ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? பொதுவாக இந்தப் பாடங்கள் இணையத்தில் ஆங்கிலத்தில் தான் அதிகம் கிடைக்கின்றன. தமிழில் தேடுபவர்களுக்காக இது :-)
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் – இதில் வரும் பாடங்களில் நல்ல materials கிடைத்தால் சிரமம் பாராமல் எனக்கு subadhra23@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள்.. ப்ளீஸ்.
தமிழ் முதல் தாள்
UPSC Tamil optional syllabus
Tamil I paper
பிரிவு-A
பகுதி : 1 தமிழ் மொழி வரலாறு
முதன்மையான இந்திய மொழிக் குடும்பங்கள் - இந்திய மொழிகளுக்கிடையே பொது நிலையிலும் சிறப்பாக திராவிட மொழிகளிடையிலும் தமிழ்மொழி பெருமிடம் - திராவிட மொழிகளின் வகைப்பாடும் அவை பரவியுள்ள தன்மையும்.
சங்ககாலத் தமிழ் - இடைக்காலத் தமிழ் – பல்லவர் காலத் தமிழ் மொழி அமைப்பு மட்டும் - தமிழில் பெயர், வினை, பெயரடை, வினையடை, கால இடைநிலைகள் மற்றும் வேற்றுமை உருபுகள் ஆகியவற்றின் போக்கு பற்றிய வரலாற்று நோக்கிலான ஆய்வு.
பிறமொழிகளிலிருந்து தமிழ் கடன் பெற்ற சொற்கள், தமிழில் வழங்கும் சமூக மற்றும் வட்டாரக் கிளை மொழிகள் - பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்குமான வேறுபாடு.
பகுதி : 2 தமிழிலக்கிய வரலாறு
தொல்காபியம் - சங்க இலக்கியம் - அகம், புறம் எனும் பாகுபாடு - சங்க இலக்கியத்தின் சமயப் பொதுமைப் போக்கு - அற இலக்கியங்களின் வளர்ச்சி - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை.
பகுதி : 3
பக்தி இலக்கியம் (ஆழ்வார்களும் நாயன்மார்களும்) - ஆழ்வார் பாடல்களில் நாயக நாயகி பாவம் - சிற்றிலக்கிய வடிவங்கள் : தூது, உலா, பரணி, குறவஞ்சி.
இக்கால் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்கான சமூகக் காரணிகள் : நாவல், சிறுகதை, புதுக்கவிதை - புதுமைப் படைப்புகளின் ஆக்கத்தில் வேறுபட்ட அரசியல் கருத்தாக்கங்களின் தாக்கம்.
பிரிவு - B
பகுதி : 1 தமிழியலின் அண்மைக்கால போக்குகள் :
திறனாய்வு அணுகுமுறைகள் : சமூகவியல், உளவியல், வரலாற்றியல் மற்றும் அறிவியல் - திறனாய்வின் பயன்பாடு - பல்வகை இலக்கிய உத்திகள் : உள்ளுறை, இறைச்சி, தொன்மம், ஒட்டுருவகம், அங்கதம், மெய்ப்பாடு, படிமம், குறியீடு, இருண்மை - ஒப்பிலக்கிய கருத்தாக்கம் - ஒப்பிலக்கிய கொள்கை.
பகுதி : 2
தமிழில் நாட்டுப்புற இலக்கியங்கள் : கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் - சமூகவியல் பார்வையில் நாட்டார் வழக்காற்றியல் - மொழிபெயர்ப்பின் பயன்கள் – மொழி பெயர்க்கப்பட்டுள்ள தமிழ் இலக்கியங்கள் - தமிழ் இதழியல் வளர்ச்சி.
பகுதி : 3 தமிழர்களின் பண்பாட்டு வரலாறு
காதல், போர் பற்றிய கருத்தாக்கம் -அறக்கோட்பாடுகள் – தொல்தமிழர் தம் போரியல் அறநெறி முறைகள் - பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள், சடங்குகள், ஐந்திணைகள் காட்டும் வழிபாட்டு முறைகள் - சங்க மருவிய கால இலக்கியங்களில் புலப்படும் பண்பாட்டு மாற்றங்கள் - இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்புகள் (சமணம் மற்றும் பௌத்தம்). காலந்தோறும் கலை மற்றும் கட்டட நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சி (பல்லவர், பிற்கால சோழர்கள், நாயக்கர் காலம்). பல்வேறு அரசியல், சமூக, சமய பண்பாட்டு இயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் - இக்கால தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு மாற்றத்தில் வெகுசன ஊடகங்கள் பெறும் பங்கு.
