முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆய கலைகள்


விந்தி விரையும் அணுக்களில்
முந்தியதோ முட்டியதோ உயிர்ப்பது போல்
காட்சியிலோ கேள்வியிலோ
நுரையீரல் தொட்டுச் சுரப்பியைத் தூண்டும்
வாசங்களில் ஒன்றோ
ஸ்பரிசமோ காயமோ
மூளைக்குள் புதைந்திருக்கும் எதுவோ ஒன்றைப்
புணர்ந்து உயிர்த்து
முத்தங்கள் வைக்கையில்
மூடிக்கொள்ளும் கண்களைப் போல்
மூடிவிடும் மற்றனைத்தையும்.

நொறுக்கும் வலியுடன்
ஜனித்துவிடும் உயிரினைப் போல்
பிறந்தே விடுகிறது
அவ்வாறு உயிர்த்த அப்‘படைப்பு’ !!

கருத்துகள்

கோவை நேரம் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை...நன்று..அப்படின்னு சொல்ல விரும்ப வில்லை...ஏதோ கொஞ்சம் புரியது..கொஞ்சம் புரியல...உங்கள மாதிரியே நானும் L போர்டு தான்...
Avargal Unmaigal இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நன்றாக உள்ளது உங்கள் கவிதை.வாழ்த்துக்கள்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
tremendous issues here. I?
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதை அருமை.
jayakumar இவ்வாறு கூறியுள்ளார்…
o.... scientific ka kavithaiiiiiiiii.....aanalum super ponga...therittinga inime L
board ille neenga....vaalthukkal subathra....
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
Tan Q - Kovai Neram, Avargal Unmaigal, Che.Kumar & Jayakumar !
shanmugaraj இவ்வாறு கூறியுள்ளார்…
ungal kavithai azhagu
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ungal kavithai azhagu
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ungal kavithai azhagu
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ungal kavithai azhagu
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ R.SHANMUGARAJ NAYAKKAR
Tan Q :)
ezhil இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பகிர்வு... ஒரு தாயின் சூலைப் போல் கவிதைப் பிரசவம்.... வாழ்த்துக்கள்...
cheena (சீனா) இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் சுபத்ரா - கவிதை அருமை = நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...