There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

தமிழ் vs சமஸ்கிருதம்

Sep 27, 2012


நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை. வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா? அதைத் தான் நானும்தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
            சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று. “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன். “இதில் என்ன அதிர்ச்சிஎன்று கேட்பவர்களுக்கு – “பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம்தமிழ்மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும்?”
            நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது, Indo-European மட்டுமல்ல  மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு படுத்தப்பட்டுள்ளன என்பது. லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் எல்லாமே இந்த Indo-European மொழிக்குடும்பத்தின் கீழ் வருபவை தான்! எனவே, Tamilnadu India-வில் இருந்தாலும் Tamil, "Indo" languages-ன் கீழ் வரவில்லை! (நிற்க: வாசிக்க: பதிவின் முதல் வரி)
சரி அப்படியென்றால்தமிழ்எந்தப் பிரிவில் வருகிறதுஎன்று கேட்கிறீர்களா?



தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தில் (தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் etc.) ஒன்றாக வருகிறது.
அந்தத் திராவிட மொழிகள் ‘Proto Dravidian’ மொழிக்குடும்பத்தின் கீழ் வருகின்றன. ‘திராவிடக்கு முன் ஏன் இந்த ‘Proto’ என்றால் திராவிட மொழிகளில் காணப்படும் ஒற்றுமைகள் தான். இந்த எல்லா மொழிகளுக்கும் முன்னர் ஏதோ ஒரு மொழி வழங்கி வந்ததாகவும் இவை அதிலிருந்து பி(தி)ரிந்து வந்தவையாகவும் ஒரு hypothesis(அனுமானம்). இந்த Proto-Dravidian-க்கும் மேலே “Nostratic” அதுக்கும் மேலே “Proto-Nostratic” என மேலும் பல கொத்துப்புரோட்டாக்கள் இருப்பதை விக்கிப்பீடியா மிக அழகாக, தெளிவாக, விளக்கெண்ணெய் வைத்து விளக்காத குறையாக விளக்கினாலும் ...(உங்களுக்கு விளங்கலாம்). வெறும்தமிழ்மொழியை, அதுவும் இதுவரை இருந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வைத்த செய்திகளைக் கொண்டு தொடர்ந்து ஆராயவே நமக்கு எனக்கு வாழ்நாள் போதாது. இதில் Proto-Nostratic எல்லாம் abnormal மூளை உள்ளவர்களால் மட்டுமே ஆராய்ச்சி செய்ய முடியும் :-)
            உலகின் மிகப் பழமையான மொழிகள் எனக் கருதப்படுபவை தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தின் மற்றும் ஹீப்ரூ. “ஒரே நாட்டில் இரு வேறு பழமையான மொழிகள் (தமிழ் & சமஸ்கிருதம்)  உருவாகியனவா?” என்ற கேள்விக்கு இன்னும் சரியாக விடை தெரியவில்லை. சமஸ்கிருதம், தமிழ் இரண்டும் முற்றிலும் வேறான வேர்களைக் கொண்டவை என்றே உலக அறிஞர்களால் பேசப்பட்டு வருகிறது.  சமஸ்கிருதத்துக்கும் ஈரானிய மொழிகளுக்கும் (பெர்சிய மொழிக்கும்) உள்ள நெருங்கிய தொடர்புகளை வைத்து அதனை Proto-Indo-European (PIE) குடும்பத்தின் கீழ் வகைபடுத்துகின்றனர். Baltic, Slavic, Uralic போன்ற PIE குடும்ப மொழிகளுடன் சமஸ்கிருதத்துக்கு இருக்கும் சொற்கள் பரிமாற்றமும் தாவரங்கள்/விலங்குகளின் பெயர் ஒற்றுமைகளைக் கொண்ட சொல்லகராதிகள் ஒன்றாக இருப்பதுவும் தான் காரணம்.
