முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழந்திராவிடம் (Proto-Dravidian)



டாக்டர் மு..வை அனைவரும் அறிவோம். மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதச்சொல்லி சாகித்ய அகாதமி இவரைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க அருமையான ஒரு படைப்பை உலகிற்கு வழங்கியுள்ளார். அவரது உரைவழி தமிழ்மொழியின் வரலாற்றை நாம் பார்க்கலாம்

தேடுக: Khyber Pass & Bolan Pass
 தமிழ் vs சமஸ்கிருதம் பதிவில் Proto-Dravidian பற்றிப் பார்த்தோம். தமிழில் அதுபழந்திராவிடம்எனப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த மொழி பேசப்பட்டு வந்தது. பின்னர் வடகிழக்குக் கணவாய் (Khyber Pass) வழியாகத் துரானியரும் (Turanians) வடமேற்குக் கணவாய் (Bolan Pass) வழியாக ஆரியரும் (Aryans) இந்தியாவுக்குள் வந்தனர். அப்போது பழந்திராவிட மொழி பல்வேறு மாறுதல்களைப் பெற்று பிராகிருதம் (Prakrit) பாலி (Pali) முதலிய மொழிகள் தோன்றின. அப்போதும் சிற்சில பகுதிகளில் பழந்திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்தன. அந்த மொழிகளைப் பேசிய மக்கள் மற்றவர்களோடு கலக்காமல் தனித்து வாழ்ந்ததால் அம்மொழிகள் திராவிட மொழிகளாகவே நின்றுவிட்டன

Dravidian Languages
 கோலமி (Kolami) பார்ஜி (Parji) நாய்கி (Naiki) கோந்தி (Gondi) கூ (Ku) குவி (Kuvi) கோண்டா (Konda) குருக் (Khurukh) பிராகூய் (Brahui) மால்டா (Malda) ஒரொவன் (Oroan) கட்லா (Gadla) முதலிய மொழிகள் இன்றும் திராவிட மொழியினத்தைச் சார்ந்தவைகளாக இருப்பதற்குக் காரணம் அதுவே. வரவர இந்த மொழிகளைப் பேசும் மக்கள் அடுத்துள்ள மொழிகளைக் கற்று மற்ற மக்களோடு ஒன்றுபட்டு வருவதால் அவர்களின் தொகை குறைந்து வருகிறது. வங்காளத்தில் ராஜ்மஹால் மலைப்புறங்களில் வாழ்வோரும், சோடா நாகபுரியில் சுற்றுப்புறத்தில் வாழ்வோரும் இன்னும் பிறரும் இதற்குச் சான்றாக இருக்கிறார்கள்

Balochistan
 பலுச்சிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் பேசப்படும் பிராகூய் (Brahui) மொழிக்கும் தமிழுக்கும் உரிய ஒற்றுமை சுவாரசியமானது. அந்த மொழியில் திராவிட மொழிக் கூறுகள் மிகுதியாக உள்ளன. ஆரியர் அந்த வழியாக வந்து இந்தியாவில் குடிபுகுந்த பிறகும், அவர்கள் பேசும் மொழி தனித்து இருந்துவந்தது. இரட் (இரண்டு), மூசிட் (மூன்று) முதலான எண்ணுப்பெயர்களும், மூவிடப்பெயர்களும் (Personal Pronouns) வாக்கிய அமைப்பும் (Syntax) மற்றும் சில இயல்புகளும் பிராகூய் மொழியில் இன்னும் தமிழைப் போலவே இருப்பது வியப்பு. 1911 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கில் (Census) அந்த மொழி திராவிட மொழிகளோடு வைத்துக் கணக்கிடப்பட்டபோது, அதைப் பேசிய மக்களின் எண்ணிக்கை 1.7 லட்சம். இப்போது சில ஆயிரம் மக்களே பிராகூய் பேசிவருகிறார்கள்.

திராவிடர்கள் வடமேற்குக் கணவாய் (Bolan Pass) முதல் வங்காளம் வரையில் பழங்காலத்தில் பரவியிருந்தார்கள் என்பதற்கும் பழந்திராவிட மொழி (Proto-Dravidian) பேசிவந்தார்கள் என்பதற்கும் இவை சான்றுகளாக உள்ளன :-)

வட இந்திய மொழிகள் பலவற்றிற்கும் தென்னிந்திய திராவிட மொழிகளுக்கும் வாக்கிய அமைப்பு முறையில் இன்று வரையில் ஒற்றுமை இருந்து வருவதற்குக் காரணம், மிகப் பழங்காலத்தில் இருந்து வந்த ஒருமைப்பாடு. வட இந்தியாவில் பிராகிருதம், பாலி முதலியவை செல்வாக்குப் பெற்ற பிறகு, பழந்திராவிடமொழி தென்னிந்தியாவின் அளவில் குறுகிவிட்டது. காலப்போக்கில் தென்னிந்தியாவிலும் ஆட்சி வேறுபாடு, மலை/ஆறுகளின் எல்லை வரையறை முதலான காரணங்களால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பழந்திராவிட மொழி நான்கு வகைகளாக வேறுபட்டது. இந்த நான்கு மொழிகளுக்குள் நெடுங்காலமாக இலக்கிய வளர்ச்சி பெற்று வளர்ந்த மொழி தமிழ்.

திராவிடம்என்னும் வார்த்தையே பிற்காலத்தில் தோன்றியது தான். அதுதமிழ்என்ற சொல்லின் திரிபே :-)

தமிழ் -> தமிள -> த்ரமிள -> த்ரமிட -> திரபிட -> திரவிட

            என்று திரிந்து அமைந்த சொல்லே அது. ஒரு காலத்தில் கன்னடத்தைக் கருநாட்டுத் தமிழ் என்றும், துளு மொழியைத் துளுநாட்டுத் தமிழ் என்றும், மலையாளத்தை மலைநாட்டுத் தமிழ் என்றும் சிலர் குறிப்பிட்டது உண்டு. ஆனால் இன்றுதிராவிடம்என்னும் சொல், அந்த மொழிகள் தனித் தனியே பிரிவதற்குமுன் இருந்த பழைய நிலையைக் குறிப்பதற்கும், வை ஓர் இனம் என்று கூறி அந்த இனத்தைக் குறிப்பதற்கும் உரிய சொல்லாகப் பயன்படுகிறது!

      சரி, மீதியை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
விளக்கம் அருமை...

அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

தொடர்கிறேன்... நன்றி...
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
விளக்கம் அருமை...

அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

தொடர்கிறேன்... நன்றி...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் அருமையான பதிவு தோழி. பல தெரிந்த விடயம் என்றாலும் கூட, தெரியாத பலருக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை. தொடருங்கள் .. :)
மாலதி இவ்வாறு கூறியுள்ளார்…
மிகச்சிறந்த அரிய படைப்பு பாராட்டுகள் பழந்திரவிடம் என்ற சொல்லாடல் கூட ஒரு விதத்தில் பிழையானதுதான் காரணம் திராவிடம் என்ற சொல்லாக்கம் பிற்காலாத்தில் தோற்றம் கொண்டதாகும் பழந்தமிழகம் என கூறலாம் பாராட்டுகள்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை. நன்றாக வந்திருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...