ப்ளீஸ்.. இதைப் படிக்காதீங்க
Jan 1, 2015
2014ம் கடந்து விட்டது. 2013 முடிந்த போது தொடங்கவிருந்த புதிய ஆண்டுக்கான எதிர்பார்ப்புகள் சில இருந்தன. வழக்கம் போல Expectations = Disappointments. அதனால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி 2015ஐ எதிர்கொள்ளலாம் என்றிருக்கிறேன். இது இப்போதைய தற்காலிக மனநிலையா, மனமுதிர்ச்சியா இல்லை மனப்பிறழ்வா(?) தெரியவில்லை. பொதுவாக நடந்து முடிந்தவையைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்னும் எண்ணமே மேலோங்கியிருக்கும். இருந்தாலும் வருட முடிவில் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்று மகிழ்ந்த தருணங்களும் மிகக் குறைவே. Don’t know
what HE has in reserve for me..
I m
a perfect Gemini. அதனால் தானோ என்னவோ மிக நெருக்கமாக நான் உணரும் விஷயங்கள் எல்லாம் மிகத் தொலைவிற்கு என்னைத் தள்ளிவிடுகின்றன. எனக்காக இருப்பவை என நான் கொண்டாடும் விஷயங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் முகத்திலறைந்து எனக்குத் தனிமையைப் பரிசளிக்கின்றன.
இனப்படுகொலைகள், கொலைகள், விபத்துகள், மரண தண்டனைகள், போர் மரணங்கள், இயற்கைச் சீற்றங்கள், தற்கொலைகள், இழப்புகள், வறுமை, அநீதி என அடுக்கிக்கொண்டே போனாலும் உலகம் சுற்றுவதை ஒரு கணம் கூட நிறுத்துவதில்லை என்னும் கொடிய உண்மை தன் கோரப் பற்களைக் காட்டி அசிங்கமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது. நொடியில் மறையும் இந்த வாழ்க்கையைச் சூன்யமாகக் கருதுவதா இல்லை கிடைத்தற்கரிய பொக்கிஷமாக எண்ணி ஆர்ப்பரிப்பதா என்று தெரியவில்லை.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் எனப் பூசி மொழுகும் எண்ணம் ஒரு கட்டத்தில் சலிப்பையே தந்துவிட்டுப் போகிறது. இறை நம்பிக்கை? அந்தத் தலைப்பே வேண்டாம்.. என்னருகே நின்று “ததாத்சு” சொல்லும் இரண்டு தேவதைகளுக்கும் கொஞ்சம் ஓய்வளிக்கலாம் என்றிருக்கிறேன். இனிமேல் எதுவும் சொல்லப்போவதில்லை.
அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேசித்ததுபோல, திருநாவுக்கரசர் பாடியது போல, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று இருக்கவேண்டியது தான். வேறு வழி நஹி.
Last but not the least, If Contentment is the
secret of Happiness, how would I aim for more?
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உலகம் உங்களுக்காக சுற்றும் காலம் விரைவில் வரும். வரவேண்டும் என்ற நம்பிக்கையில் அந்த தேவதைகளை ததாத்சு சொல்லச் சொல்கிறேன் :-)
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி.. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@Ramani S
நன்றி.. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ரூபன்
நன்றி.. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@கவிப்ரியன் கலிங்கநகர்
நன்றி.. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@சீனு
Thanks Sri..:)
Super thozhi iniya puthandu vazhthukkal
@sivamahan
Thanks Muruga :)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@Vijay Periasamy
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உலகின் எங்கெங்கோ நடக்கும் படுகொலைகளைப் பார்த்துவிட்டு கேட்டுவிட்டு ஒரு சிறிய உச் கொட்டலுடன் நாம் அடுத்த வேலைகளைப் பார்க்கப் போகிறோம்... நிதர்சனம்...
@ஸ்கூல் பையன்
வருகைக்கு நன்றி
Hi Subatra! :)
***I m a perfect Gemini. ***
I am a Gemini too! But not a "perfect Gemini". I am a "sloppy Gemini" rather. We have a spectrum of Geminis it seems. At one end we got a perfect Subathra and in the other extreme we got a notorious Varun! :) Interesting or not? :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா...
வாழ்த்துக்கள் சுபா ..
"சில நேரங்களில் தேவை இல்லமால் சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டால் மட்டும் போதும் அனைத்தும் சரி ஆகிவிடும்"
வருத்தபடதா வாலிபர் சங்கம்
@வருண்
எல்லாரும் ஒரே மாதிரி இருந்தா உலகம் அழிஞ்சிறாது..? அதான் :-)
@-'பரிவை' சே.குமார்
நன்றி ஐயா. தங்களுக்கும் புத்தாண்டு சிறக்க வாழ்த்துகள்
@Siva sankar
சரிதான் சிவா. எண்ணங்களில் தான் வாழ்க்கை..
முதிர்ந்த வாசகர்களுக்கான பதிவு போல ..
@ஜீவன் சுப்பு
ஆமா அண்ணா.. முத்திருச்சு :-)
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
@-'பரிவை' சே.குமார்
Thank U
Post a Comment