            ஆனால், உதாரணத்திற்கு சமஸ்கிருதம் அல்லது அதிலிருந்து வந்த ஹிந்தி மொழியை எடுத்துக்கொண்டால்क़ + = என்று தமிழின்க் + = போலவே வரிசையாக எழுதப்படுவதைக் காணலாம். இத்தருணத்தில் நமக்கு, ஆங்கிலத்தில் இதைப்போல் உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் கலந்து உயிர்மெய் எழுத்துகள் உருவாவதில்லை என்பது நினைவிற்கு வரவேண்டும். மேலும்என்னும் எழுத்துக்கும்என்னும் எழுத்துக்கும் உள்ள உருவ ஒற்றுமை! இவற்றையெல்லாம் பார்க்கையில் சமஸ்கிருதத்தின் சொல்லகராதி PIE மொழிகளைப் போலவும் எழுத்துகள் எழுதும் முறை தமிழைப் போலவும் இருப்பது நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
            முதலில் தோன்றியது தமிழா? சமஸ்கிருதமா? என்ற வாதம் காலந்தொட்டு நிகழ்ந்துவரும் ஒன்று. அந்த வரிசையில் ஒரு முக்கியமான(?) சர்ச்சைக்குரிய புத்தகம்சமீபத்தில் வெளிவந்துள்ள “Mirror of Tamil and Sanskrit”. இதை எழுதியுள்ளவர் Dr. R. நாகசாமி, தமிழக அரசின் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர். உலகத் தமிழறிஞர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் புத்தகம் இது. காரணம் இலக்கணம், இலக்கியம், அறம் போன்ற அனைத்தையும் சமஸ்கிருதத்திடமிருந்து தான் தமிழ் பெற்றுள்ளது எனக்கூறும் இவர்எழுத்து முறைகூட தமிழுக்குச் சொந்தமாக இருக்கவில்லை; பிற்காலத்தில் சமஸ்கிருதமாகத் திரிந்த பிராகிருதத்தில் இருந்து தான் தமிழ் எழுத்து முறை உருவானது எனவும் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் இவர்.
            அதுமட்டுமா? தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் இருந்து திருடப்பட்ட () சமஸ்கிருதத்தைத் தழுவி இயற்றப்பட்டவையே எனச் சொல்கிறார். இவ்வாறு தமிழைச் செம்மொழியாக வளர்த்தது சமஸ்கிருதமே என்கிறார் :-)
            கூகிளில் சுமார் நூற்றுக்கும் மேலான ஆங்கில/தமிழ் மூலங்களைத் தேடிப்படித்த போது பல்வேறு விடயங்கள், ஆதாரங்கள், ஆதங்கங்கள் காணப்பட்டன. எல்லாவற்றையும் தொகுத்துக் குறிப்பெடுக்கும் ஆவலில் தான் இக்கட்டுரையைத் தொடங்கினேன். ஒரே பதிவில் எழுதினால் நன்றாக இருக்காது என்பதால் பிரித்துப் பிரித்து எழுத நினைக்கிறேன். படிப்பவர்கள் தங்களது ஆதாரப் பூர்வமான வாதங்களைக் கருத்துப்பெட்டியில் முன்வைக்கலாம்.
            கல்லூரிக் காலங்களில் தமிழ் இருக்கும்போது சமஸ்கிருதத்தைப் பாடமாக எடுக்க மனம் வரவில்லை. ஆனால் பகவத் கீதையை அட்சரம் பிறழாத சமஸ்கிருதத்தில் மற்றவர்கள் படிப்பதைக் கண்டு ஆர்வம் கொண்டு சிறிது தாமதமாகத் தனியாக சமஸ்கிருதத்தைப் படிக்கத் தொடங்கினேன். பல வார்த்தைகள் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டவளிடம்சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் உருவானதுஎன்று மெல்லிய குரலில் கூறினார் என் ஆசிரியர். உடனே ஓடிச்சென்று தமிழாசிரியரிடம் கேட்டபோதுயார் சொன்னது? தமிழ் தான் முதலில் தோன்றியதுஎனறு கூறிப் புன்னகைத்தார் அவர்! அப்பம் ஆரம்பிச்சி.. இப்பம் தொடருது.
            குறிப்பு: இவ்வாராய்ச்சியும் இங்கே கூறப்பட்டுள்ள கருத்துகளும் முழுக்க முழுக்க எனது ஆர்வத்தால் எழுதப்பட்ட எனது சொந்த கருத்துகளே.

30 comments:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விளக்கமான கருத்துக்களுக்கு நன்றிங்க... அறிந்து கொண்டேன்...

Rathnavel Natarajan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எனது அருமை மகளின் அருமையான பதிவு. மொழி வெறி உள்ளவர்கள் தமது மொழியையும் கற்பதில்லை, தமது மொழியின் பெருமையை அறிய மற்ற மொழிகளும் கற்பதில்லை. தமிழ் நன்கு படிக்க ஆரம்பிப்பவர்கள் சமஸ்கிருதமும் கற்கிறார்கள். இங்கு சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தான் நமது மொழியை பேசி, வளர்க்கிறார்கள்; வளர்கிறார்கள். வாழ்த்துகள்.

