம் தான் :) “இன்னைக்கு என்ன சுபத்ரா?”னு கேக்குறீங்களா? ‘”கேட்கலையே’னு சொன்னா விடவா போற’னு நொந்துகிறவங்களே..
Excuse me! மேல படிக்காதீங்கனு சொன்னா நீங்க மட்டும் கேட்கவா போறீங்க? கேட்க மாட்டீங்க :) அதனால நானும் எழுதுறத நிறுத்தப் போறது இல்ல :) ம்ம்ம்.. இன்னைக்கு என்னோட சமையல் திறமையைப் பத்திப் பேசப்போறேன்.
சின்ன வயசுல இருந்து...(அடடடடா...னுலாம் சொல்லக்கூடாது) சின்ன வயசுல இருந்து எங்க அம்மா என்னைச் சமைக்கவே விடமாட்டாங்க. “அப்பா எல்லாம் சாப்பிடனும்.. நானே சமைக்கிறேன். நீ ஒழுங்கா படிச்சா போதும்”னு சொல்லி விரட்டி விட்டுருவாங்க. இருந்தாலும் அவங்க இல்லாத சமையத்துல சில தடவை சமைச்சிருக்கேன். அவ்வளோ தான்!
வேலைக்குச் சேர்ந்த உடனே வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்லவேண்டிய நிர்ப்பந்தமானதால் வேறு வழியில்லாமல் சமையல் செய்து தான் சாப்பிடவேண்டும் என்றாகிவிட்டது.. விதி யாரை விட்டது? குறிப்பாக என் அறைத் தோழியை இன்றுவரை விடவேயில்லை :) அம்மாவின் ரெசிபிகளை ஓரளவு அறிந்திருந்ததாலும் அவ்வப்போது அலைப்பேசியில் கேட்டுக் கொள்வதாலும் தைரியமாகச் சமைக்கத் தொடங்கியிருந்தேன்.
வட இந்தியாவில் வசிக்கும் நம்ம ஊர்க்காரர்களிடம் கேட்டால் தெரியும்.. நாம் சமைக்கும் இட்லி, தோசை, சாம்பார், சட்னி, வெரைட்டி ரைஸ்களுக்கு அ(இ)ங்கே எவ்வளவு வரவேற்பு என்பது! சாம்பார் செய்து அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றால் நிச்சயமாக நாம் சாப்பிடுவதற்கு மிஞ்சாது!! கதம் கதம் தான். ஒரே புகழ் மாலை. அதிலும், ஜீரா ரைஸ், புலாவ், பிரியாணி, கிச்சடி என்ற நான்கே வகைகளில் அரியைச் சமைக்கத் தெரிந்த அவர்களுக்கு நம்ம ஊர் இளமஞ்சள் நிற எலுமிச்சை சாதம், நிலக்கடலை போட்டுச் சமைத்த புளியோதரை, நெய் மணக்கும் பொங்கல், மசாலா வாசம் வீசும் தக்காளி சாதம், பூப்பூவாய்த் தேங்காய் சாதம், இஞ்சி மிளகாய் கருவேப்பிலை எல்லாம் போட்டுத் தாளித்துச் செய்த தயிர் சாதம் என வகைவகையாகச் சமைத்துக் கொண்டு போனால் அவ்வளவு தான்! கபளீகரம் செய்து விடுவார்கள். சமைத்து எடுத்துக் கொண்டு போகும் நான் உடன் உணவருந்தவரும் ஆன்ட்டீஸின் பாரட்டு மழையில் தொப்பலாக நனைந்து விடுவேன். ‘“ரைஸ்” வைக்கிறதுல சுபத்ரா ஒரு எக்ஸ்பேர்ட்!’ என்று எனது உச்சந்தலையில் அமுல் “ஐஸ்” வைத்துவிடுவார்கள்.