தமிழ் இரண்டாம் தாள்
UPSC Tamil optional syllabus
Paper-II
பிரிவு - A
பகுதி 1 : முற்கால இலக்கியம்
1) குறுந்தொகை (பாடல்கள் :1-25)
2) புறநானூறு (பாடல்கள் :182-200)
3) திருக்குறள் பொருட்பால் : அரசியலும், அமைச்சியலும் (இறைமாச்சியிலிருந்து அவையஞ்சாமை வரை)
பகுதி:2 காப்பிய காலம்
1) சிலப்பதிகாரம் : மதுரை காண்டம்
2) கம்பராமயணம் : கும்பகர்ண வதைப் படலம்
பகுதி 3: பக்தி இலக்கியம்
1) திருவாசகம் : நீத்தல் விண்ணப்பம்
2) திருப்பாவை முழுவதும்
பிரிவு : B
நவீன இலக்கியம்
பகுதி :1 கவிதை
1) பாரதியார் : கண்ணன்பாட்டு
2) பாரதிதாசன் : குடும்பவிளக்கு
3) நா. காமராசன் : கறுப்பு மலர்கள்
உரைநடை
1) மு. வரதராசன் : அறமும் அரசியலும்
2) சி. என். அண்ணாதுரை : ஏ! தாழ்ந்த தமிழகமே.
பகுதி :2 புதினம், சிறுகதை மற்றும் நாடகம்
1) அகிலன் : சித்திரப்பாவை
2) ஜெயகாந்தன் : குருபீடம்
3) சோ : யாருக்கும் வெட்கமில்லை
பகுதி 3: நாட்டுபுற இலக்கியங்கள்
1) முத்துப்பட்டன் கதை - பதிப்பித்தவர் ந. வானமாமலை (மதுரை காமராஜர் பல்கலை வெளியீடு)
2) மலையருவி - பதிப்பித்தவர் கி. வா. ஜெகநாதன் (தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடு)
14 comments:
எங்கே போனீர்கள் சுபத்ரா? உங்களை ஃபேஸ்புக்கில் காணவில்லை!! பெயர் மாற்றி விட்டீர்களா என்ன?
roamingraman@gmail.com
நேரத்தை தின்று விடுகிறது என்று விலகிவிட்டீர்களா..? அல்லது புதிய கணக்கை துவங்கிவிட்டீர்களா..?(facebook)
@ Roaming Raman
படிக்க ஆரம்பித்துவிட்டதால் Facebook Account-ஐ deactivate செய்துவிட்டேன்.. ஆம் என் நேரத்தை எல்லாம் தின்று விடுகிறது :) :)
வாழ்த்துகள்...ias ஆக..
வாழ்த்துக்கள் சுபா...
வாழ்த்துக்கள் சுபா...
Thank U friends..
பெரிய படிப்பு படிச்சி பெரிய பதவிக்கு வர வாழ்த்துகள். நல்ல பதிவு. உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது.
@ Rajesh
வாழ்த்துகளுக்கு நன்றி!
ஆனா, இந்தப் பதிவுக்கும் படம் பாக்குறதுக்கும் என்ன தொடர்பு? :)
//ஆனா, இந்தப் பதிவுக்கும் படம் பாக்குறதுக்கும் என்ன தொடர்பு? :)//
டெம்ப்ளேட் கமென்ட்ன்னு ஒண்ணு இருக்கு. அதாவது, பிர்பாலா பாதிவர்கள் எல்லாமே இப்புடி சும்மா ஒரு போஸ்ட் தலைப்பை பார்த்துட்டே மையமா ஒரு கமென்ட் போடுறது. அதுக்கு ஒரு உதாரணம் இது :-)
@ Rajesh
நல்ல பாடம் :)
very interesting subjects...
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி... பாராட்டுக்கள்... சேமித்துக் கொண்டேன்...
varungaala IAS ku en vaalthukkal....
Post a Comment