R.Puratchimani said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல பதிவு,
சமஸ்கிருதம் என்றாலே செம்மைபடுத்தப் பட்ட மொழி என்று பொருளாம். ஆகா சமஸ்கிருதம் எனபது இன்னொரு மொழியிலிருந்து செம்மைப்படுத்தப்பட்டது என்ற பொருளை தருகிறது. அது தமிழாக இருக்கலாம் என்று சிலர் சொல்ல நான் கேள்விபட்டேன்.

இந்த உண்மை யாருக்கு தெரியும் என்றால் தமிழை அகத்தியனுக்கும் , சமஸ்கிருதத்தை பாநிநிக்கும் தந்த, ஆபிரகாமிய மதங்களாலும், இந்து மதத்தாலும் ஈசன் என்று கூறப்படும் ஏக இறைவனுக்கு மட்டுமே தெரியும் :)

Avargal Unmaigal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சொந்தகருத்துக்களாக இருந்தாலும் சிந்திக்க வைக்கும் நல்ல கருத்துகளே...வாழ்த்துக்கள் தொடருங்கள்

சார்வாகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வணக்கம் சகோ,
நல்ல பதிவு. இப்பதிவில் தொடங்கி இன்னும் நிறைய விவரம் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
http://www.ancientscripts.com/sa_ws.html
எழுத்துமுறை பற்றி சொல்லவேண்டும் எனில் பிராஹி எழுத்துமுறையில் இருந்தே தமிழ்[பொ.ஆ 600],தேவநாகரி[பொ.ஆ 1000] உருவாகின. இரண்டுமே இதற்கு முன் தமிழ் கிரந்தத்திலும் எழுதப்பட்டும் வந்துள்ளன.
நான் கொடுத்த சுட்டி குறித்தும் உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
தொடர்கிறேன். நன்றி!!!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிகச்சிறந்த தொடக்கம்...மேலும் நுட்பமான ஆழமான கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதோ நானும் எனக்குத் தெரிந்த விவரங்களுடன் வருகிறேன்

ஜீவன்பென்னி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்லா ஆராய்ச்சி ... அடுத்தடுத்த பதிவுகளுக்கு காத்திருக்கின்றேன்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//மேலும் “क” என்னும் எழுத்துக்கும் “க” என்னும் எழுத்துக்கும் உள்ள உருவ ஒற்றுமை! இவற்றையெல்லாம் பார்க்கையில் சமஸ்கிருதத்தின் சொல்லகராதி PIE மொழிகளைப் போலவும் எழுத்துகள் எழுதும் முறை தமிழைப் போலவும் இருப்பது நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. //

மொழியையும் எழுத்துக்களையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். மொழி ஒலி மற்றும் அதை உச்சரிப்பதற்கான விதிமுறைகள் (இலக்கணம்) கொண்டது. தமிழ், சாங்கிருதம் இரண்டையும் ரோமன் எழுத்தை (லிபி) வைத்தும் கூட எழுதிக் கொள்ள முடியும். Do not confuse language with script. Many languages have switched their native scripts in history. Eg. Malay language dropped its native script and adopted English/Roman scrit in 20th century.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ திண்டுக்கல் தனபாலன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ ரத்னவேல் நடராஜன்

அழகாகச் சொன்னீர்கள் அப்பா :))

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ R.Puratchimani

நானும் அவ்வாறு படித்திருக்கிறேன்.

/இந்த உண்மை யாருக்கு தெரியும் என்றால் தமிழை அகத்தியனுக்கும் , சமஸ்கிருதத்தை பாநிநிக்கும் தந்த, ஆபிரகாமிய மதங்களாலும், இந்து மதத்தாலும் ஈசன் என்று கூறப்படும் ஏக இறைவனுக்கு மட்டுமே தெரியும் :)/

ரசித்தேன் :))

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Avargal Unmaigal

தங்களது ஊக்கத்திற்கும் கருத்துக்கும் நன்றி!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ சார்வாகன்

நல்ல தகவல். எழுத்துமுறைகளைப் பற்றியும் தொல்பொருள்கள் குறிப்புகள் பற்றியும் தனியாகப் பார்க்கலாம் :)

