கயிறறுத்து ஓடிய
கன்றுகுட்டியின் கண்ணீரில்
நனைந்தது மழை.
மழைச்சுமை தாளாமல்
பழைய
இலைக்கம்மல் வடிவில்
உதிர்ந்து கிடந்தது
மரத்தின் இலை.
அரித்த தெருமணலில்
வரிகளாய் ஓடியிருந்தன
அயிரை மீன்கள்.
மீன் முள்க்கூடாக
வெந்து கொண்டிருந்தது
சதையற்ற ட்ரான்ஸ்பார்மர்.
மழை புள்ளிக்கோலமிட்ட
நீர்த் தொட்டியில்
நிரம்பி வழிந்தது பாசம்.
இம்மழைக் காட்சிகளை
மிடறுகளாய்
விழுங்கியிருந்தது
காலிக் காப்பிக் கோப்பை.

கருத்துகள்
வாழ்த்துக்கள்...
ஆ.மாரிமுத்து
மதுரை