Read More...
பூமி - சில தகவல்கள்
Apr 16, 2013
நாம வாழுற இந்தப் பூமியைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் நிறைய விஷயங்கள் படிக்கும் போது எனக்கு ஆச்சர்யமா இருந்தது.. அதை உங்களுக்கும் சொல்லலாமேனு இந்தப் பதிவு :)
பால்வீதியில் (the
Milky Way Galaxy) நம் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் ஏறத்தாழ
100,000 மில்லியன் இருக்கின்றன.
நம் சூரியக் குடும்பத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு நட்சத்திரத்தில் இருந்து அதன் ஒளி நம்மை வந்தடையும் நேரம் – 4 வருடங்கள்.
சூரியனில் இருந்து பூமிக்கு அதன் ஒளி வந்தடையும் நேரம் – 8 நிமிடங்கள்.
நிலவில் இருந்து அதன் ஒளி நம் பூமிக்கு வந்தடையும் நேரம் எவ்வளவு தெரியுமா? ஒரே ஒரு வினாடி.
சூரியனின் வெளிப்புற வெப்பநிலை -
6000° C. அதன் உட்புறத்தின் வெப்பநிலை – 20 மில்லியன்° C.
சூரியன் பூமியை விட
300,000 மடங்கு பெரியது.
பூமியிலிருந்து 2,38,900
மைல்கள் தொலைவில் இருக்கும் நிலா, பூமியை முழுதாக ஒரு சுற்று சுற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் – 27 நாட்கள்.
யுரேனஸ் கிரகத்தைத் தவிர பூமி உட்பட மற்ற 8 கிரகங்களும் சூரியனை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகின்றன.
பூமிக்கு மத்தியில் இருக்கும் பூமத்திய ரேகையில் அளந்தால் அதன் சுற்றளவு ஏறத்தாழ 45,000
மைல்கள். துருவங்களில் சுற்றழவு 83 மைல்கள். (துருவங்கள் sharp ஆக முடிவதில்லை. ஆரஞ்சு பழத்தைப் போலத் தட்டையாக முடிகின்றன)
அதே போல் பூமத்திய ரேகையில் சூரியனின் விட்டம் (diameter)
ஏறத்தாழ 8,000 மைல்கள். துருவங்களில் 26 மைல்கள்.
உலகைச் சுற்றி வந்த முதல் கடல் பயணத்தை மேற்கொண்டவர்
Ferdinand Magellan (1519 முதல் 1522 வரை, தம் குழுவுடன்).
சூரியனைச் சுற்றி பூமி சுழலும் வேகம் என்ன தெரியுமா? வினாடிக்கு 18.5 மைல்கள்.
ஆர்டிக் பகுதியில் ஒவ்வொரு டிசம்பர் 22 ஆம் தேதியும் முழு நாளும் இரவாக இருக்கும். சூரியன் தெரியாது.
அதே ஆர்டிக் பகுதியில் ஒவ்வொரு வருடம் ஜூன் 21 ஆம் தேதியிலும் முழு நாளும் பகலாக இருக்கும். சூரியன் மறையாது (north
of Arctic - Land of the Midnight Sun).
பூமிக்குக் குறுக்காக வரையப் பட்டிருக்கும் ரேகைகள் (latitudes)
1° இடைவேளைகளைக் கொண்டிருக்கின்றன.
பூமிக்கு நீள்வாக்கில் வரையப் பட்டிருக்கும் ரேகைகள் (longitudes)
அனைத்தும் ஒரே நீளத்தில் இருப்பதால் லண்டனுக்கு அருகே இருக்கும் கிரீன்விச் நகரத்தில் Royal
Astronomical Observatory-யை வெட்டிச் செல்லும் ரேகையை முதல் மெரீடியனாகக் கணக்கிடுகிறோம் (0° Prime
Meridian).
கிழக்கு நோக்கி (பின்னர் மேற்கு நோக்கி) எண்ணிக் கொண்டே போனால் கடைசியாக 180°
Meridian, Bering Strait, Fiji, Tonga வில் வரும். அதைத் தான்
International Date Line ஆகக் கொள்கிறோம். அதற்கு அடுத்து முதல் ரேகையான 0° Prime
Meridian வந்துவிடும்.
இதில் விசேஷம் என்னவென்றால் கிரீன்விச்சை மையமாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிடும்
(Greenwich Mean Time, ie. GMT) நாம் 180°
Meridian-இக்கு முன்னால் இருக்கும் ஒரு ஊரிலிருந்து 180° Meridian-இக்கு அப்புறம் (அதாவது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி) இருக்கும் ஒரு ஊரைக் கடந்து போனால் நம் கடிகாரத்தை மிகச்சரியாக 24 மணி நேரங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரே நாளைத் திரும்ப கழிக்க வேண்டும் :)
அதே நேரம் கிழக்கிலிருந்து மேற்காக 180° மெரீடியனைக் கடந்து போனால் என்ன ஆகும் தெரியுமா? நீங்கள் கிளம்பியதில் இருந்து இடையில் ஒரு நாள் காணாமல் போய்விடும். அதாவது ஒரு நாளை வாழாமலே கழிக்க வேண்டியிருக்கும்!
இந்திய அரசு 82.5° கிழக்கை தனது நிலையான மெரீடியனாகத் தேர்ந்தெடுத்துள்ளது (GMT +
5.30 hrs).
இந்தியாவிற்கு ஒரே ஒரு Time
Zone தான். ஆனால் பரப்பளவில் பெரியதாக இருக்கும் USSR-இல் உள்ள நாடுகள் மட்டுமே மொத்தம் 11
Time Zones-ஐப் பின்பற்றுகின்றன. USA-விலும் கனடாவிலும் தலா 5 Time
Zones இருக்கின்றன!
தகவல்கள் எப்படி? மீண்டும் சந்திப்போம்..
Labels:
அறிவியல்
Posted by
சுபத்ரா
at
9:16 AM
3
comments
Subscribe to:
Posts (Atom)