மிக்க நன்றி!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்

வெல்கம் :) நன்றி..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ ஜீவன்பென்னி

நன்றி ஷமீர் :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//மொழியையும் எழுத்துக்களையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். மொழி ஒலி மற்றும் அதை உச்சரிப்பதற்கான விதிமுறைகள் (இலக்கணம்) கொண்டது. தமிழ், சாங்கிருதம் இரண்டையும் ரோமன் எழுத்தை (லிபி) வைத்தும் கூட எழுதிக் கொள்ள முடியும். Do not confuse language with script. Many languages have switched their native scripts in history. Eg. Malay language dropped its native script and adopted English/Roman scrit in 20th century.//

Its true that “Script” and “Language” are entirely different things. Here I am just wondering at the “connection” between the origin of Tamil and origin of Sanskrit as two individual languages..

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மனிதன் குரங்குகளில் ஒரு வகையாக இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த வுடன் மொழி தோன்றவில்லை கண்டங்கள் நகர்ந்து மனிதன் பிறிந்தபின்தான் தான் காணும் பொருட்களுக்கு வெவ்வேறு ஒலிக்குறியீடுகளாக புரிந்து கொள்ள தொடங்கிய போதுதான் மொழி தோன்றுகிறது வேர்ச்சொல் அடிப்படையில் மட்டுமே வேற்றுமை ஒற்றுமைகளை பார்க்க வேண்டும் அல்லாமல் எழுத்துக்களை கொண்டு ஆராய்ச்சி செய்யக்கூடாது ஏனெனில் எழுத்துக்கள் மேதாவிகளால் பின்னாளில் சீரமைக்கப்பட்டவை ஆகும் எடுத்துக்காட்டாக இநதி மொழிச்சொற்களை எழுத்துக்களை மாற்றி உருது மொழி உற்பத்தி செய்யப்பட்டது அல்லவா ஆகவே தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் எது பழையது என்பதைவிட இரண்டும் வேறு வேறு என்ற உண்மையை மறைக்க முயற்சி செய்வது தவறு மேலும் தமிழ் இயல்பாக தோன்றியது ஆனால் சமஸ்கிருதம் அறிஞர்களால் சமைக்கப்பட்டது அதனால்தான் பேச்சு வழக்கு இல்லை மேலும் தமிழை தாயாகக்கொண்ட மொழிகளில் சொற்றொடரில் சொற்கள் எழுவாய் பயநிலை செயப்படுபொருள் என்ற வரிசையில் இருக்கும் ஆனால் ஆரியமொழிகளில் எழுவாய் செயப்படுபொருள் பயநிலை என்ற வரிசையில் இருக்கும் ராமன் ராவணணைக் கொனறான் இது தமிழ் ராம் மாரா ராவணம் இது வடமொழி ஆகவே பத்து குவளையில் பாலும் காபியும் வெவ்வேறு விகிதத்தில் கலந்தால் எப்படி வேறு வேறு நிறம் கிடைக்குமோ அதுபோல் தென்னிந்திய மொழிகளில் தமிழ் தூக்கல வடஇந்திய மொழிகளில் வடமொழி தூக்கல் தமிழ் வடமொழியிலிருந்து வந்தது என்பது பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி ஆகும்

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@venkat tamilchanton

கருத்துக்கு நன்றி. சரியாகச் சொன்னீர்கள். தாங்கள் கீழ்க்காணும் இந்தப் பதிவையும் படிக்க வேண்டுகிறேன். நன்றி!

http://subadhraspeaks.blogspot.in/2013/06/is-tamil-100000-years-old.html

Arjun Sridhar UR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தமிழில் இருந்து தான் மற்ற மொழிகள் பிறந்தன. எப்படி மலேசியாவில் ஆங்கில வட்டேழுத்துக்களை சேர்த்துக்கொள்ள பட்டதொ. அதேபோல் நாம் தமிழர்கள் பிரித்து சென்றபின் உருவான மொழியே சமஸ்கிருதம், ஹிந்தி எல்லாம். சீன மோழியின் வட்டேழுத்துகள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டவை தங்கள் எதிரி புரியாத வண்ணம் இருக்கும், to encode the language sound in traditional Chinese script has many forms. same sound same meaning identified by different letters like wise the malay adopts took english script. but sanskrit are created not born. the original genetically born is tamil. genealogy of other language is tamil.
By
Arjun Sridhar UR
http://arjunsridharur.blogspot.com

Peal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Nagasamy is not a learned Tamil or Sanskrit. He don't know anything about the Tamil as well samskrutham. The language order goes like this Tamil -->Prakirutham
From Pirakirutham the people who migrated from Central Asia and Southern Part of today's Russia formed a new language by mixing Pirakirutuham and Persian. In rig veda you can see a lot of Tamil words. The grammar of Sanskrit is the grammar of Russian. He one of the highly idiotic to get a job extension or to please amma, he has wrote this with the help of "The Hindu" news paper group.