வீட்டுக்கு வந்து ஃப்ரீயானவுடன் முதல் வேலையாக அம்மாவுக்குப் போன் பண்ணி “இந்த மாதிரி இந்த மாதிரிம்மா”னு சொல்லுவேன். முதலில் நம்பாதவாறு பேசினாலும் முடிக்கையில் “ஆமா சுபா.. உனக்கு ஆச்சியின் கைப்பக்குவம் இருக்கு.. நீ இங்க சமைக்கும் போது நான் பார்த்திருக்கேன்” என்று சொல்லும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்குறது மாதிரி!! எல்லாருக்கும் எப்படினு எனக்குத் தெரியல. ஆனா எனக்கு எப்பவுமே என்னோட அம்மா தான் எல்லா விஷயங்களிலும் “வசிஷ்டர்”. அவங்களே நல்லாயிருக்குனு சொல்லிட்டாங்கன்னா, No
second word!
சரி.. இந்தவாட்டி வீட்டுக்குப் போய் ஏதாவது சமைச்சுக் காட்டுவோம்னு நினைச்சேன். ஸ்பெஷலா ஒன்னும் பண்ணல.. ஒரு நாள் சப்பாத்தி செய்யச் சொன்னாங்க. நானும் செஞ்சு வெச்சிட்டு facebook-ல status
update பண்ணிட்டு இருந்தேன். பவர் அப்போ பார்த்து கட் ஆகிடுச்சு. கொஞ்ச நேரத்துல அம்மா ஒரு கைவிசிறியோட என் பக்கத்துல வந்து எதையோ பேசிட்டு இருந்தாங்க. “அட! இந்த விசிறி புதுசா இருக்கே.. எங்க வாங்குனீங்க?”னு கேட்டுட்டு உத்துப் பார்த்தா தான் தெரியுது.. அது கொஞ்ச நேரத்துக்கு முன்ன நான் செஞ்சு வெச்ச சப்பாத்தினு :D அப்புறம் என்ன.. சப்பாத்திக் ‘கள்ளி’ மாதிரி அசடு வழிய சிரிச்சு வெச்சேன் எங்க அம்மா கிட்ட :)
இப்படித் தான் இன்னொரு நாள் தோசை வார்க்கச் சொன்னாங்க. அதையும் செஞ்சு வெச்சிட்டு வழக்கம் போல
facebook-ல status
update பண்ணிட்டு இருக்கும் போது எங்க அம்மா கையில ஒரு அப்பளம் வச்சு சாப்பிட்டுகிட்டே வந்தாங்க. நான் பார்க்காமலே “அம்மா.. எனக்கு அப்பளம்”னு கேட்டு வாங்கித் திங்கப் பார்த்தா... அது.. :)
:) :) :) :) சரி சரி.. ஓவர் சிரிப்பு ஒடம்புக்கு ஆகாது... சிரிக்கிறத நிறுத்துங்க :)
கடந்த சனிக்கிழமை சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமே பேன்க் முடிஞ்சு கிளம்பி எங்க அப்பார்ட்மெண்ட் வாசலுக்குள்ள நுழைஞ்சுகிட்டு இருந்தேன். அப்போ ஒரு வயசான பாட்டி, “சப்ஜி வாலா”கிட்ட காய்கறி வாங்கிட்டு இருந்தாங்க. க்ராஸ் பண்ணிப் போன என்னைக் கூப்பிட்டு.. “ஓ..பென் ருக்கோ(நில்லு) நீ தான் அந்த ‘சாம்பார்’ வைக்கிற பொண்ணா? ஐயோ.. என்ன மணம்..என்ன மணம்! எங்க வீடு வரைக்கும் வந்து வீசும். அவ்வளவு வாசனை!! என்ன தான் போட்டு சமைக்கிறியோ. நாங்களும் சாம்பார் வைக்கிறோம். ஆனா இப்படிலாம் வாசம் வரமாட்டேங்குதே? எப்படிமா?” அப்டினு சொன்னாலும் சொல்லுச்சு... எனக்கு பயங்கர சந்தோஷம் :) என்ன
ஒரு காம்ப்லிமெண்ட்!! உடனே ப்லாக்ல எழுதி உங்க எல்லார்கிட்டயும் பெருமை
