முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Smileys




குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேட்குதா.. குக்கூ.. குக்கூ..

இல்ல.. ஒரு கழுதை கத்துற சத்தம் தான் நாராசமா கேட்குது :) நீ பாடுன? :P

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா :(

.. பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும்.. ம்.. மொதல்ல கழுதை சொன்னேன்ல? இங்க குரங்குனு போட்டுக்க :D

ஆஆஆ... நான் அழுவேன் :(

அதெப்படி இந்தப் பொண்ணுங்களுக்கு மட்டும் நினைச்ச மாத்துரத்துல தரதரனு கண்ணீர் அருவியா கொட்டிருது?

அதென்ன காவிரி தண்ணியா, வராம இருக்குறதுக்கு? அதுசரி.. நான் வந்தது கூடத் தெரியாம என்ன பாடிட்டு இருந்தீங்க?

நினைத்தேன் வந்தாய்.. நூறு வயது.. கேட்டேன் தந்தாய்.. ஆசை மனது ;)

என்கிட்ட கேட்டு என்ன புண்ணியம்? சீக்கிரமா எங்க வீட்டுக்கு வந்து எங்க அப்பாகிட்ட என்னைய பொண்ணு கேளுங்க :-/

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்; யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்; ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்; ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்; உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்...

பொண்ணு கேட்கச் சொன்னா, அது மட்டும் காதுல கேட்காத மாதிரி நடிக்கிறது.. மத்த எல்லாத்தையும் கேட்குறது.. எனக்கு உங்க மேல நம்பிக்கையே இல்ல :( நான் பேசாம எங்க வீட்டுல பார்க்குற பையனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. :(

பாடிப் பறந்த கிளி.. பாத மறந்ததடி பூமானே.. :(

என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா? இல்லை நானா? ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது நீயா? இல்லை நானா? X(

உன்னோடு லவ் என்று யார் சொன்னது? :P

அடப்பாவி !!!!!!! :(

நீ வேறு நான் வேறு யார் சொன்னது? ;)

என்கிட்ட பேசாதீங்க.. இனிமே நானும் உன்ககிட்ட ஒரு வார்த்தை கூட பேசுறதா இல்ல.

வார்த்தை தேவையில்லை.. வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே..
நேற்று தேவை இல்லை.. நாளை தேவையில்லை.. இன்று இந்த நொடி போதுமே! :)

போதாது..

வேறென்ன வேறென்ன வேண்டும்.. ஒரு முறை சொன்னால் போதும்.. நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே!

மத்தியானம் ஒரு மணி வெயில் தீயாக் கொளுத்துது.. இப்போ நிலா வராதுங்கறதுக்காக இப்படி அளந்து விடுறீங்களா? எனக்கு அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை..

அப்படினா, ஒரு ஜிகர்தண்டா?

இது போதும் எனக்கு.. இது போதுமே.. வேறென்ன வேணும்.. இது போதுமே :)

சொல்லிட்டாளே அவ காதல.. சொல்லும் போதே சுகம் தாளல.. இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல.. :-*

அச்சச்சோ.. படத்துக்கு டைம் ஆச்சு!

அட ஆமா.. சீக்கிரம் வா வா கிளம்பலாம்..

அப்போ ஜில்லுனு ஒரு ஜிகர்தண்டாஆஆஆஆஆஆஆஆஆ? :(

வாங்கித் தர்றேன்.. குடிச்சிகிட்டே வா :)

ஐயோ.. இந்தப் பாதை.. இப்படிப் போங்க!

சாராயத்தில் ஏது போதை.. இந்தப் புள்ள பாத்தா.. சட்டுனு தான் மாறும் பாதை தானா தன்னனானா :D

:) :D ;) :( :P :| :-/ :-O :-* :X :> B-) :-@

கருத்துகள்

பால கணேஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
ஹா... ஹா... ஹா... பாட்ல்களை வைத்து நகைச்சுவை சரவெடி கொளுத்திப் போட்டு ரசிச்சுச் சிரிக்க வெச்சுட்டீங்க சுபத்ரா. அருமை! நன்றி!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Onnum Puriyala
Solla Theriyala
Kannu Muzhiiyila
Kanda Azhagula
Aasai Kooduthae....:P
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@பால கணேஷ்

நன்றி :) சிரிப்பு வந்ததா என்ன? நான் சும்மா நிறைய பாட்டு எழுதனும்னு ஆசையில இந்தப் பதிவை எழுதினேன்..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Anonymous

:) :)
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஹா...ஹா... பாடல் வரிகளை வைத்து கலக்கிடீங்க...!!! தொடர வாழ்த்துக்கள்...
Yaathoramani.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
மிக மிக அருமை
நிச்சயம் இந்தப் பாடல்களைக் கேட்கும் போது
தங்கள் பதிவின் ஞாபகம்தான் வரும்
வாழ்த்துக்கள்
ஜீவன் சுப்பு இவ்வாறு கூறியுள்ளார்…
அட அடடா ...!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@திண்டுக்கல் தனபாலன்

நன்றி :) ஏற்கனவே இதே போன்று ஒரு பதிவை ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதிருக்கேன்..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Ramani S

மிக்க மகிழ்ச்சி :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ஜீவன்சுப்பு

என்ன ரியாக்‌ஷன் இது? நல்லாயிருக்கா.. இல்ல கடுப்பா இருக்கா :)
ஜீவன் சுப்பு இவ்வாறு கூறியுள்ளார்…
அட என்னங்க நீங்க ... நல்லாருக்குங்க.

அட அடடடா ...! ன்னு ஒரு வரி, "நான் ஈ" படத்துல ஒரு பாட்டுல வருமே , அந்த வரிகளதான் சொல்லவந்தேன் .

அட அடடடா ஓரு ட வை விட்டதினால் ஐயோடா ஆயிடுத்து .
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ஜீவன்சுப்பு

இப்போ கூட இன்னொரு ‘ட’ மிஸ்ஸிங்..

அட அட டட டா :)

நான் முதல்லயே பாடிப் பார்த்தேன். நிறைய ‘ட’ மிஸ் ஆனதால தான் கேட்டேன்..:)
ஜீவன் சுப்பு இவ்வாறு கூறியுள்ளார்…
அட அட டட டா :)...!
இப்ப ஓகேங்களா ...?

( பீ கேர்புல் ... நோ நோ ..இது எனக்கு நானே சொல்லிக்கிறேன். )
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

கதையின் கதை

... “ அ ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “ இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் ...