கானகம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நமக்கு இரு தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்தவர்களில் யாருக்கும் இந்த சந்தேகம் எழுந்ததில்லை, வெறுப்பைக் கக்கியதில்லை. தமிழும், சங்கதமும் இரு கண்கள் என்றே போற்றி வந்தனர். நேற்றைய மழையில் முளைத்த தீராவிட ”தமிழ்க்காளான்கள்” தங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக வெறுப்பை ஊட்டிக்கொண்டிருக்கின்றனர். நல்லன எங்கிருந்தாலும் எடுத்துக்கொண்டு நகர்வதே சிறப்பு. எது முன்னால், எது பின்னால், எது தாய்மொழி, எது தந்தை மொழி என்ற ஆராய்ச்சியாளர்கள் செய்யட்டும்.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உலகின் முதல் தோற்றம் நீரில் இருந்து துவங்கிறது.வேதம் என்பது உலகின் பிரபஞ்ச ஒலியிலிருந்து இறைவனின் வாய்மொழி சொல்லாக இயற்கையை ஆய்வு செய்து ரிஷிகள் மொழியாக வெளியிட்டனர்.அன்றைய ஆன்மீகமெய்ஞான கூற்றுக்களை இன்றைய விஞ்ஞானம் ஆராய்ச்சியில் ஒத்துக்கொள்கிறது. உதாரணம் ஓம் எனும் பிரணவ ஒலி அண்ட சராசரங்ளின் ஒலிக்கும் சொல் வ்+உ+ம்=ஓம். ரிஷிகள் கூறிய வேதங்கள் சமஸ்கிருத மொழி..உதாரணமாக க என்ற தமிழ் எழுத்து பிரிவு சொல் கிடையாது..க என்ற சமஸ்கிருத எழுத்தில் ka,kha,ga,gha உதாரணமாக க வை மென்மையான பதத்தில் உச்சரிக்ககூடிய தனித்தன்மை சமஸ்கிருதத்தில் உள்ளது.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அய்யா, க பிரிவால், நமது உயிர்மெய் சேர்க்கை இன்னும் அதிகமாவே பொருள் தருகிறது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். ஆனால் ஆரிய பாஷையில் இப்படி உச்சரித்தால் மட்டுமே உருப்படியான பொருள் தரும்,இல்லாவிட்டால் திருப்பதியில் மொட்டை மாமாவைத் தேடிய கதைதான்.இரண்டும் வேறுபட்ட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒன்று வடக்கில் அதாவது குதிரைகள் பிறந்த ஊரான வோல்கா நதி பிரதேசத்தைச் சேர்ந்தது மற்றது தெற்கே குமரி கண்டம், அல்லது இலெமூரியாவை சேர்ந்தது.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இவையெல்லாம் காலம் கடந்த விஷயங்கள்,நமது தாய், தந்தை பரம்பறை கூட ஏதாவது ஒரு காலத்தில் மாரியிருக்ககூடும்....இன்று இது நமது தேசத்தின் மொழிகள்....

விஸ்வா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மீதி எங்கே அக்கா??

Vengi123 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் உங்களது பதிவு எனக்கு புலப்பட்டிருக்கிறது.
நனி மகிழ்ச்சி 😊

well-wisher said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@venkat tamilchanton
மற்ற மொழிகளைப் பற்றித் தெரியாவிட்டால் மௌனமாக இருங்கள். பிதற்றாதீர்கள்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சமஸ்கிருத மொழி தமிழமொழிக்கு முன்னதாக இருந்தால் கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா? என் சாரநாத் கல்த்தூணில் தமிழ் பயன் படுத்தப்பட்டது போல் சமஸ்கிருதம் பொறிக்கப்படவில்லை.

Un known said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அயோக்கிய சாமி...
நாக சாமி அல்ல...