பீத்திக்கனும்னு தான் இந்தப் பதிவையே ஆரம்பிச்சேன். [அதுசரி.. அந்த பாட்டி எப்படி தமிழ்ல சொல்லுச்சுனு கேக்காதீங்க. அது குஜராத்தில தான் சொல்லுச்சு. உங்களுக்குப் புரியாதுங்கறதுனால நான் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணிக் கொடுத்திருக்கேன். எந்த அளவுக்கு அருமையா ட்ரான்ஸ்லேட் பண்ணிருக்கேங்குறது இதைப் படிச்ச உடனே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும் ;) ]
ம்ம்.. சரி சரி டைம் ஆச்சு. நான் போய் ஒரு
sugarless green tea போட்டுக் குடிச்சிட்டுப் படிக்கப் போறேன். நீங்களும் படிங்க.. சாரி குடிங்க.. சாரி சாரி...என்னவோ பண்ணுங்க :)
TAKE CARE :) SEE U SOON :)
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
ஓசி சாப்பாடு கிடைத்தா யாருதான் நல்லா இல்லேன்னு சொல்லுவாங்க... இட்லி சாம்பார் செய்வதில் நீங்கள் வடநாட்டில் பேமஸ்ன்னா நான் அமெரிக்காவில் பேமஸுன்ங்க லெமன் ரைஸ்ஸை தமிழ்நாட்டில் நம்ம எதிரிக்கு கூட செஞ்ச்சு போடமாட்டோம் ஆனா அதை இங்கு செஞ்சு ஆபீஸ் கொண்டு போனா வெள்ளைக்காரிங்க போட்டி போட்டு சாப்பிடுறாங்க
Vanakkam subathra
சாம்பார் வாசத்தை முகர்ந்தவுடனேயே பசி அதிகமாயிடுச்சு சகோ..
பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு
TAKE CARE :
எழுத்து நடை நன்றாக உள்ளது...
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்
|| ஒரு கட்டத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருத்தி அம்பு இருந்தும் எய்யலாம். இல்லாவிட்டாலும் எய்யலாம் :))||
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்றிருந்தால் நன்றாக சாம்பார் வைக்க வரும்னு சார்லி சொல்லலியே..
:))
During the first few months after my marriage, I used to take 30 - 40 idlis in my lunch box and I did not get even a single piece to eat. Within 10 minutes, all idlies got vanished, and those who are late, they have to eat idly without sambar and chutney.
ஸ்ஸப்பாஆஆஅ..இங்கே வாசம் அடிக்குது சுபத்ரா..
@ Avargal Unmaigal
ரொம்ப சரியா சொன்னீங்க :)
@ மதுமதி
:) பதிவைப் படித்தேன் சகோ.. கலந்துகொள்ள முடியாதே என்ற வருத்தம் :(
@ இராஜராஜேஸ்வரி
நன்றி! :)
@ திண்டுக்கல் தனபாலன்
நன்றிங்க :)
@ அறிவன்
ஒரு கிரகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருத்தி.....சார்லி சொன்னாலும் சாம்பார் நல்ல வைப்பாள்.. சார்லி சொல்லலனாலும் சாம்பார் நல்லா வைப்பாள் :)))
@ மோகன், பரோடா
வணக்கம்! நலமா? வீட்டில் அனைவரும் சுகமா? இட்லி கதையைப் படித்தேன்.. :) சந்தோஷமாக இருந்தது :)
@ அமுதா கிருஷ்ணா
உங்க வீட்டுக் கிச்சன்ல பாருங்க :) யாராவது சாம்பார் வச்சிருப்பாங்களா இருக்கும் :)
Post a Comment